அலோபதி: உங்கள் குழந்தை எழுத்துப் பிழையுடன் எழுதுகிறதா? கவலை வேண்டாம்: கற்றலில் குறைபாடாக இருக்கலாம் | நலம் | Health | tamil weekly supplements
அலோபதி: உங்கள் குழந்தை எழுத்துப் பிழையுடன் எழுதுகிறதா? கவலை வேண்டாம்: கற்றலில் குறைபாடாக இருக்கலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 அக்
2011
00:00

""படிப்பில் அதிக கவனம் செலுத்துவதே இல்லை. படித்த அனைத்தையும் உடனே மறந்து விடுகிறான். எழுதினால், பார்க்க சகிக்காது. ஏகப்பட்ட பிழைகள்... 6க்கு பதில் 9 எழுது கிறான். பெருக்குவதற்கு பதில், கூட்டுகிறான். நல்லா அறிவு இருக்கு, ஆனா திமிரு... படிப்பை தவிர, மற்ற எல்லாத்துலயும் படுசுட்டி!'' - இப்படி திட்டி தீர்க்கும் அம்மாக்கள். ""நாலு சாத்து சாத்துனா, வழிக்கு வருவான்...'' என, மீசையை முறுக்கிக் கொள்ளும் அப்பாக்கள். இவர்களுக்கு இடையே, பாவம் குழந்தைகள்.பெற்றோர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இச்செயல்கள் எல்லாம், குழந்தை வேண்டுமென்றே செய்வது அல்ல. கற்பதில் இயலாமை (ஃஞுச்ணூணடிணஞ் ஈடிண்ச் ஞடூடிtதூ) என, பெற்றோர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இக்குறை ஈஙுகுஃஉஙீஐஅ என, அழைக்கப்படுகிறது.


20 சதவீதம் குழந்தைகளுக்கு...: இந்தியாவில், 20 சதவீதம் குழந்தைகளுக்கு கற்றலில் குறைபாடு இருப்பது ஆய்வில் தெரியவந்துள் ளது.ஆனால், பல பெற்றோருக்கும், ஏன் ஆசிரியர்களுக்கும் கூட, இது ஒரு சிறிய குறைபாடு என தெரிவதில்லை. மக்கு பையன் என ஒதுக்கி விடுகின்றனர். அக்குறையை பெரிதுபடுத்தி பேசி, அவமானப்படுத்தி, மனதளவில் காயப்படுத்தி, அக்குழந்தையிடம் நிரந்தர குறையை ஏற்படுத்தி விடுகின்றனர். இதுகுறித்து முதலில், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது.


கற்றலில் குறை என்றால் என்ன? : படிப்பதிலும் எழுதுவதிலும், உச்சரிப்பிலும் மற்றும் கணிதம் போன்றவற்றை கற்பதிலும் ஏற்படும் குறைகளையே, கற்றலில் உள்ள குறைபாடு என்கிறோம். இது நோய் அல்ல; குறைபாடு தான். கற்கும் திறனில் உள்ள இயலாமைகளுக்கு, மூளை நரம்பு செயல் மாற்றங்களின் நிகழ்வே ஆகும்.குறைந்த மதிப்பெண்கள், எழுதுவதில் பிழைகள், எழுதுவதில் தாமதம், உச்சரிப்பில் பிரச்னை இருந்தால், கற்றலில் குறைபாடாக இருக்கலாம் என சந்தேகிக்க வேண்டும்.


எந்த மாதிரியான குறைகள் ஏற்படும்?: ஆங்கிலப் பாடத்தில், பெரிய மற்றும் சிறிய எழுத்துகளுக்கு இடையே குழப்பம் ஏற்படும். மேலும், ஞச்டூடூ என்பதற்கு பதிலாக, ஞீச்டூடூ என எழுதுவர். ணீதண் பதிலாக ணு என எழுதுவது, ணீஞுணஞிடிடூ என்பதற்கு பதிலாக, ணீஞுணஞிடிடூஞு என, எழுதுவது, இவர்களின் வாடிக்கை.தமிழில், மாம்பழம் என்பதை மாம்பலம் என்றும், பள்ளிக் கூடம் என்பதை பல்லிக்குடம் என்றும், கண்ணாடி என்பதை கன்னடி என்றும் எழுதுவர். சிலர், ஓ எழுத்தை தலைகீழாக எழுதுவர். படிக்கும் போது வார்த்தைகள் விட்டு விட்டு படிப்பர்; உச்சரிப்பில் தெளிவு இருக்காது. மெதுவாக படிப்பர்.


கணக்கிலும் தவறு ஏற்படும்: இக்குறை உள்ளவர்கள், கணக்கு கூட்டல், கழித்தலில் தவறு செய்வர். 39வுடன் 3 ஐ கூட்டச் சொன்னால், 3 யும் 9 யும் கூட்டி, 12 என எழுதிவிட்டு, 12 முன் 3 ஐ போட்டு, 312 என எழுதுவர். கழித்தல், பெருக்கல், வகுத்தல் என, எல்லாவற்றிலும் பிரச்னை வரும். கணக்கை பொறுத்தவரை, சிறு கவனக் குறைவால், மற்ற எல்லாம் சரியாக செய்தும், ஒரு மதிப்பெண் கூட கிடைக்காமல் போய்விடும்.இவர்களுக்கு எது வலது, எது இடது என்பதில் குழப்பம் ஏற்படும். ஆங்கில எழுத்துகளை வரிசைக் கிரமமாக சொல்லத் திணறுவர். சில குறிப்பிட்ட விஷயங்களை மறந்து விடுவர்.கற்றலில் குறைபாடு என்பது, மூளை வளர்ச்சி குறைபாடு அல்ல. இன்னும் சொல்லப் போனால், மற்றவர்களை விட, அதிக அறிவுத் திறன், சிந்தனை திறன் இருக்கும். எனவே, மூளை வளர்ச்சி குறைக்கும், இதற்கும் வித்தியாசம் உண்டு.


காரணம் என்ன?: மூளையில் உள்ள நரம்பு களின் இணைப்பில் ஏற்படும் கோளாறே, இந்த குறைபாட்டுக்கு காரணம். நரம்புகள் தகவல்களை எடுத்துச் செல்வதில் குளறுபடி ஏற்படுகிறது. பாரம்பரியம் காரணமாக, இக்குறைபாடு வருகிறது. வளரும் போது ஏற்படும் நரம்பியல் ரீதியான குறைபாடு. இக்குறைபாடு உள்ளவர்களுக்கு மூளை வளர்ச்சி இயல்பாக இருக்கும்.


எந்த வயதில் கண்டுபிடிக்கலாம்?: இக்குறைபாட்டை 6 வயதுக்கு மேல்தான் கண்டு பிடிக்க முடியும். அதாவது, 2ம் வகுப்பு படிக்கும்போது தான் இதைக் கண்டுபிடிக்கலாம். அப்போது தான், ஒரு குழந்தைக்கு எழுத்துத் திறன் முழுமையாக ஏற்படும். எனவே, எல்.கே.ஜி., யு.கே.ஜி., படிக்கும்போது, இத்தவறுகள் வந்தால் கவலைப்பட வேண்டாம். 6 வயது வரை பொறுத்திருங்கள். அதன்பின் தான் கற்றலில் குறைபாடு உறுதியாக தெரியவரும். ஆனால், 12 வயதுக்குள் இதைக் கண்டுபிடித்து சரி செய்துவிட வேண்டும்.ஒரு குழந்தையின் 12 வயது வரைதான், மூளை க்கு, வளைந்து கொடுத்து ஏற்கும் திறன் (பிளாஸ்டிசிட்டி ஆப் தி பிரெய்ன்) இருக்கும். "துறுதுறு' சுபாவத்தோடு (ஹைபர் ஆக்டிவிட்டி) கவனச் சிதறல் உள்ள குழந்தைகளில், 40 சதவீதம் பேருக்கு, கற்றலில் குறைபாடு உள்ளது. எனவே, இதுபோன்ற சுபாவம் உள்ள குழந்தைகளுக்கு, கற்றலில் குறைபாடு உள்ளதா என பரிசோதிக்க வேண்டும்.


சிகிச்சை என்ன?: கற்றலில் உள்ள குறைபாட்டை மருந்து, மாத்திரைகள் கொடுத்து குணப்படுத்த முடியாது. சிறப்பு பயிற்சி மூலமே சரி செய்ய முடியும்.நரம்பியல் மருத்துவ உளவியல் சோதனை மூலம், இதை தெரிந்து கொள்ள முடியும். இந்த சோதனையில், ஐ.க்யூ., அளவு, ஞாபக திறன், ஒரு விஷயத்தில் எந்தளவு கவனம் செலுத்த முடிகிறது, கவன சிதறல் எந்தளவு உள்ளது என சோதிக்கப்படும்.


சிறப்பு பயிற்சி முறைகள்


இக்குறையை டியூஷன் வைத்து சரி செய்ய முடியாது. சிறப்பு பயிற்சி அவசியம். அதற்கென தனி பயிற்சி வகுப்புகள் சென்னையில் உள்ளன.
* மொழியின் அடிப்படை எழுத்து வரிசைகளைக் கற்றுக் கொடுத்தல்.
* சொற்களின் உச்சரிப்பு முறைகளை கற்றுக்கொடுத்தல்
* எண்களை வரிசையாக கற்றுக்கொடுத்தல்
* கணிதத்தில் உள்ள கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றின் வழிமுறை
களைக் கற்றுத் தருதல்
* பெருக்கல் வாய்ப்பாடு கற்றுக்கொடுத்தல்
* எழுத்து- எண் வரிசை, வழிமுறை- எண்களைப் படிக்கவும் எழு த்து முறையில் எழுதவும் கற்றுக்
கொடுத்தல்
* எழுதும் முறையை கற்றுக்கொடுத்தல்.


குறையை நிறையாக்கி சாதித்தவர்கள்: அமெரிக்காவின் முதல் பணக்காரர். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் கற்றலில் குறைபாடு உள்ளவர். அவருக்கு எழுதுவதில் சிரமம் இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மை. கற்றலில் உள்ள குறையை நிறையாக்கி சாதித்து காட்டியவர். இந்த பட்டியலில் பிரபல விஞ்ஞானிகள் தாமஸ் ஆல்வா எடிசன். ஐன்ஸ்டின் ஆகியோருக்கும் இக்குறைபாடு இருந்தது. ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களை வென்ற நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் கற்றலில் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்.


அரசு சலுகைகள்: கற்றலில் குறை உள்ள குழந்தைகளுக்கு பொதுத் தேர்வில் பல்வேறு சலுகைகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக ஒரு மணி நேரம். கருத்து சரியாக உள்ள எழுத்து பிழைக்கும் மதிப்பெண். எழுத முடியாதவர்களுக்கு, அவர் சொல்ல சொல்ல மற்றவர் மூலம் எழுத அனுமதி. கணக்கு தேர்வில் கால்குலேட்டரை பயன்படுத்த அனுமதி என, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. கற்றலில் குறைபாடு உள்ளது என, மருத்துவர் சான்றளிக்க வேண்டும்.


டாக்டர் விருத்தகிரிநாதன், குழந்தைகள் நரம்பியல், உளவியல் மருத்துவ நிபுணர்
காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை, மருத்துவமனை, சென்னை.


Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X