கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 அக்
2011
00:00

கேள்வி: நான் டவுண்லோட் செய்கையில் டவுண்லோட் ஆகும் பைல் அடிக்கடி இடையே நின்றுவிடுகிறது. மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டியுள்ளது. இதற்கான காரணம் என்ன? எப்படி நிவர்த்தி செய்யலாம்?
-சி. பத்மராஜன், விருதுநகர்.
பதில்: இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உங்களுடைய இன்டர்நெட் இணைப்பு எத்தகையது, என்ன வேகம், எந்த நிறுவனத்தினுடையது என்று குறிப்பிட வில்லை. எனவே இது குறித்த பொதுவான விளக்கத்தினைத் தருகிறேன். நீங்கள் டவுண்லோட் செய்திடும் பைல் மிகப் பெரிய அளவில் இருந்து, டவுண்லோட் செய்திடும் நேரத்தில் அதிக இணைய இணைப்புகள் பயன்படுத்தப்பட்டால், நிச்சயம் இது போல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே அதிக இன்டர்நெட் பயன்பாடு இல்லாத இரவு நேரங்களில் நீங்கள் முயற்சிக்கலாம். ஒரே பைல், பல சர்வர்களில் இருப்பதாகத் தெரிந்தால், வேறு ஒரு சர்வரிலிருந்து அதனை டவுண்லோட் செய்திடலாம். டவுண்லோட் செய்திட விரும்பும் பைலின் பெயரை சர்ச் இஞ்சினில் கொடுத்து, அவை வெவ்வேறு சர்வர்களில் உள்ளனவா என்று கண்டறிந்து செயல்படலாம். இணையத்தில் பல டவுண்லோட் மேனேஜர்கள் உள்ளன. இவற்றில் ஒன்றை முதலில் டவுண்லோட் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இவற்றின் மூலம் டவுண்லோட் செய்திடு கையில், இணைய இணைப்பு நின்று, பைல் ஓரளவு டவுண்லோட் செய்யப் பட்டிருந்தாலும், மீண்டும் இணைப்பு கிடைக்கும்போது, விடுபட்டிருந்த இடத்தில் தொடங்கி பைல் டவுண்லோட் செய்யப்படும்.

கேள்வி: ஏதேனும் சாதனங்களை கம்ப்யூட்டருடன் இணைக்கும்போது ட்ரைவர் பைல் கட்டாயம் தேவை என முன்பு எழுதி இருந்தீர்கள். இவை இல்லாமலேயே சில சாதனங்கள் இணைகின்றனவே, எப்படி?
-என். சாந்தி லஷ்மண், விழுப்புரம்.
பதில்: விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் டிரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகை யான சாதனங்களுக்கான டிரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். எனவே தான் தனியே அந்த புரோகிராமினை நாம் தரத் தேவை இல்லை. அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான டிரைவர்கள் தரப்படும். அவற்றைப் பயன்படுத்தினால் மட்டுமே, அந்த சாதனங்கள் முறையாக இணைக்கப் பட்டு இயக்கப்படும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரின் இணைய இணைப்பிற்கான ஐ.பி. முகவரியை எப்படி தெரிந்து கொள்வது? ஐ.பி. முகவரி என்பது ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் தனியாக இருக்குமா?
-சி. மஞ்சுளா கணேஷ், நத்தம்.
பதில்: இணைய இணைப்பில் இருக்கையில், உங்கள் கம்ப்யூட்டர் மிகப் பெரிய நெட்வொர்க்கின் ஓர் அங்கமாக இயங்குகிறது. அது ஒரு தனிப்பட்ட முகவரி மூலம் அடையாளம் காணப் படுகிறது. இதனையே ஐ. பி. முகவரி என அழைக்கிறார்கள். இதனை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் சேவை நிறுவனம் வழங்குகிறது. இந்த முகவரி என்ன என்று அறிய, Start பட்டன் அழுத்தி அதில் Run கட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். அதில் cmd என டைப் செய்து என்டர் அழுத்தவும். உங்களுக்கு டாஸ் விண்டோ சிறியதாகக் கருப்பாகத் தெரியும். அதில் டிரைவின் பெயர் அருகே ஒரு கட்டளைப் புள்ளி துடித்துக் கொண்டிருக்கும். அந்த இடத்தில் ipconfig என டைப் செய்து என்டர் தட்டவும். உடன் உங்கள் இணைய முகவரி எண் என்ன என்று தெரிய வரும். உடன் மேலும் பல தகவல்களும் காட்டப்படும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை என் நிர்வாகியிடம் இருந்து பெற்றேன். அவர் பாரா அமைத்த ஸ்டைல் நன்றாக உள்ளது. அதனையே என் டாகுமெண்ட்டின் சில பாராக்களில் அமைக்க ஷார்ட் கட் கீ உள்ளதா?
-என். ரவீந்திரன், திருப்பூர்.
பதில்: பரவாயில்லையே. நிர்வாகியின் ஸ்டைலை பின்பற்ற ஆவலாக உள்ளீர்களே. சரி விஷயத்திற்கு வருவோம். இது மிகவும் எளிதானதே. முதலில் எந்த டெக்ஸ்ட் பாரா ஸ்டைல் தேவை எனக் கருதுகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கண்ட்ரோல் +ஷிப்ட்+ சி என அழுத்தவும். தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டில் உள்ள பார்மட்டிங் ஸ்டைல் மட்டும் காப்பி ஆகும். அடுத்து உங்கள் டெக்ஸ்ட்டில் எங்கு இந்த ஸ்டைலை ஒட்ட வேண்டுமோ, அந்த டெக்ஸ்ட்டை செலக்ட் செய்திடவும். அடுத்து கண்ட்ரோல் + ஷிப்ட் + வி அழுத்துங்கள். அப்படியே தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில் இருந்த ஸ்டைல் இங்கு ஒட்டிக் கொள்ளும்.

கேள்வி: கேப்ஸ் லாக் போன்ற கீகளை தெரியாமல் அழுத்திவிடுகையில் பீப் ஒலி வரும் வகையில் எப்படி செட் செய்வது? நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன்.
-நா.ஜெயமீனா, மதுரை.
பதில்: கேப்ஸ் லாக், ஸ்குரோல் லாக், நம்லாக் போன்ற கீகள் டாகிள் கீ என அழைக்கப்படுகின்றன. இவற்றை முதல் முறை அழுத்துகையில் இயங்கத் தொடங்கும். அடுத்த முறை அழுத்துகை யில், அதற்கான இயக்கம் நின்றுவிடும். இவற்றை அழுத்துகையில், இவை அழுத்தப்படுவதனை எச்சரிக்கை செய்திட, பீப் ஒலி கிடைக்கும் வகையில் செட் செய்திடலாம்.
இதற்கு நம் லாக் கீயினை தொடர்ந்து 5 விநாடிகள் அழுத்தவும். அப்போது டாகிள் கீ என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் இதில் பீப் ஒலி வேண்டும் என்றால், ஓகே அழுத்தி வெளியேறலாம். பின்னர், இதனை ரத்து செய்திட, இதே போல நம் லாக் கீயினை ஐந்து விநாடிகள் அழுத்த வேண்டும். மீண்டும் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் கேன்சல் டேப்பில் கிளிக் செய்து வெளியேறலாம்.

கேள்வி: புதிய லேப்டாப் ஒன்று வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். விண் 7 இயங்குகிறது. இதில் உள்ள பேட்டரி சீக்கிரம் தன் திறனை இழப்பது போல் உள்ளது. இதன் செயல்பாடு சரியா என எப்படித் தெரிந்து கொள்ளலாம்?
-டி.ரஞ்சித் குமார், சென்னை.
பதில்: லேப்டாப் கம்ப்யூட்டரில் பேட்டரி இயங்கும் விதம் அறிய, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஒரு நல்ல வசதி தரப்பட் டுள்ளது. இதனைப் பலர் அறிந்திருப் பதில்லை என்பது வியப்புக்குரியது. இந்த வசதியினைப் பயன்படுத்தி சோதனையை மேற்கொண்டால், லேப்டாப் கம்ப்யூட்டரில் மின்சக்தி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். எப்படி இந்த மின்சக்தி செலவினை ட்யூன் செய்திடலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இதனைப் பயன்படுத்த முதலில் Windows > Search Box ஆணிது எனச் செல்லவும். பின்னர் சர்ச் பாக்ஸில் “cmd” என டைப் செய்திடவும். இங்கு உங்களுக்கு கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைக்கும். இங்கு ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Run as Administrator என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து powercfg energy output \FilePath\Energy_ Report.html என டைப் செய்திடவும். இதில் FilePath என்பது, நீங்கள் உங்களுக்கு அளிக்கப்பட இருக்கும் எச்.டி.எம்.எல். ரிப்போர்ட் எங்கு சேவ் செய்யப்பட உள்ளது என்பதனைக் குறிப்பிட வேண்டிய இடமாகும். இந்த சோதனை நடத்தப்படுகையில், வேறு எந்த புரோகிராமும் இயக்கத்தில் இருக்கக் கூடாது. கிடைக்கும் ரிப்போர்ட்டில், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் எப்படி, பேட்டரியின் மின்சக்தியினைச் செலவழிக்கிறது என்பதனையும், வேறு சில பரிந்துரைகளையும் தரும்.

கேள்வி: இணைய வேகம் பற்றிய உங்கள் கட்டுரையில், ஏதோ ஏதோ நாடுகளில் உள்ள நகரங்களில் கிடைக்கும் இணைய வேகம் குறித்து தகவல் தந்துள்ளீர்கள். நம் ஊர்களின் வேகம் எப்படி என அந்த அமைப்பிடம் தகவல் உள்ளதா? அவற்றைத் தர முடியுமா?
-சி. கணேஷ் ராஜ், கோவை.
பதில்: உங்கள் கேள்வியைப் படித்தவுடன், Pando networks இணைய தளம் சென்று, நம் வாசகர்கள் குறித்தும், கம்ப்யூட்டர் மலர் குறித்தும் எழுதி, நம் ஊர்கள் இணைய இணைப்பு குறித்த தகவல் இருந்தால் அனுப்புமாறு கேட்டுக் கொண்டு மெயில் அனுப்பினேன். உடனே கர்ம சிரத்தையாக அங்கிருந்து பதில் மெயில் வந்தது. இன்னும் ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் அஞ்சல் அனுப்பச் சொல்லி வேண்டுகோளும் இருந்தது. நன்றி கூறி பதில் அனுப்பினேன். இதோ அவர்கள் தந்த தகவல். அனைத்தும் ஒரு விநாடியில் எத்தனை கிலோ பிட்ஸ் என்ற அளவில் தரப்பட்டுள்ளது. கூடுதல் வேகத்திலிருந்து குறைவான வேகம் என்ற வகையில் தருகிறேன். பெங்களூர் - 476 Kbps. சென்னை -143, ஹைதராபாத் -135, புது டில்லி - 126, புனே -120, மும்பை -118, டில்லி - 103 மற்றும் கொல்கத்தா- 74. இவை டவுண்லோட் வேகமாகும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X