அழகுக்கு அழகூட்டும் நடை பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2011
00:00

நாள்தோறும் நடைபயிற்சி செய்வதால், உடலில் தேவைக்கு அதிகமான எடை குறைகிறது. இப்பயிற்சி உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராகிறது.


* நடை பயிற்சி ஓர் சிறந்த உடற்பயிற்சி. உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது உடற்பயிற்சியும், சிறந்த உணவுப் பழக்கமுமே ஆகும். உணவுப் பழக்கத்தில் எல்லாருமே கவனம் எடுத்துக் கொள்கிறோம்; அதுபோல, உடற்பயிற்சியிலும் கவனம் எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.
* உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பரவலாக பேசப்படும் காலம். உடற்பயிற்சிக்கென்றே எல்லாவித கருவிகளுடனும் உடற்பயிற்சி மையங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் வேளையில், உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி எத்தனை முக்கியம் வாய்ந்தது என்பதை ஒவ்வொருவரும் அறிந்து, நடைமுறைபடுத்திக் கொள்வது
சிறந்தது.
* நகரத்து மக்களிடத்திலேயே இந்த உடற்பயிற்சி பழக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. 16 வயது முதல், 40 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களாக இருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, 29 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஆர்வம் உடற்பயிற்சியிலும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விளையாட்டுகளிலும் அதிகமாகியே வருகிறது.
* உடற்பயிற்சி என்பது நகரத்து மக்களிடம் ஒரு நவீன பழக்கமாக மாறி வருகிறது. நகரத்து மக்கள் பலர், உடற்பயிற்சி மையத்திற்குச் சென்று, உடற்பயிற்சியை செய்யவில்லை என்றாலும், சாதாரணமாக நேரத்தை ஒதுக்கி, நடக்கவோ அல்லது சைக்கிள் ஓட்டுவதையோ பழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர். சீனா, நெதர்லாந்து மற்றும் மேற்கத்திய நாடுகளில், அலுவலக வேலைக்குச் செல் பவர்கள் பலர் வசதியான வாகனம் இருந்தும், நடந்து செல்வதையோ அல்லது சைக்கிளில் செல்வதையோ பழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
* நடைபயிற்சி என்பது பொதுவாக தினமும் விரைவான எட்டுக்களை வைத்து, 6 கி.மீ., வரை செல்வது. நான்கு மணி நேரம் நீந்துவதும், நான்கு மணி நேரம் டென்னிஸ் விளையாடுவதும் இதற்குச் சமமானதே அல்லது 20 கி.மீ., சைக்கிள் மிதிப்பதும் இதற்கு சமமானதே!
* அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் லிப்டை பயன்படுத்தாமல், ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி இறங்குவதாலும், வீட்டைச் சுத்தப்படுத்துவதாலும், விளையாட்டு மைதானத்தில் சிறு குழந்தைகளுடன் விளையாடுவதாலும் நடைபயிற்சியின் தேவையை சற்று சமன் செய்து கொள்ளலாம்.
டூ நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு, பலமும், உடலின் வலுவும் அதிகரிக்கச் செய்கிறது. நடைபயிற்சியின் போது, உடலிலுள்ள எல்லாத் தசைத் தொகுதிகளும் இயங்குவதால், உடலுக்கு அதிகமான ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
இதனால், மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். ரத்த சுழற்சியும் உடலின் எல்லா பாகங்களுக்கும் இயக்கத்தை அதிகப்படுத்தி பின் சரியாக்குகிறது.
* நாள்தோறும் நடைபயிற்சி செய்வதால், உடலில் தேவைக்கு அதிகமான எடை குறைகிறது. இப்பயிற்சி உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராகிறது.
* நடைபயிற்சியை பழக்கப்படுத்திக் கொண்டவர்கள், அன்றாடம் செய்யும் வேலைகளை சோர்வின்றி செய்ய வழி வகுக்கிறது. முதுமை அடைந்தவர்கள் கூட, ஆரோக்கியமாக தங்களின் இயல்பான வேலைகளைச் செய்து கொள்ளும் திறமையை வளர்த்து விடுகிறது.


Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X