என்9-நோக்கியாவின் அதி நவீன சூப்பர் ஸ்மார்ட்போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2011
00:00

மொபைல் போனில் செயல்படும் அதி நவீன தொழில் நுட்பங்கள் பலவற்றைக் கொண்ட மிகச் சிறந்த போனாக, நோக்கியா தன் என்9 (N9) ஸ்மார்ட் போனை வடிவமைத்துள்ளது. மீகோ (Meego) என அழைக்கப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போனை, நோக்கியா நிறுவனம் பன்னாட்டளவில் விரைவில் அறிமுகம் செய்திட இருக்கிறது. இந்தியாவில் வரும் தீபாவளியை ஒட்டி இது வாடிக்கையாளர் களுக்குக் கிடைக்கும்.
இன்டெல் நிறுவனத்தின் துணையுடன் வடிவமைக்கப்பட்ட என்9 ஸ்மார்ட் போன் மட்டுமே, மீகோ சிஸ்டத்தில் இயங்கும் போனாகும். இதில் 16ஜிபி மற்றும் 64 ஜிபி என இருவகை போன்கள், முறையே ரூ. 31,800 மற்றும் ரூ.37,200 என விலையிட்டு கிடைக்க இருக்கின்றன.
இந்த போனில் பட்டன்கள் இருக்காது. ஒரே பகுதியாக இதன் வடிவமைப்பு இருக்கும். இதன் பேட்டரியைக் கழட்ட முடியாது. இதில் மூன்று வகை இடைமுகம் இருக்கும். ஒவ்வொன்றும் ஒருவகை செயல்பாட்டுக்கு வழி தரும். இதன் மூலம் வேகமான இணைப்பு மற்றும் செயல்வேகம் கிடைக்கும்.
இதில் 3.9 அங்குல அகலத்திலான திரை தரப்பட்டுள்ளது. இத்திரை கீறல் விழ முடியாத, வளைவான கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் புறம் பாலி கார்பனேட்டினால் தயாரிக்கப் பட்டுள்ளதால், இதன் ஆன்டென்னா இயக்கம், அழைப்புகளை ஏற்றுக் கொண்டு செயல்படும் திறன் சிறப்பாக இயங்கும் என நோக்கியா அறிவித்துள்ளது.
இதன் கேமரா 8 மெகா பிக்ஸெல் கார்ல் ஸெய்ஸ் ஆட்டோ போகஸ் சென்சார் திறன் உள்ள அகலவகை லென்ஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் விரிதன்மை அகலமாகக் கிடைப்பதனால், மிகக் குறைந்த வெளிச்சத்திலும் இதனால் சிறப்பான போட்டோக்களை எடுக்க இயலும்.
இதில் இணைக்கப்பட்டுள்ள மேப் அப்ளிகேஷன் மூலம் வாகனத்தில் செல்கையிலும், நடக்கும் போதும், குரல் வழியாகவும், மேப் வழியாகவும் வழி நடத்தப்படுவோம்.
இதில் டோல்பி டிஜிட்டல் ப்ளஸ் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஹெட்செட் போட்டுக் கேட்டாலும், சரவுண்ட் ஸ்டீரியோ சவுண்ட் கிடைக்கும். உலக அளவில் இத்தகைய தொழில் நுட்பம் கொண்ட ஒரே ஸ்மார்ட் போன் இது என்று நோக்கியா அறிவித்துள்ளது.
அண்மையில் பிரபலமாகி வரும் அண்மைக் களத் தொடர்பு Near Field Communication தொழில் நுட்பமும், அதனுடன் இணைந்து செயல்படும் வயர்லெஸ் தொழில் நுட்பமும் இதில் தரப்படுகிறது. இதனால் இந்த தொழில் நுட்ப வசதி கொண்ட இரு சாதனங்களை அருகருகே வைப்பதன் மூலம் வீடியோ, படங்கள், பைல்கள் ஆகியவற்றை இரண்டிற்கும் இடையே பரிமாறிக் கொள்ளலாம்.
இணையவழி வர்த்தகம் மேற் கொண்டுள்ள இணைய வர்த்தக தளம், ஏற்கனவே இதற்கான ஆர்டர்களைச் சென்ற ஆகஸ்ட் முதல் பெற்று வந்தது. அப்போது இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.32,368 என அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அறிவிப்பு அத்தளத்தில் இல்லை.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duraidaniel - Thoothukudi,இந்தியா
20-அக்-201100:41:08 IST Report Abuse
Duraidaniel Good News. Nokia Nokia than.
Rate this:
Share this comment
Cancel
sivakumar - chennai,இந்தியா
18-அக்-201123:47:04 IST Report Abuse
sivakumar miga sirantha computer seithikalaiyum mobile phone vibarangalaium tharuvathal migavum payanullathaga ullathu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X