"ட்ரீட் டெக்னிக்' என்றால் என்ன, கிருஷ்ணன், மதுரை
எனது வயது 65. நான்கு ஆண்டுக்கு முன் ரத்தத்தில் டிரை கிளிசரைடு 320 மி.கி., இருந்தது. இதற்காக கீணிண்ததிச் குtச்tடிண 5 மி.கி., மாத்திரை எடுத்து வருகிறேன். தற்போது டிரை கிளிசரைடு நார்மலாக உள்ளது. மாத்திரையை நிறுத்தி விடலாமா?
டிரை கிளிசரைடு என்பது ரத்தத்தில் உள்ள ஒருவகை கெட்ட கொழுப்பு. இது நார்மல் அளவாக 150 மி.கி.,க்கு கீழ் இருந்தாக வேண்டும். பொதுவாக இந்தியர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு இது அதிகமாக உள்ளது. இதற்கு ரொசுவா ஸ்டேட்டின் நல்ல மாத்திரை தான். இதுதவிர "ஊடிஞணூச்tஞு' வகை மாத்திரையும் இதை குறைக்கும் தன்மை படைத்தது. ஸ்டேட்டின் வகை மாத்திரையை உபயோகிக்க துவங்கி விட்டால், அளவை குறைக்கலாமே தவிர, அதை நிறுத்த முடியாது. நீங்கள் வாழ்நாள் முழுவதும் அதை எடுப்பது நல்லது.
உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள், ரத்தஅழுத்தத்தை எந்தளவு கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்? - எஸ். சந்திரசேகரன், பழநி
உயர் ரத்த அழுத்தம் ஒரு கொடூரமான நோய். இது உடலில் பல உள்ளுறுப்புகளை குறிப்பாக மூளை, நரம்பு, கண், இருதயம், சிறுநீரகத்தை பாதிக்கிறது. ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், வாழ்க்கை முறை மாற்றம், மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது, தினமும் நடைப்பயிற்சி, உணவில் உப்பு, எண்ணெய்யை குறைப்பது, மாத்திரைகளை வேளை தவறாமல் எடுத்துக் கொள்வது அவசியமானதாகும். இப்படி செய்து ரத்தஅழுத்த அளவை 140/90க்கு கீழ் 120/80 என்ற அளவில் வைத்துக் கொண்டாக வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நாளடைவில் ஏற்படும் கொடூர நோய்களை தடுக்க முடியும்.
இருதய நோயாளிகள் தீபாவளியன்று பலகாரங்களை எடுத்துக் கொள்ளலாமா?
-பி. ரத்தினபாண்டியன், சிவகங்கை
இருதய நோயாளிகளுக்கு வாழ்க்கை முறை மாற்றம் அடிப்படையானது. உணவில் உப்பு, எண்ணெய்யை குறைப்பது, மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது, தினமும் நடைப்பயிற்சி, வேளை தவறாமல் மருந்து எடுப்பது அத்தியாவசியமானது.
இக்கட்டுப்பாட்டை தினமும் தவறாது கடைபிடித்தால், தீபாவளி அன்று நன்றாக, அனுபவித்து தின்பண்டங்களை எடுப்பதில் தவறில்லை. இதனை "கூணூஞுச்t கூஞுஞிடணடிணுதஞு' என்பர். அதாவது 95 சதவீதம் கட்டுப்பாட்டுடன் இருந்தால், 5 சதவீதம் கட்டுப்பாட்டை தளர்த்துவதில் தவறில்லை. வாழ்க்கை வாழ்வதற்கு என்பதை மறக்க கூடாது.
- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை