கடற் படையில் பணியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2011
00:00

நமது முப்படைகளில் ஒன்றான கடற்படையின் பயிற்சி மையம் கேரளாவில் கண்ணனூர் மாவட்டத்திலுள்ள எழிமலாவில் உள்ளது. இங்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எக்சிகியூடிவ் பிரிவு லாஜிஸ்டிக்ஸ்/ஒர்க்ஸ் கேடர்/நேவல் ஆர்மமெண்ட் இன்ஸ்பெக்ஷன் கேடர் பதவிக்கு நிரந்தர பணி நிலை அதிகாரிகளுக்கான பயிற்சி துவங்க உள்ளது. திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: எக்சிகியூடிவ் பிரிவு நிரந்தர பணி நிலை அதிகாரி லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 19 1/2 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். என்.ஏ.ஐ.சி., பிரிவுக்கும் இதே வயதுத் தேவை உள்ளது. கல்விப்பிரிவுக்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியவராகவும் 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தேவைகள் என்னென்ன: லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.காம்., எம்.காம்., பி.ஏ., எம்.ஏ., (பொருளாதாரம்), பி.பி.ஏ., எம்.பி.ஏ., பி.பி.எம்., பி.சி.ஏ., எம்.சி.ஏ., பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., (ஐ.டி.,), பி.இ., பி.டெக்., மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட், ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.ஏ., ஆகிய ஏதாவது ஒரு படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
என்.ஏ.ஐ.சி., பிரிவுக்கு பி.இ., பி.டெக்., ஆகிய ஏதாவது ஒரு படிப்பை எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், எலக்ட்ரானிக்ஸ் அல்லது இயற்பியல் படிப்பில் முது நிலை பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எஜூகேஷன் பிரிவுக்கு விண்ணப்பிக்க எம்.எஸ்.சி., படிப்பை இயற்பியலில் முடித்திருக்க வேண்டும். அதே போல் எம்.எஸ்.சி., படிப்பை ஓசனோகிராபி, மெட்டியோராலஜி, அட்மாஸ்பரிக் சயின்ஸ், மொழியியல், வரலாறு ஆகியவற்றைப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மெக்கானிகல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸில் பி.இ., பிடெக்., எம்.டெக்., ஆகிய படிப்புகளை முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிகலாம். முழுமையான தகவல்களை அறிய இணையதளத்தைப் பார்க்கவும். உயரம் குறைந்த பட்சம் 157 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும்.
கண்ணாடி அணிந்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம் என்ற போதும் நிறக் குறைபாடு, மாலைக் கண் நோய் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தப் பயிற்சியில் சேர வாய்ப்பு கிடைக்கும்.
இதர விபரங்கள்: இந்தியக் கடற் படையின் எக்சிகியூடிவ் பிரிவு நிரந்தரப் பணி நிலை அதிகாரி பதவிக்கு ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தல் மற்றும் விண்ணப்பங்களை அனுப்புவது குறித்த முழு விபரங்களை அறிய இணைய தளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முக்கிய தேதிகள்:
ஆன்-லைனில் பதிவு செய்ய, விண்ணப்பிக்க இறுதி நாள் : 28.10.2011
ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் படிவங்கள் கிடைக்க இறுதி நாள் : 05.11.2011
இணையதள முகவரி : http://www.nausena&bharti.nic.in /pdf/GP2/Adv.pdf

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X