தேனா வங்கியில் சி.ஏ., படித்தவர்களுக்கான காலியிடங்கள் | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements
தேனா வங்கியில் சி.ஏ., படித்தவர்களுக்கான காலியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2011
00:00

இந்தியாவில் இயங்கும் பொதுத் துறை வங்கிகளில் தேனா வங்கியும் ஒன்று. இந்த வங்கியில் கிரெடிட் பிரிவில் சி.ஏ., படிப்பு முடித்த மேலாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள் என்னென்ன: தேனா வங்கியின் கிரெடிட் மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.10.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இவர்கள் சார்டர்டு அக்கவுண்டண்ட் (சி.ஏ.,) படிப்பை முடித்திருக்க வேண்டும். நேர்காணல் மூலமாக இந்தப் பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
இதர விபரங்கள் : இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.400/-ஐ ஏதாவது ஒரு தேனா வங்கிக் கிளையிலோ அல்லது இதர ஷெட்யூல்டு வங்கிளிலிருந்து நெப்ட் முறையிலோ இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து பெறப்பட்ட சலானின் மூலமாக செலுத்தலாம். பணம் செலுத்திய சலானின் பின்புறம் விண்ணப்பதாரரின் பெயர், தொடர்பு எண், முகவரி ஆகியவற்றைத் தவறாமல் குறிப்பிட வேண்டும்.
கட்டணத்தை செலுத்திய பின்னர் ஆன்-லைனில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைன் முறைப் பதிவு என்பதால் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான பிரத்யேகமான இ-மெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். முழுமையான விபரங்களுக்கு இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.
கட்டணம் செலுத்த, ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 25.10.2011
இணையதள முகவரி : http://www.denabank.com/

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X