சிப்பெட் நிறுவனத்தில் ஆராய்ச்சிக்கான வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2011
00:00

இந்தியாவிலுள்ள பிளாஸ்டிக் மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் உதவிகளுக்காக இயங்கி வருவதுதான் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக்ஸ் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி எனப்படும் சிப்பெட் நிறுவனமாகும்.
இதன் முதல் கிளை சென்னையில் நிறுவப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்திற்கு இந்தியா எங்கும் 15 இடங்களில் மையங்கள் உள்ளன. இவ்வளவு பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் பி.எச்.டி., ஆராய்ச்சிப் படிப்பை செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள் என்னென்ன: பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி, பாலிமர் நானோ டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ், கெமிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிகல் இன்ஜினியரிங், வுட் சயின்ஸ், என்விரான்மெண்டல் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளில் எம்.இ., அல்லது எம்.டெக்., எம்.எஸ்.சி., யில் அப்ளைடு கெமிஸ்ட்ரி அல்லது பாலிமர் கெமிஸ்ட்ரி முடித்தவர்கள் இந்த ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர தகவல்கள்: சிப்பெட் நிறுவனத்தின் ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் கரிகுலம் விடே (சி.வி.,)யுடன் விண்ணப்பத்தை இணைத்து, கல்வித் தகுதி, சிறப்பு பெற விரும்பும் பிரிவு, பணி அனுபவம் ஆகியவை குறித்து ஒரு பக்கத்திற்கு மிகாமல் ஒரு அறிக்கையையும் இணைக்க வேண்டும்.
இது தவிர இரண்டு பரிந்துரையாளர்களின் பெயர் மற்றும் முகவரியையும் குறிப்பிட வேண்டும். இந்த இணைப்புகள் அனைத்தையும், பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் Advertisement No:____ என்று குறிப்பிட வேண்டும்.
முகவரி:
Chief Manager (Technical ),
Advanced Research School for
Technology & Product Simulation
(ARSTPS), CIPET Head Office,
TVK Industrial Estate,
Guindy, CHENNAI & 600 032.
e-mail : coe@arstps.gov.in
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 31.10.2011
இணையதள முகவரி : http://cipet.gov.in/app&pd/PhD&Advt&ExtensionofDate.pdf

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X