ஒரு சின்ன பெர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2011
00:00

பயர்பாக்ஸ் பதிப்பு 7 ஐ டவுண்லோட் செய்து வைத்துள்ளேன். இன்னும் சில கூடுதல் தகவல்களை உங்களிடமிருந்து படித்த பின்னரே, இன்ஸ்டால் செய்து பார்க்க முடிவு செய்துள்ளேன். ஏனென்றால், அவசர அவசரமாக மொஸில்லா இயங்குகிறதோ என்று எனக்குச் சந்தேகமாக உள்ளது.
-என். முத்துக்குமார், கோவை.

பயர்பாக்ஸ் பதிப்பு 7 கட்டுரை இடையே, பதிப்பு 8 குறித்தும் தகவல் தந்த உங்களுக்கு பாராட்டுக்கள். எந்த ஆங்கில கம்ப்யூட்டர் இதழும் இது போல அப்டேட்டாக எங்களுக்கு நியூஸ் தருவது இல்லை.
-டி.சம்பத், சென்னை.

தமிழ்நாட்டில் எங்கு ஆகாஷ் டேப்ளட் பிசி கிடைக்கும்? ஒரு பேண்ட் சட்டை விலையில், கம்ப்யூட்டர் கிடைக்கிறது என்றால், பயன்பாடு வெகுவேகமாகப் பரவத் தொடங்கும். அரசு இதற்கு ஆதரவு கொடுத்து இன்னும் விலையைக் குறைக்க வேண்டும்.
-து. மருத நாயகம், புதுச்சேரி.

பயாஸ் செட்டிங்ஸ் திறந்து இயக்குவது குறித்த தெளிவான கட்டுரை நன்றாக உள்ளது. இன்னும் அதில் உள்ள பல்வேறு பிரிவுகளில் எப்படி மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும், அவற்றின் பயன்கள் குறித்தும் தகவல்கள் தரவும்.
-கா. டெய்சி ராணி, அவினாசி.

சி மொழி இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டுச் சக்கரத்தின் மைய ஆணி. இதனைத் தந்த டெனிஸ் ரிட்ச்சிக்கு நல்லதொரு நினைவுக் குறிப்பினைத் தந்துள்ளீர்கள். தமிழில் உள்ள இணைய தளங்களில் நீங்கள் தான் இதனைத் தந்துள்ளீர்கள். உங்கள் தொடர்ந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்களால் எங்களுக்குப் பெருமை.
-கே. தமிழ் மாறன், அட்லாண்டா.

குழந்தைகளுக்கான இணைய ஆல்பம் புக், தொடங்குவதற்குச் சற்று சிக்கலாக இருந்தாலும், பின் அதில் ஆப்ஜக்ட்களை இணைப்பது எளிதாக உள்ளது. நம் சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்லும் நினைவுக் குறிப்பாக அமைகிறது. தந்தையின் தந்தை குறித்து தெரியாது என்று கூறும் இந்த தலைமுறைக்கு, நாம் டிஜிட்டல் உலகம் மூலம் குழந்தைகளின் வாழ்நாட்களைப் பதிந்து தருவோம்.
-மா. ஊர்காவலன், திருத்தணி.

பெயிண்ட் புரோகிராமினை அடிக்கடி பயன்படுத்தினாலும், தாங்கள் கொடுத் துள்ள தகவல்கள் முன்பு படித்ததை நினைவு படுத்திப் பார்த்து கூடுதல் பயன்களைப் பெற வழி தருகிறது. இன்றைய குழந்தைகளுக்கு நாம் முதலில் இதனைக் கற்றுத் தரலாம்.
-சி.க. அன்பு தேவன், சங்கரன்கோவில்.

கேள்வி பதில் பகுதியில் செக்டிஸ்க் கட்டளையுடன் இணைத்துத் தரக் கூடிய பாரா மீட்டர்கள், மிகவும் சூப்பரான செயல்பாடுகளைத் தருகின்றன. அனைத்தையும் பயன்படுத்திப் பார்க்க இன்னும் சந்தர்ப்பம் வரவில்லை. இருந்தா லும் நன்றி.
-தண்டபாணி, மேலூர்.

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த போது வந்த பல அஞ்சல் தகவல்களில், யு.எஸ்.பியை அவர் தான் வடிவமைத்தார் என்று பலரும் எழுதினார்கள். இதனைத் தெளிவு செய்து உண்மையை விளக்கமாகத் தந்தது நீங்கள் தான். எங்கள் ஆசிரியர்கள் கூட எங்களுக்குத் தவறான தகவல்களையே தந்தனர்.
-அரு.நாகப்பன், காரைக்குடி.

பல நேரங்களில் மெமரி இடப் பற்றாக் குறை தான், கம்ப்யூட்டரை கிராஷ் செய்திட வைக்கிறது. விண்டோஸ் 8 இந்தப் பிரச்னைக்குத் தீர்வைத் தந்தால், நல்லதுதான். உங்களின் விளக்கம் நிம்மதி தருகிறது.
-கே. முருகராஜ். ராஜபாளையம்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X