கேள்வி பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2011
00:00

கேள்வி: மிகப் பெரிய ஒர்க்ஷீட் ஒன்றினைத் தயார் செய்தேன். இதில் அனைத்து பக்கங்களிலும் படுக்கை வரிசைகளில் மேலாக உள்ள லேபிள்கள் தெரியும்படி அமைக்க என்ன செய்திட வேண்டும்?
-கி.இரகுநாதன், திருப்பூர்.
பதில்:எளிதாக மேற்கொள்ளலாம். 1. ஒர்க் ஷீட்டில் எங்கேனும் கிளிக் செய்திடவும். பின் File | Page Setup எனத் தேர்ந்தெடுக்கவும்.
2. பின் அதில் உள்ள டேப்களில் Sheet என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பின் Print Titles என்ற விண்டோவில் Rows To Repeat At Top text box என்று இருப்பதில் இறுதியாகக் காணப்படும் பாக்ஸினைக் கிளிக் செய்திடவும்.
3. உடன் சிறிய நீளமான செவ்வக வடிவ பாக்ஸ் கிடைக்கும். இதில் எந்த வரிசையில் உள்ளதை டைட்டில் ஆக அனைத்து பக்கங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று சுட்டிக் காட்ட வேண்டும். பின் பிரிண்ட் கொடுத்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த வரிசையில் உள்ள லேபிள் பெயர்கள் அனைத்து பக்கங்களிலும் அச்சாகும்.

கேள்வி: ஒரே கம்ப்யூட்டரில், வழக்கமான ஹார்ட் டிஸ்க் மற்றும் சாலிட் ஸ்டேட் டிஸ்க் என இரண்டை இணைத்துப் பயன்படுத்த முடியுமா?
-ஆ. சிவக்கண்ணன், சென்னை.
பதில்: முடியும். இரண்டு ஹார்ட் டிஸ்க்குகள் இணைப்பதற்கான இடம் இருந்தால் முடியும். இதன் மூலம் கம்ப்யூட்டர் செயல்பாடு 40% அதிகரிக்கும். ஆனால், இது லேப்டாப் கம்ப்யூட்டரில் முடியாது என்று எண்ணுகிறேன். இரண்டு ஹார்ட் டிஸ்க்குகள் இணைக்கும் வகையில் இதுவரை லேப்டாப் கம்ப்யூட்டரை நான் பார்த்ததில்லை. அப்படியே இருந்தாலும், அதனை எடுத்துச் சென்று பயன் படுத்துவது சிரமமாக இருக்கும். சில லேப்டாப் கம்ப்யூட்டர்கள், அதன் டிவிடி ட்ரைவை எடுத்துவிட்டு அந்த இடத்தில், வேறு ஒரு ஹார்ட் டிஸ்க் ட்ரைவினைப் பொறுத்த இடம் கொடுக்கும். அதனைப் பயன்படுத்தலாம்.

கேள்வி: நான் கட்டாயம் விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறியாக வேண்டுமா? இது என் கவலையாக இருக்கிறது. தெளிவு படுத்தவும்.
-என். சாருலதா, தேனி.
பதில்: பொதுவாகச் சொல்வதென்றால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வது நல்லது என்றே சொல்வேன். ஆனால், பலர் அதற்கேற்ற ஹார்ட்வேர் இல்லாத போது என்ன செய்வது என்று கேட்கின்றனர். இவர்கள் விண்டோஸ் எக்ஸ்பியே பயன் படுத்தலாம். இன்னும் சிலர் விண்டோஸ் 98 பயன்படுத்தி சந்தோஷமாக செயலாற்று வதைப் பார்த்திருக்கிறேன். மைக்ரோசாப்ட் வரும் ஏப்ரல் 2014 வரை, விண்டோஸ் எக்ஸ்பிக்கு சப்போர்ட் அளிக்கும். அப்போது எக்ஸ்பி புழக்கத் திற்கு வந்து 12 ஆண்டுகள் ஆகியிருக்கும். விண்டோஸ் 98 சிஸ்டத்திற்கு மைக்ரோசாப்ட் 8 ஆண்டுகள் மட்டுமே சப்போர்ட் வழங்கியது. இதில் சப்போர்ட் என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். இந்த சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்களை மைக்ரோசாப்ட் தயாரித்து வழங்காது. குறிப்பாக பாதுகாப்பு குறித்த பிரச்னைகள் வந்தால் கண்டு கொள்ளாது. ஆனால், 2014க்குப் பின் எக்ஸ்பி சிஸ்டத்தைத் தாக்கும் வகையில் மால்வேர் புரோகிராம்கள் எழுதப்படுமா என்பதும் சந்தேகமே.
இப்போது கூட பல வகைகளில், விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட்டை மைக்ரோசாப்ட் நிறுத்திவிட்டது. விண்டோஸ் லைவ் அப்ளிகேஷன்கள், விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் மட்டுமே இயங்குகின்றன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு கூட எக்ஸ்பியில் இயங்காது. எனவே புதிய அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த திட்டமிட்டால், உங்களுடன் தொடர்புள்ளவர்கள் எக்ஸ்பி அல்லாத ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தினால், நீங்களும் மாறுவது நல்லது. உங்களுக்கு மட்டுமான செயல்பாடுகளைக் கம்ப்யூட்டரில் மேற்கொள்வதாக இருந்தால், எக்ஸ்பியிலேயே தொடரலாம்.

கேள்வி: என் ஆய்வு தொடர்பாக இணைய தளங்களைப் பார்க்கையில் அதிலுள்ள படங்களை எப்படி காப்பி செய்திடலாம். சில படங்களைக் காப்பி செய்திட முயற்சிக்கையில், இந்த வசதி தரப்படவில்லை என்று செய்தி கிடைக்கிறது.
-டி.மகேஷ் குமார், சென்னை.
பதில்: இணைய தளங்களில் பதிந்து வைத்துள்ள படங்களை டவுண்லோட் செய்து நாம் பயன்படுத்தக் கூடிய வகையில் தான் வைத்திருப்பார்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடவும். விரியும் மெனுவில் “Save Picture As....” அல்லது Save As என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உடனே வழக்கமாக My Pictures அல்லது Downloads என்ற டிரைவ் திறக்கப்பட்டு அங்கு சேவ் செய்திடவா? என்று கேட்கப்படும். வேறு டிரைவில் சேவ் செய்திடத் திட்டமிட்டால் அந்த டிரைவைத் திறந்து இதற்கென உள்ள ஒரு போல்டரில் சேவ் செய்திடலாம். போல்டர் தேவை எனில் ஒன்றை உருவாக்கலாம். டவுண்லோட் செய்திட முடியாமல் வைத்திருந்தால் கூட is facility is not enabled என்ற செய்தி கிடைக்கும். கட்டாயம் காப்பி செய்தே ஆக வேண்டும் என்றால் உங்களுக்குப் பிடித்த படத்தினைத் திரையில் தெரியுமாறு வைத்துக் கொண்டு பிரிண்ட் ஸ்கிரீன் Print Screen பட்டனை அழுத்தவும். கிளிப் போர்டுக்கு திரைக் காட்சி செல்லும். ஏதேனும் ஒரு பிக்சர்களைக் கையாளும் புரோகிராமில் (எடுத்துக்காட்டாக MS Paint) புதிய பைல் ஒன்றைத் திறந்து அதில் இதனை பேஸ்ட் செய்து பின் படத்தை மட்டும் கட் செய்து அதனை மீண்டும் புதிய பைல் ஒன்றைத் திறந்து பேஸ்ட் செய்து சேவ் செய்து கொள்ளலாம். இவ்வாறு சேவ் செய்திடு கையில் எந்த பார்மட்டில் சேவ் செய்திட வேண்டும் என்பதனையும் முடிவு செய்து அந்த பார்மட்டைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம். பொதுவாக அனைவரும் விரும்பும் படங்களில் அதனை அளிக்கும் தளத்தின் நிறுவனப் பெயர் பதித்திருப்பார்கள். இதனை எளிதாக நீக்க முடியாது. தினமலர் இணைய தளத்தின் படங்கள் அவ்வகையில் தான் உங்களுக்குக் கிடைக்கும்.

கேள்வி: பைல்களைக் காப்பி செய்வதில், டெரா காப்பி புரோகிராம் மூலமாகக் காப்பி செய்தால், பல வசதிகள் உண்டு எனப் படித்தேன். இதனைச் சற்று விளக்கமாகக் கூறவும்.
-ஆர். தேன்மொழி, சிவகங்கை.
பதில்: டெரா காப்பி (Tera Copy) மூலம் காப்பி செய்தால், வழக்கமான காப்பியாக அது இல்லாமல், நமக்குக் கூடுதலாக சில வசதிகள் கிடைக்கின்றன. இந்த புரோகிராமினை http://www.box.net/shared/ o16me8egx3 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து பயன் படுத்தலாம். இதன் பின்னர், நாம் எப்போது அந்த கம்ப்யூட்டரில் எதனைக் காப்பி செய்திட முயற்சித்தாலும், டெரா காப்பி புரோகிராம் செயல்படும். பைல் ஒன்றைக் காப்பி செய்கையில், இணைய இணைப்பு நிறுத்தம் அல்லது வேறு காரணங்களினால், காப்பி செய்வது நின்று போனால், அடுத்த முறை காப்பி செய்வது தடுக்கபட்ட இடத்தில் இருந்து தொடங்கும். பைல்களை மொத்தமாகக் காப்பி செய்திடக் கட்டளை கொடுத்தால், பைல் ஒன்றில் பிரச்னை ஏற்பட்டால், அதனை விடுத்து, அடுத்த பைலைக் காப்பி செய்திடத் தொடங்கும். எந்த பைலில் பிரச்னை இருந்தது என்றும் நமக்குக் காட்டும்.
எந்த ஒரு பைலை எடுத்து, அதன் பெயர் மீது ரைட் கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில், டெரா காப்பி புரோகிராம் இயக்கத்திற்கான ஆப்ஷன் தரப்படும். இதனுடன் வழக்கமாக விண்டோஸ் காப்பி ஆப்ஷனும் கிடைக்கும்.

கேள்வி: பராமரிப்பு பிளாஷ் ட்ரைவ் என என் நண்பர் ஒன்றை வைத்துள்ளதாகக் கூறுகிறார். இப்படி ஒரு பிளாஷ் ட்ரைவ் கிடைக்கிறதா? எங்குகிடைக்கும்?
-ஆ. இளையராஜா, கம்பம்.
பதில்: உங்கள் நண்பரிடமே கேட்டிருக் கலாமே. பராமரிப்பு (Maintenance) பிளாஷ் ட்ரைவ் என உங்கள் நண்பர் கூறுவது, கம்ப்யூட்டரைப் பராமரிக்கத் தேவையான புரோகிராம்களை ஒரு பிளாஷ் ட்ரைவில் பதிந்து வைத்துப் பயன்படுத்துவதே ஆகும். இதில் விண்டோஸ் சிஸ்டம் பூட் செய்திட பைல், தவறாக அழிக்கப்பட்ட பைல்களை மீட்டுத் தரும் ரெகுவா போன்ற புரோகிராம்கள், இன்ஸ்டால் செய்த புரோகிராம்களை நீக்கும் புரோகிராம் பைல்கள், சிகிளீனர் போன்ற பல பயன்பாட்டு பைல்கள், தமிழ் டெக்ஸ்ட் எடிட்டர்கள், எழுத்துருக்கள் என இது போன்ற கம்ப்யூட்டரில் நமக்குத் தேவையான இயக்க பைல்களைக் கொண்டிருக்கும் ப்ளாஷ் ட்ரைவ்தான் பராமரிப்பு ப்ளாஷ் ட்ரைவ். அனைவரும் இது போல ஒன்று தயாரித்து வைத்துக் கொள்வது நல்லதுதானே.

கேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்து கிறேன். இதன் ஸ்டார்ட் மெனுவில் உள்ள ஐகான்களைச் சுருக்கி அமைக்க விரும்பு கிறேன். இதற்கான வழியைக் கூறவும்.
-மா. மிருணாளினி, கோவை.
பதில்: உங்கள் டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் Start Menu என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Customize என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில், ஸ்குரோல் செய்து கீழே செல்லவும். இங்கு Use Large Icons என்று ஒரு வரி கிடைக்கும். இதன் எதிரே உள்ள செக் பாக்ஸில் கிளிக் செய்து, பின்னர் வரிசையாக ஒவ்வொரு விண்டோவிலும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி ஸ்டார்ட் மெனு வில் உள்ள ஐகான்கள் சிறியதாக, சிக்கனமாக இருக்கும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X