கோகம் பயிர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2011
00:00

கோகம் என்பது ஒரு தோட்டப்பயிராகும். கேரளத்தில் காசர்கோடு, வயநாடு ஆகிய பகுதிகளில் இது பயிராகின்றது. தமிழகத்தில் மலைப்பாங்கான பிரதேசங்களில் இதனைப் பயிரிட்டுப் பயன்பெறலாம். இதன் தாவரவியல் பெயர் கார்சினியா இண்டிகா என்பதாகும். இது குளூசியேசியா குடும்பத்தைச் சேர்ந்தது. விதைகளால் இது பெருக்கம் அடைகிறது. நட்ட விதை 22 நாட்களில் முளைவிடும். சுமார் மூன்று அல்லது நான்கு மாத நாற்றுகளைத் தோட்டங்களில் நடலாம்.
தரை மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்திற்கு குறையாத இடங்களில் இது நன்கு வளரக்கூடியதாகும். இந்தப் பயிருக்கு அதிகமான தண்ணீர் தேவை இல்லை. அவ்வப்போது நீர்ப்பாசனம் செய்யலாம். வயதான மரங்கள் அதிகமான பலன்களைத் தருகின்றன. தென்னையுடன் இதனை ஊடுபயிராக பயிரிடலாம். காபித் தோட்டங்களில் இதன் "டிர்கா' ரகம் நல்ல நிழல் தருகின்ற ஊடுபயிராக அமையும். மேலும் பாக்குத் தோட்டங்களிலும் தடைப்பயிராக இதனைப் பயிரிடலாம்.
இந்த மரத்தின் கிளைகளை அவ்வப்போது சீராக்க வேண்டும். ஒரு மரத்திற்கு ஓர் ஆண்டிற்கு பத்து கிலோ இயற்கை உரம் அல்லது மாட்டுச்சாணம் போதுமானதாகும். ஐந்து ஆண்டுகளில் சுமார் மூன்று மீட்டர் வரை இந்த மரம் வளரும். இத்தகைய பருவத்தில் நுனியை வெட்டிவிடுவது அவசியம். இந்த மரத்தை ஐந்து மீட்டருக்கும் மேல் வளரவிட்டால் அறுவடை செய்து சிரமமாகும்.
பொதுவாக, கோகம் ஜனவரியில் பூத்து மே மாதத்தில் கனியாகிறது. பச்சை நிறக்காய்கள் அடர்ந்த ரத்தச் சிவப்புக் கனிகளாக மாறுகின்றன. ஒரு பழம் 35 கிராம் முதல் 80 கிராம் வரை எடை உள்ளதாக இருக்கும். இந்தப் பழத்தின் வெளித்தோல், உள்சதை மற்றும் விதை போன்றவை பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது உணவாகவும், மருந்தாகவும் செயல்படுகிறது. சமையலில் புளி மற்றும் தக்காளிக்கு இணையாக இதனைப் பயன்படுத்தலாம்.
கோகம் தயாரிப்பான "பிருந்தா ஜுஸ்' என்ற பானம் ஒரு சுவையான மெது பானமாகும். இது எவ்வித ரசாயனக் கலப்பும் இல்லாத இயற்கையான பானமாகும். இதில் "சிட்ரஸ்' அடங்கியுள்ளதால் பித்தத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது. கோகம் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் நெய் தோல் சரீரப் பாதுகாப்பிற்குச் சிறந்தது. ஒரு ஸ்பூன் அளவில் இதனை வெந்நீரில் கலந்து அருந்தினால் வயிற்றுவலி விரைவில் குணமாகும். (தகவல்: ஸ்பைசஸ் இந்தியா, கொச்சி)
-எஸ்.நாகரத்தினம், விருதுநகர்

Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X