சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூல்பேட் ஓவர்சீஸ் நிறுவனத்துடன் இணைந்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் சி.டி.எம்.ஏ. வகை மொபைல் போன் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தில், ரிலையன்ஸ் கொண்டுள்ள வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மேலும் பல மாடல் போன்களைக் கொண்டு வர கூல்பேட் முடிவு செய்துள்ளது. டி 530 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.7,999. இதில் பலர் பயன்படுத்தும் வகையிலான வை–பி ரௌட்டர் தரப்பட்டுள்ளது. இந்த போன், ரிலையன்ஸ் வேர்ல்ட் மற்றும் ரிலையன்ஸ் மொபைல் ஸ்டோர்ஸ்களில் கிடைக்கும்.