ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது!
ஸ்லம்டாக் மில்லினியர் படத்தை தொடர்ந்து, சமீபத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த,
127 அவர்ஸ் என்ற ஹாலிவுட் படமும் ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது; ஆனால், விருது கிடைக்கவில்லை. என்ற போதும், பெல்ஜியம் நாட்டின் உலக சவுண்ட் டிராக் அகடமி, "பப்ளிக் சாய்ஸ்' என்ற விருதை, ரஹ்மானுக்கு வழங்கியுள்ளது.
— சினிமா பொன்னையா.
அமலாபால் எஸ்கேப்
தமிழில், வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனை யில் ஆகிய படங்களில் நடித்து வரும் அமலா பால், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் ஆந்திராவுக்கு போனார். இதனால், லிங்குசாமி இயக்கும் வேட்டை படம் இழுபறியில் கிடக்கிறது. பலமுறை அமலாவுக்கு அழைப்பு விடுத்தும் இதோ அதோ என்று, "டேக்கா' கொடுத்துக் கொண் டிருக்கிறார். ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி.
— எலீசா.
சினேகா ஸ்டேட்மென்ட்!
தமிழில் முரட்டுக்காளை, தெலுங்கில் ராஜன்னா ஆகிய படங்களில் நடித்து வரும் சினேகா, இப்போதும் சினிமாவில் தனக்கு மவுசு இருப்பதாகவே மார் தட்டுகிறார். மேலும், "வாய்ப்பு வேண்டும் என்பதற்காக டம்மி கதைகளில் நடிக்க மாட்டேன். ஏற்கனவே நான் நடித்த பார்த்திபன் கனவு மாதிரி, வித்தியாசமான படங்களில் மட்டுமே இனி நடிப்பேன்...' என்றும் புதிய, "ஸ்டேட்மென்ட்' விடுகிறார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்ற கதை!
— எலீசா.
ஏழாம் அறிவு படம் பார்த்த ஷாருக்கான், தனக்கு ஜோடியாக ஒரு இந்தி படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன் காரணமாக, அடுத்து ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில் நடிக்க "கமிட்' ஆகி இருந்த ஸ்ருதி, அந்த படத்திலிருந்து விலகி, இந்திக்கு சென்று விட்டார்.
இந்தியில் அருந்ததி!
அனுஷ்கா நடித்த, அருந்ததி படம் இந்தியில் ரீ-மேக் ஆகிறது. ஆனால், மீண்டும் நடிக்க அனுஷ்கா விருப்பம் தெரிவித்தும், இந்தியில் அவருக்கு, "மார்க்கெட்' இல்லாததால் மறுத்து விட்டனர். மேலும், பிரபல பாலிவுட் நடிகைகளான கரீனா கபூர், கத்ரீனா கைப் ஆகிய நடிகைகளை இப்படத்தில் நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது. அங்கு அங்கு குறுணி அளந்து கொட்டியிருக்கிறது!
— எலீசா.
சாவித்திரிக்கு சிலை!
பாசமலர் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகையர் திலகம் சாவித்திரி. இன்றைய பல நடிகைகளுக்கும் ரோல் மாடலாக இருந்து வரும் சாவித்திரிக்கு, ஆந்திர மாநிலம் குண்டூரில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை பா.ஜ.க., முன்னாள் மத்திய அமைச்சரும், தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம்ராஜு சமீபத்தில் திறந்து வைத்துள்ளார்.
— எலீசா.
சந்தானம் காட்டில் மழை!
வடிவேலுவுக்கு பிறகு சந்தானத் தின் காமெடி காட்டில் அடைமழை கொட்டி வருகிறது. முன்பெல்லாம் படத்துக்கு இவ்வளவு என்று சம்பளம் வாங்கியவர், இப்போது ஒரு நாளைக்கு, ஏழு லட்சம் ரூபாய் வாங்குகிறார். அதுவும், இவர் சொல்லும் நாளில்தான் படப்பிடிப்பு வைத்துக் கொள்ள வேண்டும். இருப்பினும், சந்தானத்தின் கால்ஷீட்டுக்காக, வரிசையில் நிற்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
— சி.பொ.,
நந்திதா தாஸ் அறிவிப்பு!
சமீப காலமாய் இந்தியாவில் குழந்தைகளை மையமாக வைத்து படங்கள் வெளியாவது குறைந்து விட்டது. அதனால், இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கத் தலைவரான நடிகை நந்திதா தாஸ் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், சிறந்த குழந்தைகள் படங்களை தேர்வு செய்து, அவற்றுக்கு பரிசு மற்றும் விருதுகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
— சினிமா பொன்னையா.
விஷால் இயக்கத்தில் விஜய்!
ஏற்கனவே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் நடிகர் விஷால். இப்போது பெரிய நடிகராகி விட்ட போதும், டைரக் ஷன் ஆசை அவரை விடவில்லை. அதனால், தற்போது விஜய்க்காக ஒரு கதை ரெடி பண்ணி வைத்திருக்கும் விஷால், அந்த கதையை விஜய்யிடம் சொல்லி, கால்ஷீட் வாங்க திட்டமிட்டுள் ளார். ஒருவேளை அவர் நடிக்க மறுத்தால், தன்னைத் தானே இயக்கி நடிக்க போவதாக கூறுகிறார்.
— சி.பொ.,
அவ்ளோதான்!