திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2011
00:00

காசிராஜனின் புதல்விகள் அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோர் அழகு, குணம், அறிவு நிரம்பிய கன்னிகைகள், அவர்களுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்தார், காசிராஜன்.
பலநாட்டு ராஜகுமாரர்கள் வந்தனர். அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்த விசித்திர வீர்யனுக்காக (சந்தானுவின் மகன்) சுயம்வரத்துக்கு வந்தார் பீஷ்மர்.
அங்கு வந்திருந்த, பல நாட்டு இளவரசன்களும், வயதான பீஷ்மரை ஏளனமாகப் பேசிச் சிரித்தனர்; அதனால், சினம் கொண்டார். அந்த ராஜகுமாரன்களோடு போரிட்டு வென்று, காசிநாதனின் மூன்று கன்னியரையும் தேரில் ஏற்றி, அஸ்தினாபுரம் திரும்பினார்.
சால்வ மன்னன் மீது, அம்பைக்கு ஆசை. அவள் பீஷ்மரிடம் சென்று, "நான் சுயம்வரத்திற்கு வந்திருந்த சால்வ மன்னனை மணக்க விரும்புகிறேன்...' என்றான். அவள் விருப்பப்படியே அவளை சால்வே மன்னனிடம் அனுப்பி வைத்தார் பீஷ்மர்.
அம்பையைக் கண்ட சால்வனோ, "பீஷ்மரால் தூக்கிச் செல்லப்பட்டு திரும்பிய உன் தூய்மையை நான் நம்புவதற்கில்லை...' எனக் கூறி, அவளை மணக்க மறுத்து விட்டான்.
அம்பை மீண்டும் அஸ்தினாபுரத்துக்கு வந்தாள். "சால்வ மன்னன் மீது உனக்கு மனதளவில் காதல். அதனால், உன்னை நானும் மணக்க முடியாது...' என, விசித்திர வீர்யனும் உறுதியாகக் கூறி விட்டான்.
அம்பை மீண்டும் சால்வனைத் தேடிப் போனாள். விரட்டப்பட்டு, பீஷ்மரிடமே திரும்பி வந்தாள்.
"தங்களால் தான் எனக்கு இத்தகைய நிலை. நீங்கள் தான் என்னை மணந்து கொள்ள வேண்டும்...' என, பீஷ்மரிடம் கேட்டாள் அம்பை.
"நான் வாழ்வில் திருமணமே செய்து கொள்வதில்லை என சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்; அதை மீற முடியாது...' எனக் கூறி, அம்பையின் வேண்டுகோளை மறுத்து விட்டார் பீஷ்மர்.
அஸ்தினாபுரத்திற்கும், சால்வ மன்னன் நாட்டிற்கும் பல முறை சென்று திரும்பிய அம்பை, பீஷ்மர் மீது மிகுந்த சினம் கொண்டாள். பீஷ்மரைக் கொல்ல வேண்டும் என தவம் மேற்கொண்டாள். அவள் தவத்தை மெச்சி பரமேஸ்வரன் அவள் முன் தோன்றி, "மறுபிறவியில் நீ பீஷ்மரைக் கொல்வாய்...' என அருளினார்.
உடனே, விரைவில் மறுபிறவி எடுக்க விரும்பி அம்பை நெருப்பினுள் குதித்தாள்.
துருபதனின் மகளாக, "சிகண்டினி'யாகப் பிறந்து, பின்பு, "சிகண்டி' (அரவாணி) ஆகி, மகாபாரதப் போரில், 10ம் நாள் யுத்தத்தில் பீஷ்மரை கொன்றாள்.
***
சுப்பிரமணிய சிவா வத்தலகுண்டில் பிறந்து, வளர்ந்தவர். ஆனாலும், அவரை அந்த ஊர்க்காரர்கள் முனீஸ்வரன் என்ற பெயராலேயே அறிவர். பெற்றோர் இவருக்கு சம்பிரதாயப்படி சுப்பராமன் என்று தான் பெயர் வைத்தனர்.
குழந்தைக்கு ஆறு மாதம். திடீரென்று ஒருநாள் மார்வலி கண்டது. இறந்து போய் விடுமோ என்று குடும்பத்தினர் கலக்கமடைந்தனர். அப்போது, குழந்தையின் பாட்டியார் நாட்டு வைத்திய முறைப்படி கஸ்தூரி மஞ்சளை சுட்டு நெற்றியில் சூடு வைத்தார். சூடு வைத்தும் குழந்தை அழவில்லை. உடனே வீட்டுக்குப் பின்புறத்தில் இருக்கும் முனீசுவரனை நோக்கி, குழந்தைக்கு உயிர்ப் பிச்சை தரும்படி வேண்டிக் கொண்டார். அந்த அம்மையார் வேண்டுதல் பலன் அளித்தது. குழந்தை வீலென்று அழ ஆரம்பித்தது. இனி, உயிருக்கு பயமில்லை என்று குடும்பத்தினர் கவலை நீங்கினர். அது முதற்கொண்டு குழந்தையை முனிஸ்வரன் என்று அழைக்கலாயினர். ஊராரும் அப்படியே அழைத்து வந்தனர். பின்னர், இவருக்கு ஒன்பதாவது வயதில் உபநயனம் நடைபெற்ற காலத்தில் சுப்பிரமணிய சர்மன் என்று பெயரிடப்பட்டது. சப்பிரமணிய சர்மன், காலப்போக்கில் சுப்பிரமணிய சிவாவானார்.
***
தமிழ்த் தென்றல் திரு.வி.க., ஒருமுறை காரைக்குடி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றத்திற்குத் தலைமை உரை நிகழ்த்த சென்ற நேரத்தில், அந்த உயர்நிலைப் பள்ளி பெண்கள் திரு.வி.க.,வை கண்டதும், "திரு.வி.க., வாழ்க... திரு.வி.க., வாழ்க!' என வாழ்த்தொலி எழுப்பி, ஆரவாரத்துடன் வரவேற்றனர். மேடையில் திரு.வி.க., பேசத் துவங்கியதும், "எனக்கு ஜோதிடன் செவ்வாய் தோஷம் உள்ளது என்றான். இத்தனை செவ்வாய்கள் என்னை வாழ்த்தும் போது, அந்த ஒரு செவ்வாய் என்னை என்ன செய்து விடும்?' என்றார்.
***

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X