சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் பணிவாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 நவ
2011
00:00

இந்தியாவில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா முக்கியமானதொரு வங்கி. இந்த வங்கிக்கு இந்தியா முழுமையும் பல்வேறு கிளைகள், நவீனமயமாக்கப்பட்ட சேவைகள் என்று பல்வேறு சிறப்புகள் உள்ளன. இந்த வங்கியில் ஐ.டி., பிரிவில் 70 மற்றும் அக்ரிகல்சர் பினான்ஸ் பிரிவில் 400 அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்: சென்ட்ரல் வங்கியின் அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிக்க கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி., யில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.சி.எஸ்., எம்.சி.ஏ., ஆகிய ஏதாவது ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அக்ரிகல்சர் பினான்ஸ் அதிகாரி பிரிவுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக அக்ரிகல்சர், ஹார்டிகல்சர், அனிமல் ஹஸ்பெண்டரி, வெர்டினரி சயின்ஸ், டெய்ரி சயின்ஸ், அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங், பிஷரி சயின்ஸ், பிஸிகல்சர், அக்ரி மார்க்கெட்டிங் அண்டு கோ-ஆபரேசன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இதர தகவல்கள்: இந்த அதிகாரிப் பணி இடங்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் அல்லது குழுவிவாதம் என்ற முறையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் சென்னை உள்ளிட்ட 13 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும். சென்ட்ரல் வங்கியின் இந்தப் பதவிகளுக்கு விண்ணபிக்க ரூ.500/-ஐ ஏதாவது ஒரு கோர் வங்கி சேவை கொண்ட சென்ட்ரல் வங்கிக் கிளையில் செலுத்த வேண்டும். இந்த விபரங்களுடன் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை அறிய இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.
கட்டணம் செலுத்த, விண்ணப்பிக்க இறுதி நாள் : 25.11.2011
இணையதள முகவரி : www.centralbankofindia.co.in/upload/Adv_Nov2011_Evening.pdf

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X