சி.பி.எஸ்.இ., பள்ளிக்கான சி.டி.இ.டி., தேர்வு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 நவ
2011
00:00

மத்திய அரசின் மனித வள அமைச்சகத்தின் சார்பாக சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆசிரியர்களைச் சேர்ப்பதற்காக சென்ட்ரல் டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்., எனப்படும் சி.டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்படுவது நாம் அறிந்ததுதான். மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கே.வி.எஸ்., என்.வி.எஸ்., திபெத்திய பள்ளிகளில் ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தேவைகள்: சி.டி.இ.டி., தேர்வுகளை ஆரம்பப் பள்ளியான ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான நடு நிலைப் பள்ளி என்று இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். இந்தப் பிரிவுகளுக்கு ஏற்றபடி கல்வித் தகுதியும் மாறுபடுகிறது.
ஆரம்பப் பள்ளி அளவில் பணியில் சேர்வதற்கு சீனியர் செகண்டரி அளவு படிப்பைக் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்து இரண்டு வருடம் படிக்கக் கூடிய டிப்ளமோ இன் எலிமெண்டரி எஜூகேஷன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இந்த ஆண்டு டீ.டி.இ., படிப்பின் இறுதித் தேர்வை எழுதுபவர்களும் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். நடு நிலைப் பள்ளி அளவில் பணியில் சேர்வதற்கு பட்டப் படிப்பை முடித்துவிட்டு டீ.டி.இ., அல்லது பி.எட்., படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்களைப் பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தைப் பார்க்கவும்.
விபரங்கள்: சி.டி.இ.டி., தேர்விற்கு விண்ணப்பிக்க டி.டி., மூலமாக ரூ.500/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோருக்கு ரூ.250/- மட்டும் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை செலுத்திய பின்னர் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தப் பதிவை வெற்றிகரமாக செய்த பின்னர் கிடைக்கும் ரெஜிஸ்ட்ரேஷன் சிலிப்பை பிரின்ட் அவுட் எடுத்து பதிவு அல்லது விரைவுத் தபால் மூலமாகப் பின் வரும் முகவரிக்கு டி.டி.,யுடன் அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்பது குறித்த முழு விபரங்களுக்கு கட்டாயம் இணைய தளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
The Assistant Secretary (CTET Unit),
Central Board of Secondary Education,
'Shiksha Sadan', 17 Rouse Avenue,
NEW DELHI & 110 002.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 30.11.2011
இணையதள முகவரி : http://ctet.nic.in/PDF/Advertisement_CTET_JAN_2012.pdf

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X