செவ்வந்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2011
00:00

பூவைப் பொறுத்தவரை ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் செவ்வந்திப் பூவுக்கு தேவை அதிகமாக இருக்கும். நல்ல விலையும் கிடைக்கும். சித்திரையில் செடி நட்டால் ஐப்பசியில் அறுவடை செய்ய முடியும்.
மஞ்சள் செவ்வந்தி, வெள்ளை செவ்வந்தி, சின்ன செவ்வந்தி (இதுவும் மஞ்சளாக இருக்கும்) மூன்று வகை உண்டு. நடவு செய்த ஏழு மாதத்தில் அறுப்புக்கு வந்துவிடும். வாரம் ஒரு தடவை வீதம் ஐந்து அல்லது ஆறு முறை பூ எடுக்கலாம். மொத்தம் எட்டு மாத சாகுபடி, ஒரு முறைக்கு 800 கிலோ கிடைக்கும். ஏக்கருக்கு கணக்குப் பார்த்தால் சராசரியாக 4000 முதல் 4500 கிலோ வரை பூ கிடைக்கும். சந்தையில் இருக்கும் பூக்களின் வரத்தைப் பொறுத்து கிலோ பத்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் வரை விலைபோகும். சராசரி மகசூல் 4000 கிலோ சராசரி விலை கிலோ 25 ரூபாய் என்று கணக்கு போட்டாலே ஒரு லட்ச ரூபாய் வரை கிடைக்கும்.
நிலத்தை நன்கு உழவு செய்து, வெங்காய பாத்திபோல அமைத்து, நாலு விரல் இடைவெளி இருப்பது போல் இரண்டு இரண்டு வேர்களாக வரிசையில் நடவேண்டும். வேர்களை நடும்போது, அடிவேர், நுனிவேர் பார்த்து ஜாக்கிரதையாக நடவேண்டும். அடிவேரைப் பார்த்து நிலத்தில் நடவேண்டும். மாற்றி நடவுசெய்தால் செடிகள் வளராது.
நாற்பதுநாள் இடைவெளியில் மொத்தம் 3 தடவை களை எடுக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு தடவை தண்ணீர் கொடுக்க வேண்டும். முதல் தடவை களை எடுப்பதற்கு 20 ஆட்களும், அடுத்தடுத்த இரண்டு களைகளுக்கு 15 ஆட்கள் வீதமும் மொத்தம் 50 ஆட்களுக்கு வேலை இருக்கும். களையெடுத்த பிறகு இரண்டு மூடை டிஏபி, இத்துடன் 100 கிலோ கடலைப் பிண்ணாக்கு கொடுக்க வேண்டும்.
பூ வெடிக்கும் சமயத்தில் செடி கீழே சாய்வதற்கு வாய்ப்பு இருக்கும். அதைத்தடுக்க, செடிகளுக்கு மண் அணைப்பதோடு, அருகில் சிறு குச்சிகளை நட்டு, அவற்றில் கயிறு மூலம் கட்டிவிடுவது அவசியம். அசுவினி, வெள்ளை ஈ இரண்டும் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கு மோனோகுரோட்டோபாஸ், செவின் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து அடிக்க வேண்டும். மழை அதிகமாக இருந்தால் செடிகள் கீழே சாய்ந்துவிடும். எல்லாவற்றையும் சமாளித்து முடித்தால் நல்ல அறுவடைதான்.
சித்திரையில் விதைப்பவர்கள் ஊடுபயிராக வெங்காயத்தையும் சேர்த்து விதைப்பார்கள். ஒரு வரிசையில் செவ்வந்தி, அடுத்த வரிசையில் வெங்காயம் என விதைப்பார்கள். 45ம் நாளில் வெங்காயம் அறுவடை ஆகிவிடும். இதன்மூலம் செலவு போக ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

ஒரு ஏக்கருக்கான செவ்வந்தி சாகுபடி

செலவு - வரவு கணக்கு (ரூபாயில்) விபரம் செலவு வரவு
உழவு 1,500
தொழு உரம் 1,200
பார் அமைத்தல் 1,000
நாற்று (வேர் வெட்டுதல், வேர் நீக்குதல் உட்பட) 1,180
தண்ணீர் பாய்ச்சும் கூலி (மாதம்ரூ.1000வீதம் ஏழு மாதத்திற்கு) 7,000
நடவு 1,200
களை எடுக்க 3,000
உரம் இரண்டு தடவை (டிஏபிகடலை புண்ணாக்கு) 2,700
பூச்சி மருந்து (தெளிப்புச் செலவு உட்பட) 850
இதர செலவுகள் 750
பூ விற்பனை மூலம் வரவு 70,000
மொத்தம் 20,380 70,000
நிகர லாபம் 49,620

-அகமது கபீர், தாராபுரம், 93607 48542.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X