கவர்ச்சியான கைகளுக்கு... | நாயகி | Nayaki | tamil weekly supplements
கவர்ச்சியான கைகளுக்கு...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 நவ
2011
00:00

கங்களை அழகுற வெட்டி, பூச்சு போட்டு அழகுபடுத்தும் கலைக்கு, "மானிகூர்' என்று பெயர். "மானிகூர்' செய்ய சில கருவிகள் தேவை. கியூட்டிக்கிள் சாப்டர், ஆரஞ்ச் ஸ்டிக், நெயில் பைல், எமரி பேப்பர், அஸ்டிரிஞ்ஜன்ட் லோஷன், க்ளென்சிங் லோஷன், மசாஜ் க்ரீம், நகப் பூச்சு பஞ்சு போன்றவற்றை பயன்படுத்தலாம்.

நல்ல ஆரோக்கியத்துடனும், பளபளப்புடனும் தென்படும் நகங்கள், கைகளுக்கு கவர்ச்சி தரும். மனித உடம்பின் ஆரோக்கியம் நகங்களில் தென்படும். நல்ல ஆரோக்கியமுடைய நகம், இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். உடம்பில் இரும்புச் சத்துக் குறைவாக இருந்தால், நகங்கள் நிறத்தை இழந்து, வெளிறி விடும். நகங்களில் நகப் பூச்சு "மானிகூர்' செய்வதற்கு முன், பூச்சு ரிமூவர் உபயோகித்து, அகற்ற வேண்டும். நகப் பூச்சை தொடர்ந்து உபயோகிப்பதால், நகங்கள் மஞ்சளாக தோற்றமளிக்கும். சற்று எலுமிச்சம் பழச்சாறு தேய்த்து, 10 நிமிடத்திற்கு பின், பஞ்சால் துடைத்து எடுத்தால், மஞ்சள் தோற்றம் அகன்று விடும். நகப் பூச்சை அகற்றிய பின், நக முனைகளை வெட்டி சரி செய்ய வேண்டும். ஒரு, "நெயில் பைல்' உபயோகித்து, மென்மையாக தேய்த்த பின், எமரி பேப்பரில் மீண்டும் தேய்த்து, நகங்களை அரை வட்ட வடிவமாக்க வேண்டும்.

நக முனைகளை சுரண்டி சரி செய்வதற்கு, "நெயில் பைல்' உபயோகிக்க வேண்டும். பிளேடு போன்ற கருவிகளை உபயோகிப்பதால், நக முனைகள் சிதைந்து போகும். பைல் செய்து வடிவுப்படுத்திய நகங்களில், "க்ளென் சிங்க் லோஷன்' தேய்க்க வேண்டும். பத்து நிமிடத்துக்குப் பின் பஞ்சால் துடைத்து விட்டால், நக இடுக்குகளில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும். அப்படியும் போகாத நகத்தின் உள்ளிருக்கும் அழுக்குகளை, சோப்புத் தண்ணீரில் மூழ்க வைத்து, பஞ்சால் துடைக்கவும். பிறகு, ஆரஞ்ச் ஸ்டிக்கில், பஞ்சு சுற்றி, நகத்தின் உள்ளிருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டும். "க்ளென்சிங் லோஷனை' துடைத்த பிறகு, "ஹாண்ட் லோஷன்' க்ரீம் ஏதாவது ஒன்றை கைகளில் தடவ வேணடும். ஐந்து நிமிடம் கழித்து, பஞ்சை உபயோகித்து, "ஹாண்ட் லோஷனை' துடைத்து, களையவும்.

நக எனாமல் பூசிக் கொண்டால், நகங்கள் நன்கு தோற்றமளிக்கும். தண்ணீராலும் மற்றும் வேறு கறைகளாலும் பாதிக்கப்படாமலும் இருக்கும். நகப் பூச்சை இளக்குவதற்கு, நகப் பூச்சு ரிமூவரைச் சேர்க்கக் கூடாது. அவ்வாறு செய்தால், நகத்திலிட்ட பூச்சு உரிந்து போய்விடும். நக எனாமல் காய்ந்த பின் ஒருமுறை லேசாக, "கிளியர் நெயில் வார்னிஷ்' பூச வேண்டும். இது, நகங்களின் பளபளப்புக்கு உதவும். தினமும் இரவு உறங்குவதற்கு முன், நகங்களில் கியூட்டிகல் கிரீமை அழுத்தி தேய்த்து வந்தால், நகங்களின் கவர்ச்சி அதிகரிக்கும். இரண்டு தேக்கரண்டி லானோலின், இரண்டு தேக்கரண்டி டால்கம் பவுடர், ஐந்து சொட்டு பாதாம் எண்ணெய் ஆகியவற்றைக் கலக்க வேண்டும். இது ஒரு சிறந்த க்யூட்டிகல் கிரீம். இரண்டு மேஜைக்கரண்டி வாசலைன் மற்றும் அரை தேக்கரண்டி கிளிசரின் கலந்தால், நல்லதொரு க்யூட்டிகல் கிரீம். சிவந்த நிறமுடையவர்கள் அழுத்தமான கலரில் உள்ள நகப் பூச்சு உபயோகிக்க வேண்டும். சிவப்பும், இளஞ்சிவப்பும் இவர்களுக்கு பொருத்தமானவை; மஞ்சளும், சாம்பல் நிறமும் பொருத்தமில்லாதவை.

கருமை நிறமுடையவர்களுக்கு, கருஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறங்கள் பொருத்தமானவை. மூன்லைட், கிளியர் பேர்ல் போன்ற நிறங்களும் பொருத்தமுடையன ஆகும். கோடை காலங்களில் விரல்களும், நகங்களும் உலர்ந்து போக வாய்ப்பு உண்டு. ஹேண்ட் கிரீம் தடவிக் கொண்டால் வறட்சி நீங்கி விடும். ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய், 20 சொட்டுக்கள் கிளிசரின், அரை தேக்கரண்டி லானோலின் ஆகியவற்றை கலந்தால், சிறந்த ஹேண்ட் கிரீம் தயார். நகங்களை அழகுபடுத்த நெயில் லாக்கர் பூசும் போது, அந்த நிறம் லிப்ஸ்டிக்கின் நிறத்தை ஒட்டி இருப்பது போல் பூசிக் கொள்ளலாம்.


டிப்ஸ்..

  • நகத்தை அஸ்ட்ரின்ஜென்ட் லோஷன் பஞ்சால் துடைத்து, அதன் பிறகு நகப் பூச்சை போட வேண்டும். நகத்தில் ஈரம் இருக்கும் பொழுது, பூச்சு போடக் கூடாது.
  • நகப் பூச்சை போடுவதற்கு முன், ஒரு கோட், "கிளியர் வார்னீஷ்' தடவ வேண்டும். வார்னீஷ் காய்ந்த பிறகு நகப் பூச்சை பூச வேண்டும். நகப் பூச்சு விரைவில் உதிராதிருக்க கிளியர் வார்னீஷ் உதவும்.
  • நகப் பூச்சை அடர்த்தியாக போடக் கூடாது. இரண்டு அல்லது மூன்று தடவை லேசாக பூச வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு தான் மறுமுறை பூச வேண்டும்.
  • நகத்திற்கு பூச்சு போடுவதற்கு முன், நகக் கண்களில் கொஞ்சம் வாசலினோ அல்லது கோல்டு கிரீமோ போட வேண்டும். பூச்சு நன்கு உலர்ந்த பின், வாசலினை துடைத்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் பூச்சு நகக் கண்களில் படாமல் தடுக்க முடியும்.
  • நகத்திற்கு போடும் போது, நகக் கண்களின் இரு புறத்திலும் ஒரு மில்லி மீட்டர் இடைவெளி விட்டு பட்டையாக போட வேண்டும். இது, நகங்களின் நீளம் கூடுதலாகத் தோற்றமளிக்க உதவும்.
  • நக எனாமல் பூசிக் கொண்டால், நகங்கள் நன்கு தோற்றமளிக்கும். தண்ணீராலும் மற்றும் வேறு கறைகளாலும் பாதிக்கப்படாமலும் இருக்கும்.
  • நகப் பூச்சை இளக்குவதற்கு, நகப் பூச்சு ரிமூவரைச் சேர்க்கக் கூடாது. அவ்வாறு செய்தால், நகத்திலிட்ட பூச்சு உரிந்து போய்விடும்.
  • - குஜிலி ஆன்ட்டி


Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X