ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2011
00:00

கோடிக்கணக்கில் மொபைல் போன் பயனாளர்கள் மாதந்தோறும் அதிகமாகிக் கொண்டே உள்ளனர் என்ற அறிவிப்புகளில் உள்ள உண்மை நிலவரத்தை அழகாகத் தந்துள்ளீர்கள்.
-சைய்யது ராவுத்தர், உத்தமபாளையம்

இணைய வர்த்தகத்தில் தன்னையும் உயர்த்திக் கொண்டு, மற்றவர்களுக்கும் கை கொடுக்கும் கூகுள் நிறுவனத்தை நாம் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தகவலுக்கு நன்றி.
-எஸ். மாணிக்க வேல், திருமங்கலம்.

""கம்ப்யூட்டருடன் ஒரு கல கல'' என்ற கட்டுரையில் தந்துள்ளது ஒரு நல்ல வேடிக்கையான விஷயம். சிறுமியாகிய என் மகளுக்குக் காட்டிய போது சிறிதும் கலக்கமின்றிப் பார்த்தாள்.
-ஆ. மாணிக்கம், மதுரை.

ஜிமெயிலின் புதிய தோற்றம் குறித்த தகவல் கம்ப்யூட்டர் மலரில் படிக்கும் முன் சற்றுப் பயந்து அதனை மேற்கொள்ளாமல் இருந்தேன். உங்கள் கட்டுரை தெளிவினைக் கொடுத்தது. மாறியபின்னர், மாற்றங்களில் உள்ள நல்ல விஷயங்கள் தெரிந்தன.
-சா. உதயகுமாரன், கோவை.

மின் அஞ்சல்கள் நம் பெர்சனாலிட்டியை எப்படி காட்டுகின்றன என்று புட்டு புட்டு வைத்துள்ளீர்கள். ""அகத்தின் அழகு முகத்திலே'' என்பதை மாற்றி அஞ்சலிலே என்று வைத்துக் கொள்ளலாம்.
-நி. சம்யுக்தா, சென்னை.

இமெயில் கடிதங்களில் நாம் அடிக்கடி ஏற்படுத்தும் தவறுகளைப் பட்டியல் இட்டது போல் உள்ளது உங்கள் கட்டுரை. அன்பான ஆசிரியரின் அறிவுரையாக எடுத்துக் கொண்டேன்.
-மா. சந்தோஷ், பரவை.

டேப்ளட் பிசிக்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பது உறுதி. உங்களின் பாய்ண்ட் பை பாய்ண்ட் விளக்கம் இதற்கு உறுதி சேர்த்ததுள்ளது. என்ன, விலை குறைந்தால் பரவல் விரைவில் நடக்கும்.
-பேரா. சி. ஷண்முகம், திருப்பூர்.

எத்தனை கம்ப்ரஸ்ஸன் புரோகிராம்கள் வந்தாலும், விண்ஸிப் அன்றிலிருந்து இன்று வரை தனக்கென வாடிக்கையாளர் களை வைத்துள்ளதற்குக் காரணம் அதன் நவீன தொழில் நுட்பமும் வசதிகளூமே. புதிய பதிப்பின் தகவலுக்கு நன்றி.
-கா. கார்த்திக், செங்கல்பட்டு.

ஆபீஸ் 2007 சர்வீஸ் பேக் ஏன் தானாக அப்டேட் ஆகவில்லை என்பதற்கு மைக்ரோசாப்ட் தளத்தில் தகவல் இல்லை. ஆனால் அதன் நோக்கத்தினை நீங்கள் சரியாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். சபாஷ்!
-டாக்டர் எஸ். உதயராஜ், திருச்சி.

எக்ஸெல் செல் பரப்பை அதிகப்படுத் துவதில் இதுவரை இருந்த தடுமாற்றத் திற்கு மருந்தாக உங்கள் பதில் உள்ளது. நன்றி.
-எம். பங்கஜம் கணேசன், விழுப்புரம்.

ஆபீஸ் 2007ன் இடத்தில் ஆபீஸ் 2010 வருகிறதே. இந்த புதிய ஆபீஸ் தொகுப்பு குறித்து நவீன டிப்ஸ்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-கா.சந்தோஷ், ஊட்டி.

டேப்ளட் பிசிக்களும் கையளவில் அடக்கமாக சிறியதாக வரும் நாள் விரைவில் தோன்றும். அப்போது வசதிகள் இன்னும் அதிகமாகும். அந்த நாளை நோக்கி உங்கள் தகவல்கள் உள்ளன.
-கே.எஸ். மாலதி, திண்டுக்கல்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூர்த்தி - உத்தமபாளையம்தேனீமாவட்டம்,இந்தியா
26-நவ-201110:05:17 IST Report Abuse
மூர்த்தி வேவு பார்த்தல் பற்றி கருத்து முற்றிலும் உண்மை. உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட்டில் இணைக்கும் முன் உங்கள் கம்ப்யூட்டர் பாதுகாப்பு பற்றி அறிந்துகொண்டு இணைக்கவும். அப்படி செய்தால் உங்கள் சேமிப்புகளை பாதுகாத்து கொள்ள முடியும் .....
Rate this:
Cancel
காசிராஜன்.p - சென்னைஅசோக்nagar,இந்தியா
26-நவ-201107:17:44 IST Report Abuse
காசிராஜன்.p கம்ப்யூட்டர் மலர் புக் ஏன் வருவதில்லை. கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் படிப்பதற்கு ஏற்ற வகையில் இ பேப்பரில் வருகிறது. ஆனால் புக் உட்கர்ந்து படிக்கிற மாதிரி வேண்டும். கம்ப்யூட்டர் தெரியாதவர்கள் கூட தெரிந்து கொள்ளலாம். நீங்கள் திங்கள் கிழமை பேப்பர் 2 ரூபி அதிகரித்தால் பரவாயில்லை. கம்ப்யூட்டர் மலர் ஹர்ட் காப்பி வேண்டும். நான் 1983 இல் இருந்து தினmalar வாங்கி படிக்கிறேன். என்னதான் இ பேப்பர் வந்தாலும் ஹர்ட் கோப்பி வாங்கி காபி குடித்துக்கொண்டு உட்க்கார்ந்து படித்தால் தான் திருப்தி. ஆகையால் கம்ப்யூட்டர் மலர் ஹர்ட் புக் வேண்டும். விலையை பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். காசிராஜன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X