கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2011
00:00

கேள்வி: சில மாதங்களாக, விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். இதன் ஸ்டார்ட் மெனுவில், இதனுடன் வந்த கேம்ஸ் காட்டப்படுகின்றன. இப்போது இவை சலித்து விட்டதால், விளையாடுவதில்லை. இவற்றை ஸ்டார்ட் மெனுவில் இருந்து நீக்குவதற்கான வழி என்ன?
-என். கே. பிரகாஷ், திண்டிவனம்.
பதில்: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கிடைக்கும் கேம்ஸ் புரோகிராம்கள், இன்ஸ்டால் செய்யப்பட்ட வுடன் ஸ்டார்ட் மெனுவில் காட்டும் வகையில் மாறா நிலையில் அமைக்கப் படுகின்றன. இவற்றை நாளடைவில் நாம் விரும்புவதில்லை. இவற்றை ஸ்டார்ட் மெனுவில் இருந்து நீக்கக் கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளுங்கள். Start மெனு செல்லவும். %AllUsersProfile%\Microsoft \Windows\Start Menu\ என்ற வரியைச் சரியாக சர்ச் பாக்ஸில் டைப் செய்து என்டர் தட்டவும். ஸ்டார்ட் மெனுவில் இருப்பவை லோட் செய்யப்படும். (விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்படுகையில், புரோ கிராம் ஷார்ட் கட்களை அனைவரும் பயன்படுத்துமாறு அமைத்துவிடுகிறோம். எனவே கேம்ஸ் ஷார்ட்கட் பிரிவுகள் காட்டப்படுகின்றன.) இப்போது என்டர் தட்டவும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். “Programs” என்ற போல்டரில் டபுள் கிளிக் செய்திடவும். இனி அனைத்து அப்ளிகேஷன்களும் “All Programs” என்பதின் கீழ் பட்டியலிடப் படும். இனி, கேம்ஸ் (“Games”) போல்டருக்குச் செல்லவும். இதில் ரைட் கிளிக் செய்திடவும். காண்டெக்ஸ்ட் மெனுவில் “Cut” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இந்த போல்டரை டெஸ்க்டாப் அல்லது ஏதேனும் ஒரு போல்டருக்குள்ளாக அமைக்கவும். இதன் பின்னர், கேம்ஸ் போல்டர் விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவில் தெரியாது.

கேள்வி: ஐகான் படத்தின் அளவு ஒரே மாதிரியாகத்தான் இருக்குமா? இதனை மாற்ற முடியுமா? இப்போது காட்டப்படும் அளவு என்ன? எந்த அளவு வரை இதனை மாற்றலாம்?
-டி.எஸ். மஹேந்திரன், சென்னை.
பதில்: ஐகான்கள் அளவை நாம் விரும்பும் வகையில் மாற்றலாம். பொதுவாக நாம் பார்க்கும் ஐகான்கள் 32x32 என்ற அளவிலான பிக்ஸெல்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவை 43x43 என்ற பிக்ஸெல் அளவில் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இந்த அளவுகளை அட்ஜஸ்ட் செய்து அமைக்க வேண்டும் என்றால், விண்டோஸ் டெஸ்க்டாப் சென்று, “Properties | Appearance” டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Item” கீழ்விரி மெனுவில், “Icon” என்பதைத் தேர்ந்தெடுத்து ஐகான் அளவை மாற்றலாம். “Icon spacing (horizontal)” / “Icon spacing (vertical)” என்பதைத் தேர்ந்தெடுத்து ஐகான் எடுத்துக் கொள்ளும் இட அளவினை மாற்றலாம்.

கேள்வி: சில பைல்களில் என்ற எக்ஸ்டன்ஷன் பெயர் உள்ளது. இது எந்த வகை பைல்?
-சி.ஸ்ரீனிவாசன், கும்பகோணம்.
பதில்: Compiled Html Manual Format என்ற பைல்களின் எக்ஸ்டென்கள்தான் .chm ஆகும். விண்டோஸ் மற்றும் சில அப்ளிகேஷன்களின் ஹெல்ப் பைல்கள்தான் இவை.

கேள்வி: பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸ் பெறுவதற்கு ரூலரில் கிளிக் செய்தால் கிடைக்கும் என முன்பு எழுதி இருந்தீர்கள். ஆனால் டேப் ஸ்டாப் தான் உருவாகிறது. இதற்கு என்ன செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்.
பதில்: அப்போது தந்துள்ள டிப்ஸைச் சரியாகப் படிக்கவில்லை என்று நினைக் கிறேன். டபுள் கிளிக் செய்திட வேண்டும். அதுவும் இடைவெளி இன்றி தொடர்ந்து செய்திட வேண்டும். இருப்பினும் அதற்கான முழு தகவலை இங்கு தருகிறேன்.
டாகுமெண்ட்டில் பல வேலைகளுக்காக ரூலரை மேலாகவும் இடது பக்கத்திலேயும் வைத்திருக்கிறீர்கள். இதே ரூலர் லைனில் இருமுறை கிளிக் செய்திடுங்கள். உங்களுக்கு உடனே பேஜ் செட் அப் விண்டோ கிடைக்கும். ரூலர் பார் பேஜ் செட் அப்பிற்கு உடனடி டிக்கட் தரும் இடமாகவும் அமைந்துள்ளது. வேர்ட் 2003 மட்டுமின்றி ஆபீஸ் 2007லும் இந்த வசதி தரப்பட்டுள்ளது.
இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மேலாக படுக்கை வசத்தில் உள்ள ரூலரில் ஒரு முறை கிளிக் செய்தால் அங்கு ஒரு டேப் ஸ்டாப் அமையும். எனவே மவுஸை இருமுறை வேகமாக கிளிக் செய்தால் தான் இங்கு பேஜ் செட் அப் கிடைக்கும். அப்படி முடியாதவர்கள் ரூலர் முடிந்து ரூலராகப் பயன்படுத்த முடியாத இடம் வலது கோடியில் இருக்கும் அல்லவா? அந்த இடத்தில் கிளிக் செய்திடலாம். இடது புறம் உள்ள ரூலரில் இந்த பிரச்னை இல்லை. அங்கு கிளிக் செய்தால் உடனே எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேஜ் செட் அப் கிடைக்கிறது. இதனால்தான் ரூலரை சிலர் பேஜ் செட் அப் எக்ஸ்பிரஸ் என அழைக்கின்றனர்.

கேள்வி: என் ப்ராஜக்ட் ஒன்றை விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பைல் ஒன்றைத் தயார் செய்தேன். ஸ்லைடுகளின் இறுதியீல் கருப்பாக ஒரு ஸ்லைட் தோன்றுகிறது. முடிக்கின்ற வேளையில் இது இருப்பது பிடிக்கவில்லை. இதனை எப்படி வராமல் தடுப்பது?
-என்.சிதம்பரம், கரூர்.
பதில்: இறுதியாக ஏன் கருப்பாக முடிக்க வேண்டும் என சென்டிமெண்ட்டாக ஒரு கேள்வி கேட்டுள்ளீர்கள். நம் விருப்பப்படி அமைத்திடத்தானே எம். எஸ்.ஆபீஸ் உள்ளது. இதோ உங்கள் கேள்விக்கான பதில்.
பவர் பாய்ண்ட் தானாக உருவாக்கும் ஸ்லைட் இது. இதனை நீக்க கீழ்க்காணும் வழியில் செட் செய்திடவும். முதலில் “Tools” “Options” செல்லவும். Options அழுத்தியவுடன் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் “View” என்னும் டேபினை அழுத்தினால் புதிய டயலாக் பாக்ஸ் ஒன்று காட்டப்படும். இந்த பெட்டியில் “End with black slide” என்று இருக்கும் இடத்திற்கு எதிராக உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்று இருக்கும். அதனை எடுத்துவிடவும். ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இனி இந்த கருப்பு திரை கிடைக்காது.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், நெட்டு வரிசைகளைப் படுக்கை வரிசைகளாகவும், படுக்கை வரிசைகளை நெட்டு வரிசை களாகவும் மாற்றி அமைக்க முடியுமா? இதனை எக்ஸெல் அனுமதிக்குமா?
-சு. நரேஷ் குமார், பழவந்தாங்கல்.
பதில்: மாற்றி அமைக்க என்றே ஒரு கட்டளை உள்ளது. Transpose என்பது அது. எடுத்துக்காட்டாக ஒரு அட்ட வணையில் (Table) 3 படுக்கை வரிசையும் (Rows) 5 நெட்டு வரிசையும் (Column) அமைத்துவிடுகிறீர்கள். ஆனால் பின்னர் இதனை 5 படுக்கை வரிசை 3 நெட்டு வரிசையாக அமைக்க விரும்பினால் இந்த கட்டளையைப் பயன்படுத்தலாம். இதிலும் இரண்டு வழி உள்ளது. உங்களுக்கு எளிய வழியைச் சொல்கிறேன். முதலில் எந்த டேபிளில் உள்ள வரிசைகளை மாற்றி அமைக்க விருப்பமோ அவற்றை செலக்ட் செய்து காப்பி செய்திடவும். பின்னர் டேபிளுக்கு வெளியே வந்து ஒரு செல்லில் கர்சரை வைத்திடவும். பின் Edit––>>Paste Special கட்டளையைக் கொடுங்கள். அதன் பின் Transpose என்னும் செக் பாக்ஸைத் தேர்வு செய்து ஓகே கொடுங்கள். பழைய டேபிளுக்குக் கீழாக நீங்கள் விரும்பியவகையில் தகவல்கள் எதுவும் மாறாமல் படுக்கை வரிசை நெட்டு வரிசையாகவும் நெட்டு வரிசை படுக்கை வரிசையாகவும் மாறி அட்டவணை அமைக்கப்பட்டிருக்கும். பழைய அட்டவணையை இப்போது அழித்து விடலாம்.

கேள்வி: நம் பிரவுசர்களுக்கு ஆட் ஆன் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறோம். இவற்றைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா?
-பேரா. க.தனவேல், மதுரை.
பதில்: பொதுவாக ஆட் ஆன் தொகுப்பு ஒன்றை இணைத்தால் அதன் விளை வைப் பெற அந்த பிரவுசரை மீண்டும் இயக்க வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் திரையின் வலது பக்கம் மேலாக உள்ள tools மெனுவில் இடது பக்கம் கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் மெனுவில் Manage Add ons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Enable Add ons / Disable Add ons என்பதில் நாம் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கலாம்.
இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆட் ஆன் தொகுப்புகளின் பட்டியல் கிடைக்கும். எந்த ஆட் ஆன் தொகுப்பில் செயல்பட விரும்புகிறீர்களோ அதன் மீது சிங்கிள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Able / Disable ரேடியோ பட்டனை உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து மூடவும்.
பயர்பாக்ஸ் பிரவுசரில், Tools மெனுவில் Add on என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பட்டியலில் உள்ள ஆட் ஆன் தொகுப்புகளை தற்காலிகமாகச் செயல்படாத வகையில் நிறுத்தி வைக்க முடியும். அல்லது நிரந்தரமாக நீக்கவும் செய்திடலாம். இதில் உள்ள ஆப்ஷன்ஸ் பட்டன் கிரே கலரில் இருந்தால் அந்த வசதி அதில் இல்லை என்று பொருளாகிறது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அ ராஜேஷ் - சென்னை,இந்தியா
24-நவ-201122:14:44 IST Report Abuse
அ ராஜேஷ் முன்பெல்லாம் தினமலர் தரும் கம்ப்யூட்டர் மலரை பதிவிறக்கம் செய்து தனியாக எனது கணினியில் சேமித்து கொள்ள வழி இருந்தது.. பிற்பாடு இப்போதெல்லாம் வரும் கம்ப்யூட்டர் மலர்களை பதிவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளும் வழியை அடைத்து விட்டது ஏனோ ? என்னை போல இருக்கும் நெடுநாளைய வாசகர்களுக்கு ஏதாவது சந்தேகத்திற்கு இது விடை தரும் மிக பெரிய துணையாகவும் ஒரு வழிகாட்டியாகவும் இருக்கின்றது.. தொடர்ந்து பதிவிறக்கம் செய்யும் வழியை காட்டுவீர்களா ????
Rate this:
Cancel
sureshrajan - அரியலூர்,இந்தியா
24-நவ-201120:00:44 IST Report Abuse
sureshrajan எந்த இலவச antivirus software கணினிக்கு பாதுகாப்பானது ? நான் தற்பொழுது kaspersky trial version பயன்படுத்துகிறேன் . …
Rate this:
Cancel
தாவூத் அலி - chennai,இந்தியா
22-நவ-201109:07:18 IST Report Abuse
தாவூத் அலி அதிக மெமரி கொண்ட எக்செல் வொர்க்சீட்டின் வேகத்தை அதிக படுத்த முடியுமா? மேலும் அதிக மெமரி கொண்ட வொர்க்சீட் ஓபன் ஆகுவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. மேலும் கம்ப்யூட்டர் முழுவதும் ஹென்க் ஆகிறது. இதை தடுக்க முடியுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X