கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 நவ
2011
00:00

கேள்வி: விண்டோஸ் தீம் என்று சொல்கையில் நாம் எதனைக் குறிப்பிடுகிறோம்?
-கா. தனுஷ் குமார், சிதம்பரம்.
பதில்: தீம் என்பது மானிட்டர் ஸ்கிரீன் பின்னணி. அத்துடன் சவுண்ட் அரேஞ்ச் மென்ட் மற்றும் ஐகான் அமைப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இந்த பிரிவில் உங்களுடைய கம்ப்யூட்டரில் தோன்றும் அனைத்து விண்டோவிற்கான வண்ணங்கள், ஐகான்கள் மற்றும் ஒலி வகை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர், விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். பிரவுசிங் செய்கையில் ரன் டைம் எர்ரர் எனக் காட்டி டிபக் செய்திடவா எனக் கேள்வி கிடைக்கிறது. நோ கிளிக் செய்தால் பிரச்னை இல்லை. யெஸ் கிளிக் செய்தால், புரியாத தகவல்கள் கிடைக்கின்றன. இதற்கு என்ன காரணம்? இன்டநெட் எக்ஸ்புளோரரை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? தனியே எப்படி செய்வது?
-சி. ஸ்நேக ராணி, சென்னை.
பதில்: Debug என்பது புரோகிராமில் உள்ள பிழைகளைச் சரி செய்திடும் வேலை . இந்த பிழைச் செய்தி வெப்சைட்டை வடிவமைத்தவருக்கானது. எனவே இந்த செய்தி தொடர்ந்து கிடைக்காமல் செய்திடலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறக்கவும். Tools மெனு கிளிக் செய்து பெறவும். மெனுவில் Internet Options கிளிக் செய்திடவும். இங்கு உள்ள Advanced என்ற டேப்பில் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Disable Script Debugging என்ற பிரிவைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அங்கு உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த மெசேஜ் கிடைக்காது.

கேள்வி: பேஸ்புக் தளத்தில் அக்கவுண்ட் ஒன்று வைத்திருக்கிறேன். இதன் பாஸ்வேர் டினை எப்படி மாற்றுவது என்று தெரிய வில்லை. வழி காட்டவும்.
-என்.கணேஷ் சிதம்பரம், திண்டுக்கல்.
பதில்:ஓகே. சுருக்கமாக விளக்கு கிறேன். முதலில் பேஸ்புக் தளத்தில் வழக்கமான பாஸ்வேர்ட் கொடுத்து நுழைந்து கொள்ளுங்கள். மேல் வலது புறம் உள்ள கீழ்விரி மெனுவில் கிளிக் செய்திடவும்.கிடைக்கும் மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிடைக்கும் Account Settings பக்கத்தில், பாஸ்வேர்ட் பீல்டில் வலதுபுறம் உள்ள Edit என்னும் லிங்க்கில் கிளிக் செய்திடவும். அநேகமாக இது நான்காவதாக இடம் பெற்றிருக்கும். இப்போது மூன்று பீல்டுகள் கிடைக்கும். இதில் முதலாவதாக, இப்போதைய பாஸ்வேர்டினையும், அடுத்த இரண்டு பீல்டுகளில், நீங்கள் கொடுக்க விரும்பும் புதிய பாஸ்வேர்டினையும் தரவும். இந்த பாஸ்வேர்ட் மற்றவர் எளிதில் புரிந்து கொள்ள முடியாததாக இருக்க வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது பீல்டுகளில், புதிய பாஸ்வேர்ட் சரியாக டைப் செய்யப்பட வேண்டும். அடுத்து நீல வண்ணத்தில் உள்ள Save Changes என்ற பாக்ஸில் கிளிக் செய்திட வும். இப்போது உங்கள் பாஸ்வேர்ட் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து பேஸ்புக் தளத்திலிருந்து உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிற்கு “You recently changed your Face book password. As a security precaution, this notification has been sent என ஒரு செய்தி அஞ்சல் அனுப்பப்படும்.

கேள்வி: திடீரென மூடப்பட்ட ஓர் இணைய தளத்தினை, மீண்டும் முகவரி பாக்ஸ் சென்று, யு.ஆர்.எல்.அமைக்காமல் திறக்க என்ன வழி?
-எஸ். நித்யஸ்ரீ, கோவை.
பதில்: கண்ட்ரோல் + ஷிப்ட் +ட்டி (Ctrl+Shift+T) கீகளை அழுத்துங்கள். உடனே அப்போது இறுதியாக மூடப்பட்ட தளம் திறக்கப்படும். அதற்கு முந்தைய தளம் எனில், மறுபடியும் அதே கீகளை அழுத்தவும். இப்படியே முந்தைய தளங்களைத் திறக்கலாம். இந்த ஷார்ட்கட் கீகள் தொகுப்பு பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் குரோம் ஆகிய வற்றில் செயல்படுகிறது.

கேள்வி: டவுண்லோட் செய்த எம்பி3 பாடல் களில், பாடகர் ஒலி அல்லது இசைக் கருவிகளின் ஒலியை எப்படி நீக்குவது?
-சு. இளந்திரையன், மதுரை.
பதில்: இணையத்தில் சில பாடல்களின் கராகோ வகை என்று தரப்படுகிறது. ஒரு சில ஆர்வப் பிரியர்கள், பாடல்களில் பாடகரின் ஒலியை நீக்கி இணையத்தில் பதிவு செய்துள்ளனர். நீங்களாக முயற்சிக்க, AV Music Morpher என்ற புரோகிராமினைப் பெற்று பயன்படுத்திப் பார்க்கவும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் ஆபீஸ் 2003 பயன்படுத்துகிறேன். என் நண்பர் கம்ப்யூட்டரில் சொற்கள் இறுதியாக அமைகையில், ஹைபன் தானாக அமைகிறது. ஆனால் என் கம்ப்யூட்டரில் நானாக ஹைபன் டைப் செய்து என்டர் அழுத்தி அடுத்த வரி செல்கிறேன். வேர்ட் தானாக அமைக்க என்ன ஆபீஸ் 2003ல் வசதி இல்லையா?
-க. சின்னராஜூ, உசிலம்பட்டி.
பதில்: ஹைபன் தானாக அமைக்கும் படி வேர்ட் தொகுப்பில் சில மாற்றங்களை அமைக்க வேண்டும். Tools மெனு சென்று Language என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் சிறிய மெனு கட்டத்தில் Hyphenation என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மீண்டும் ஒரு சிறிய கட்டம் கிடைக்கும். இதில் Automatically Hyphenate Document என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேற வும். அதே கட்டத்தில் இன்னும் என்ன என்ன ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன என்றும் பார்த்து வைத்துக் கொள்ளவும்.

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். என் கம்ப்யூட்டரை நண்பர்கள் சிலரும் பயன்படுத்துகின்றனர். நான் விரும்பாத மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள். சிறிய புரோகிராம்களை நிறுவுகிறார்கள். அவர் களுக்கு தனியாக யூசர் அக்கவுண்ட் இருந்தாலும், என் கம்ப்யூட்டரில் மாற்றங்களை ஏற்படுத்துவது பிடிக்கவில்லை. இதனை எப்படிக் கண்டறிந்து அழிப்பது?
-மா. கருணாசேகரன், திண்டிவனம்.
பதில்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் PC Safeguard என்ற புரோகிராம் உள்ளது. இதனை இயக்கி உங்கள் கம்ப்யூட்டரை உங்கள் நண்பர் களிடமிருந்து பாதுகாக்கலாம். இதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு முடித்து உங்கள் நண்பர் லாக் ஆப் செய்திடுகையில் PC Safeguard அவர் ஏற்படுத்திய அனைத்து மாற்றங்களையும் கேன்சல் செய்து பழைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வந்து விடும். முன்பு இதற்கான தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இருந்தன. ஆனால், தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டமே இதனைக் கொண்டுள்ளது.
இதனைச் சோதித்துப் பார்க்க Control Panel > User Accounts and Family Safety > User Accounts > Manage another account > Create a new account என்று சென்று ஒரு புதிய அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கவும். பின் அந்த அக்கவுண்ட்டில் PC Safeguard இன்ஸ்டால் செய்திடவும். பின் இயக்கி Apply கிளிக் செய்திடவும். இந்த புதிய அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து மேலே குறிப்பிட்ட மாற்றங்களை மேற் கொள்ளவும். ஏதேனும் ஒரு புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும். பின் ரீஸ்டார்ட் செய்து பார்த்தால் நீங்கள் இன்ஸ்டால் செய்த புரோகிராம் இருக்காது. என்ன சந்தோஷமா!

கேள்வி: Peer to Peer என்ற இணைப்பு எதனைக் குறிக்கிறது?
-ந. சந்தான பிரபா, தேவாரம்.
பதில்: இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கப் பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று இது. கம்ப்யூட்டர்களை நேரடியாக எந்த சர்வரின் துணையின்றி இணைக்கும் முறையினை இவ்வாறு அழைக்கின்றனர்.

கேள்வி: நூற்றுக்கணக்கான எம்பி3 பாடல்களை ஒரு டிவிடியில் பதிந்து ஓய்வு நேரத்தில் கேட்டு மகிழ, என் மகள் எனக்குக் கொடுத்திருக்கிறார். எம்பி3 பாடல்களை இயக்க எந்த புரோகிராம் நல்லது?
-கே.என். பரமசிவம், திருவண்ணாமலை.
பதில்: அன்பான மகளைப் பெற்ற உங்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள்.
கம்ப்யூட்டரிலேயே இதற்கான சாப்ட்வேர் ஒன்று விண்டோஸ் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. ஆடியோ பாடல்கள் மட்டுமல்ல, படங்களையும் இயக்கிப் பார்க்க விண்டோஸ் மீடியா பிளேயர் என்னும் அப்ளிகேஷன் புரோகிராம், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் தொகுப்பில் ஒரு பகுதியாக உள்ளது. இறக்கிய பைல்களில் டபுள் கிளிக் செய்தால், இந்த புரோகிராம் இயக்கப்பட்டு பாடல் இயக்கப்படும். இத்துடன் மேலும் சில சாப்ட்வேர் தொகுப்புகளையும் நீங்கள் பயன்படுத்தலாம். இதில் பல லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்துவது, விண் ஆம்ப் சாப்ட்வேர் புரோகிராம் ஆகும். இதனை இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். www.winamp.com என்ற இணைய தளம் செல்லவும். இதனை இயக்குவது எளிது. மேலும் இதன் மூலம் இணைய வெளியில் உள்ள ரேடியோ மற்றும் வீடியோ ஸ்டேஷன்களையும் பெறலாம். இசை கேட்டு ஓய்வாக வாழ்வை இனிமையாக்குங்கள்.

கேள்வி: அண்மையில் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிகல் சயின்ஸ் நிறுவனத்தின் ஹால் டிக்கட் டவுண் லோட் செய்திட முயற்சி செய்தேன். என்னிடத்தில் பயர்பாக்ஸ் இருந்தது. ஆனால் அந்த பிரவுசரில் ஹால் டிக்கட் டவுண்ட்லோட் செய்திட இயலவில்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் சரியாக வந்தது. ஹால் டிக்கட்டில் போட்டோ இருந்தது தான் பிரச்னையா?
-டாக்டர் என்.லீலா மஹேஷ், புதுச்சேரி.
பதில்: அந்த தளத்தை வடிவமைத் தவர்கள் ஏற்படுத்திய வரையறை இது. போட்டாவினால் மட்டும் வரும் பிரச்னை இல்லை. வேறு வழியில்லை. எந்த பிரவுசரை அவர்கள் பரிந்துரைக்கிறார் களோ, அதில் மட்டுமே சரியாகக் கிடைக்கும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kubendran.V - Usilampatti,இந்தியா
28-நவ-201120:23:12 IST Report Abuse
Kubendran.V Microsoft Office Excel file-லில் சில தகவல்கலை Kruti Tamil 130 font-ல் பதிவு செய்துள்ளேன் இதனை Latha (Tamil) Font-ற்க்கு மாற்றம் செய்ய முடியுமா? முடியும் என்றால் அதற்கான வழி முறையினை தயவு செய்து தெரிவிக்கவும். எனது OS Windows-7
Rate this:
Share this comment
Cancel
சுபா - tamilnadu,இந்தியா
28-நவ-201113:41:35 IST Report Abuse
சுபா என்னால் கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய முடியவில்லை. டவுன்லோட் எப்படி செய்வது. தயவு செய்து சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X