ஒரு சின்ன பர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 டிச
2011
00:00

ஜிமெயில் தரும் இரட்டை அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு அருமை யான பாதுகாப்பினை வழங்குகிறது. வங்கிகளில் இன்டர்நெட் வழி பணப் பரிமாற்றத்திற்கான பாதுகாப்பு போல் உள்ளது. பணத்தைக் காட்டிலும் நம் டேட்டா உயர்வானது என்பதால், நாம் அனைவரும் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். தினமலரில் தான் இந்த செய்தியினை எங்களுக்குத் தந்துள்ளது. வாசகர் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன் கருதும் தினமலர் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
-சி. கஸ்தூரி ரங்கன், சென்னை.

குறைந்த கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் இணைப்பினை நம்மால் வழங்க முடியும். அரசின் கவனத்திற்கு இதனை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-என். நிர்மலா மாறன், செங்கல்பட்டு.

ஸோன் அலார்ம் தொடர்ந்து தன் பதிப்பைப் புதுப்பிப்பதோடு, அதன் எளிய பதிப்பை இலவசமாகவும் வழங்கி வருகிறது. தகவலுக்கு நன்றி.
-சி.கார்த்திகேயன், மதுரை.

மொத்தமாகப் படங்களை மாற்றும் புரோகிராம் குறித்த தகவல்கள் என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இது போல வாழத் துடிக்கும் இளம் தொழில் கலைஞர்களுக்கு அடிக்கடி பயனுள்ள குறிப்புகளைத் தரவும்.
-டி.பரஞ்சோதி, வீடியோ கலைஞர், உசிலம்பட்டி.

வெகுநாட்களாக ஜிமெயில் பயன்படுத்தி வருகிறேன். ஆனால், அதன் ஆர்க்கிவ் பட்டன் பக்கமே சென்றதில்லை. உங்களின் விரிவான கட்டுரையைப் படித்த பின்னர், அதனைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டேன். பயனுள்ள குறிப்பு இது.
-சா. முத்து விநாயகம், திண்டிவனம்.

போல்டரில் பேட்லாக் ஐகான் என்பது முற்றிலும் புதிய தகவலாக உள்ளது. தாங்கள் அளித்துள்ள டிப்ஸ் அதன் முழு உபயோகத்தைத் தருகிறது. கம்ப்யூட்ட ரைப் பகிர்ந்து கொள்ளும் எங்களுக்குப் பல ஐயங்களைப் போக்கியது.
-சா. பிரகாஷ் குமார், சென்னை.

என் கேள்விக்கு தாங்கள் கொடுத்த பதிலின் படி குறிப்பிட்ட புரோகிராமினை டவுண்லோட் செய்து பயன்படுத்து கிறேன். என் தேவைகளுக்கு மிகவும் உதவியாய் உள்ளது. தனிப்பட்ட கேள்வி யாய் இருந்தாலும், தகவல்களைத் தேடித் தரும் தங்கள் மாண்பிற்குத் தலை வணங்குகிறேன். நன்றி.
-சு.இளந்திரையன், மதுரை.

ஹால்டிக்கட் தருவதில் தான் குளறுபடி என்று இருந்த என்னைப் போன்ற பல டாக்டர்களுக்கு, நிலைமையை விளக்கி பதில் தந்தமைக்கு நன்றி. இருந்தாலும் எய்ம்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த சிறிய குழப்பத்தினை நீக்கும் வகையில் அனைத்து பிரவுசர்கள் மூலமாகவும் பெறும் வகையில் ஹால் டிக்கட்டை வழங்கலாம். அல்லது குறிப்பாகத் தரலாம்.
-டாக்டர் என்.லீலா மஹேஷ், புதுச்சேரி.

ஆப்பிள் நிறுவனமும் கூகுள் நிறுவனமும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் போட்டியில், மக்கள் பயன் அடையும் வகையில் தேவைகளை நிறை வேற்றுவது நல்ல அம்சமாக உள்ளது. கம்ப்யூட்டர், இணைய வர்த்தகத்தில் என்றைக்கும் வாடிக்கையாளர்கள் கை ஓங்கித்தான் இருக்கும் என்பதை இந்த போட்டி காட்டுகிறது.
-டி.சீதாலஷ்மி, திருப்பூர்.

சிஸ்டம் பைல் உள்ளிட்ட தொழில் நுட்பம் பற்றிய சிறு குறிப்புகளை ஆங்காங்கே கட்டங்களில் தருவது குறைந்து வருகிறது. சுருக்கமாக இவற்றைத் தந்தால், நாங்கள் படித்ததை நினைவு படுத்திக் கொள்ள வழி கிடைக்கும்.
-மி. இராஜேந்திரன், மேட்டுப் பாளையம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nivedha - chennai,இந்தியா
06-டிச-201112:52:56 IST Report Abuse
Nivedha how to ask questions about computer through email,so we get answers in computer malar
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X