கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 டிச
2011
00:00

கேள்வி: தவிர்க்கப்பட வேண்டிய பாஸ்வேர்ட்கள் என எவையேனும் உள்ளனவா? எதனால் அப்படி?
-க.கமலேஷ் சந்தன், சென்னை.
பதில்: பொதுவாக எண்கள் மற்றும் எழுத்துக்கள் இணைந்த பாஸ்வேர்ட்கள் பாதுகாப்பானவை. தவிர்க்கப்பட வேண்டிய பாஸ்வேர்ட் என எவையும் வரயறை செய்யப்படவில்லை. இருப்பினும் யாரும் எளிதாகக் கண்டறியும் வகையில் இருக்கக் கூடாது என்பதே இதன் அடிப்படை. “monkey” “shadow” “123456” “654321” “qwerty” “password” “111111” போன்ற பாஸ்வேர்ட்கள் நிச்சயம் நம் பாஸ்வேர்ட்களைக் கண்டறிய திட்டமிடுபவர்களுக்கு எளிதான வழியைக் காட்டிவிடும். எனவே தான் இவை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

கேள்வி: என் லேப்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி இயக்கத்திலிருந்து விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மாறி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும், இதன் "பவர் செட்டிங்ஸ்' எனக்கு இன்னும் முழுமை யாகப் புரியவில்லை. சுருக்கமாகப் புரியும் வகையில் தரவும்.
-தி. காவேரி சந்தனா, மதுரை.
பதில்: சற்று நீண்டு இருக்கப்போவதாக இருந்தாலும் முழுமையாகவே சொல்கிறேன். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பவர் செட்டிங்ஸ் மற்ற சிஸ்டங்களில் இருந்ததைக் காட்டிலும் சில வேறுபாடுகளுடன் தான் தரப்பட்டுள்ளது. முதலில் “Power Settings” என சர்ச் பாக்ஸில் டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது Power option விண்டோ காட்டப் படும். இதில் மூன்று வகை பிளான் நீங்கள் தேர்வு செய்திடக் கிடைக்கும். லேப்டாப் மின்சக்தியைச் சரியாக மிச்சப்படுத்த, “Power saver” என்னும் ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடும். இதில் தரப்படும் மற்ற ஆப்ஷன்களில் நீங்கள் விரும்புவதனைத் தேர்ந்தெடுத்துப் பின்னர் இறுதியாக “Save Changes” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
இந்த Power planஐ மாற்ற வேண்டும் என எண்ணினால், “Change plan settings” என்பதில் கிளிக் செய்திடவும். கம்ப்யூட்டர் தன் இயக்கத்தை நிறுத்து முன் எடுத்துக் கொள்ளும் நேரத்தினை இங்கு தேர்ந்தெடுக்கலாம். எதனை மாற்றினாலும், இறுதியாக “Save changes” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
நாமாக ஒரு Power plan உருவாக்கலாம். முன்பு போல, முதலில் “Power Settings” என சர்ச் பாக்ஸில் டைப் செய்து என்டர் தட்டவும். அடுத்து பவர் ஆப்ஷன் விண்டோவில் வலது பிரிவில் உள்ள “Create a power plan” என்பதில் கிளிக் செய்திடவும். இனி, நீங்கள் விரும்பும் திட்டத்தினைத் தேர்ந்தெடுத்து அதற்கான பெயரினை, டெக்ஸ்ட் பாக்ஸில் அளிக்கவும். தொடர்ந்து “Next” என்பதில் கிளிக் செய்திடுக. அடுத்து sleep and display ஆகிய செட்டிங்ஸ்களை விருப்பப்படி மாற்றவும். பின்னர், “Create” என்னும் பட்டனில் கிளிக் செய்தால், உங்களுக்கான பிளான் உருவாக்கப் படும். உங்கள் பிளான் “Preferred plans” என்பதன் கீழ் நீங்கள் அளித்த பெயருடன் இருக்கும்.

கேள்வி: வார்ம் பூட்டிங் என்றால் என்ன? இது கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆனால், பயன்படுத்தும் வழியா?
-க.சிகாமணி, நரசிங்கம்.
பதில்: கம்ப்யூட்டர் ஒன்றை இயக்குகை யில் முதலில் கம்ப்யூட்டரில் உள்ள பாகங்கள் இணைக்கப்பட்டுள்ள கீ போர்டு, பிரிண்டர் போன்ற துணைச் சாதனங்கள் ஆகியவை சோதிக்கப் படுகின்றன. இவற்றில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அது பீப் ஒலி வழியாகத் தெரிவிக்கப்பட்டு பின்னர் ஸ்கிரீனிலும் பிழைச் செய்தியாகக் காட்டப்படும். பின்னர் விண்டோஸ் இயக்கம் இயங்கத் தொடங்கும். இது முழுமையான பின்னர் கம்ப்யூட்டரில் உங்கள் பணியைத் தொடங்கலாம். இதன் பின்னர் கம்ப்யூட்டரை மீண்டும் ஸ்டார்ட் செய்திட வேண்டுமென்றால் அதனை "ரீபூட்டிங்' செய்திடலாம். அப்போது விண்டோஸ் தொகுப்பு மட்டுமே சோதிக்கப்பட்டு இயங்கத் தொடங்கும். இதனையே "வார்ம் பூட்டிங்' என்று அழைக்கிறோம்.

கேள்வி: வேர்டில் அமைக்கப்படும் டாகுமெண்ட்டில், எழுத்தின் அளவை மாற்றி அமைக்க இரண்டு வழிகள் உள்ளன. இவற்றில் உள்ள வேறுபாடு, பயன் என்ன?
-ஆ. தாமரை, விருதுநகர்.
பதில்: வேர்ட் டாகுமெண்ட்டில் மட்டு மல்லாமல், எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த ஒரு பைலிலும் காணப்படும் எழுத்தின் அளவைப் பெரிதாக்கவும் சிறியதாக மாற்றவும் இரண்டுவித கட்டளைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை
Ctrl + Shift + > மற்றும் Ctrl + Shift + என ஒரு வகை.
Ctrl + [ மற்றும் Ctrl + ] என ஒரு வகை. ஏன் இரண்டு விதமான கட்டளைகள்? இதன் செயல்பாட்டில் வேறுபாடு உண்டா? எனக் கேட்டால் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். எழுத்து அளவுக்கான கீழ்விரியும் பட்டியலைப் பார்த்தால் இதற்கான விடை தெரியும். இந்த பட்டியலில் வரிசையாக எழுத்தின் அளவு இருக்காது. 8 லிருந்து 12 வரிசையாக வரும் எண் பின்னர் 14, 16 எனச் செல்லும். அப்படியானால் எழுத்தின் அளவு 13,15 வேண்டும் என்றால் என்ன செய்வது? இங்கே தான் மேலே கூறப்பட்ட இரு வகைக் கட்டளைகள் வேறுபடுகின்றன. முதலில் தரப்பட்ட மூன்று கீகள் இணைப்பு (Ctrl + Shift + >) எழுத்து அளவு பட்டியலில் உள்ள எண் படி அளவைப் பெருக்கும், குறைக்கும். எடுத்துக்காட்டாக இந்த கட்டளையைப் பயன்படுத்துகையில் 12க்குப் பின் எழுத்தின் அளவு 14 ஆக உயரும். 14ல் இருந்தால் குறைக்கும்போது 12 ஆகக் குறைக்கப்படும். ஆனால் இரண்டாவது வகைக் கட்டளையான இரண்டு கீ (Ctrl + [) கட்டளையைப் பயன்படுத்துகையில் அவை எழுத்தின் அளவை ஒவ்வொன் றாகக் குறைக்கும், கூட்டும்.

கேள்வி: பி.டி.எப். பைலில் உள்ள டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் காப்பி செய்திட முடியவில்லை. இதனை எப்படி மேற்கொள்வது?
-கா. உலகநாதன், மதுரை.
பதில்: பி.டி.எப். டாகுமெண்ட் ரீடரில் கை அடையாளம் காட்டப்படும். இது உங்கள் டாகுமெண்ட்டைப் பிடித்து மேலும் கீழும் நகர்த்தத் தந்துள்ள வசதியாகும். டெக்ஸ்ட் காப்பி செய்திட, அந்த கர்சரை Select Text tool ஆக மாற்ற வேண்டும். டூல்பாரில் கை ஐகானை அடுத்து பார்த்தால், டெக்ஸ்ட் கர்சர் கிடைக்கும். இதில் பாய்ண்ட்டர் ஆரோ தெரியும். இதுதான் உங்கள் டெக்ஸ்ட் டூல். இதனைத் தேர்ந்தெடுத்து பி.டி.எப். பக்கத்தில் உங்களுக்குத் தேவையான டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து பின் காப்பி செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி பி.டி.எப். டாகுமெண்ட்டில் உள்ள படங்களையும் செலக்ட் செய்திடலாம். அதற்கு “Copy Image” என்று இருப்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுடைய அடோப் ரீடர் தொகுப்பு இந்த வசதியைக் கொண்டிருக்கா விட்டால், லேட்டஸ்ட் அப்டேட்டட் பதிப்பை இறக்கிப் பதியவும். இது முற்றிலும் இலவசமே. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய வெப்சைட் முகவரி: http://get.adobe.com/reader/

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தினைப் பதிந்தவுடன், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைப் பதிய வேண்டுமா? இலவசமாகக் கிடைக்கும் சில ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைக் கூறவும்.
-சி.கடற்கரை, சிவகாசி.
பதில்: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்தவுடன், அடுத்து நீங்கள் இன்ஸ்டால் செய்திட வேண்டிய முதல் புரோகிராம், ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாகும். எந்த ஆண்ட்டி வைரஸ்புரோகிராம் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் இணைந்து போகும் என்பது உங்கள் கேள்வி. அதுவும் இலவச புரோகி ராமாக. நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டம் இன்ஸ்டால் செய்தவுடனேயே, உங்களுக்கு ஒரு பாப் அப் விண்டோ கிடைக்கும். அதில், இன்டர்நெட்டில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைத் தேடவா என்ற கேள்வி இருக்கும்.
கீழ்க்காணும் இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு ஒன்றினைத் தரவிறக்கம் செய்து, உடனடியாக இன்ஸ்டால் செய்திட வேண்டும். ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ், அவிரா ஆண்ட்டி வைரஸ் பெர்சனல் எடிஷன், அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் ஹோம் ஆகியவை இந்த வகையில் சிறந்தவை ஆகும்.

கேள்வி: வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று தலைப்பிட்டு ஒரு இமெயில் வந்தது. இதனைக் கிளிக் செய்த பின்னர், என் மெயில் பாக்ஸில் உள்ள அனைத்து முகவரிகளுக்கும் என் பெயரில் மெயில்கள் செல்கின்றன. நண்பர்கள் என்னைத் திட்டுகின்றனர். என்ன செய்யலாம்?
-கே.எஸ். மில்டன் ஜெபராஜ், கோவை.
பதில்:உங்கள் கம்ப்யூட்டர் ஹேக்கர் ஒருவரிடம் சிக்கிவிட்டது. கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வும். இமெயிலுக்கான பாஸ்வேர்டை மாற்றவும். உங்கள் நண்பர்கள் அனை வருக்கும் விளக்கத்தினை எழுதி, உங்கள் பெயரில் வரும் இமெயில்களைத் திறக்க வேண்டாம் எனக் கூறவும். எந்த லிங்க்கிலும் கிளிக் செய்திட வேண்டாம் என்று வற்புறுத்தவும். உங்கள் கேஷ் மெமரி மற்றும் குக்கீஸ்களைக் காலி செய்திடவும். கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கிறதா என ஸ்கேன் செய்து அவற்றை அழிக்கவும். புதிய இமெயில் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கி அதனைப் பயன்படுத்தவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
viswamtvs - vedarniyam,இந்தியா
08-டிச-201120:37:29 IST Report Abuse
viswamtvs கூகிளிலில் இருந்து வரும் மெசேஜ் எனது போனிற்கு அலெர்ட் செய்யமுடியுமா
Rate this:
Share this comment
Cancel
நீல மைந்தன் - சான்டகிளாரா,யூ.எஸ்.ஏ
08-டிச-201103:49:57 IST Report Abuse
நீல மைந்தன் நண்பர் அருண், "TCPView" என்றொரு சாப்ட்வேர் உள்ளது. நீங்கள் அதையும் பயன் படுத்தலாம், எளிதும் கூட. கூகிள்-இல் தேடினால் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.
Rate this:
Share this comment
Cancel
நீல மைந்தன் - சான்டகிளாரா,யூ.எஸ்.ஏ
08-டிச-201103:39:52 IST Report Abuse
நீல மைந்தன் நண்பர் அருண், நீங்கள் Windows Operating System உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவியிருந்தால், கீழ்கண்ட கட்டளையை DOS Prompt-இல் இயக்கவும். "C:\> netstat -b 2" இதன் மூலம் எந்த சாப்ட்வேர் இணையத்தை தொடர்பு கொள்கிறது என அறியலாம் (சதுர அடைப்புக்குள்). எ.கா.:- (இங்கு iTunes.exe) TCP ComputerName:4905 localhost:5354 ESTABLISHED 7644 [iTunes.exe] பின்னர், Task Manger --> Processes -இல் சென்று ஐயப்படும் சாப்ட்வேர்-ஐ தேர்வு செய்து "End Process" செய்யவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X