பிப்ரவரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2010
00:00

தமிழகம்


பிப். 2: சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறை ஏற்கலாம் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.


பிப். 7: இலங்கை தமிழர் கொல்லப்படுவதை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் நிர்வாகி ரவிச்சந்திரன் தீக்குளித்து மரணம்.


பிப். 9: தமிழகத்தை சேர்ந்த சைமன் என்ற தொழிலாளி ஆப்கன் தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.


பிப். 10: மதுரையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட செல்லமுத்து என்பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

* இசை ரத்னா: கர்நாடக இசை மேதை பண்டிட் பீம்சென் ஜோஷிக்கு பிப்., 10ல் "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. அவரது வீட்டிற்கே சென்று மத்திய உள்துறை கூடுதல் செயலாளர் விருதை வழங்கினார்


பிப். 11: சென்னை போரூர் மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதிக்கு தண்டுவட அறுவை சிகிச்சை.
பிப். 19: சென்னை வக்கீல், போலீஸ் மோதல் காரணமாக மதுரை கோர்ட்டில் ஜப்தி செய்து நிறுத்தப்பட்டிருந்த மூன்று பஸ்களுக்கு தீவைக்கப்பட்டது.


பிப். 21: இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தி.மு.க., இளைஞரணி நடத்திய மனித சங்கிலியில் சிவப்பிரகாசம் என்பவர் தீக்குளித்தார்.


பிப். 22: திருப்பூரை தமிழகத்தின் 32வது மாவட்டமாக உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


* இலங்கை தமிழர் பிரச்னைக்காக தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியை தமிழருவி மணியன் ராஜினாமா.


* இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் "3ஜி' சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி.


பிப். 25: இளையான்குடி எம்.எல்.ஏ., ராஜகண்ணப்பன் தனது பதவியை ராஜினாமா. தி.மு.க.,வில் இருந்தும் விலகினார்.

* இலங்கை போர்நிறுத்தத்தை வலியுறுத்தி சிவகாசியை சேர்ந்த தி.மு.க., தொண்டர் தீக்குளித்து பலி.


பிப். 27: முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
பிப். 28: தூத்துக்குடிக்கு வந்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கறுப்புகொடி காட்ட முயன்ற வைகோ கைது.


இந்தியா


பிப். 7: பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கர்நாடகாவில் 9 பேர் கைது.


பிப். 10: பாகிஸ்தானை தாக்கினால், இந்தியாவை அல்-குவைதா தாக்கும் என அதன் மூத்த கமாண்டர் முஸ்தபா அபு அல் யாஷித் எச்சரிக்கை.


* இந்தியாவில் மார்ட்டின் லூதர் மகன் அமெரிக்காவில் கருப்பின மக்களின் உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் 1959ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்தார். அவரது இந்திய வருகையின் ஐம்பதாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு அவரது மகன் மூன்றாவது மார்ட்டின் லூதர் கிங் பிப்.,10ல் இந்தியா வந்தார். சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மார்ட்டின், தனது இந்திய வருகை மறக்க முடியாத ஒன்று என குறிப்பிட்டார்.


பிப். 11: ஆந்திர சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., க்கள் மோதல்.
* மத்திய அமைச்சர் மகாவீர் பிரசாத் மீது கொலைவழக்கு தொடரப்பட்டது.


பிப். 13: தூக்கு தண்டனை: உ.பி.,யின் நொய்டாவில் குழந்தைகள் பலரை கொலை செய்யப்பட்ட வழக்கில் மொனிந்தர் சிங் மற்றும் அவரது பணியாளர் சுரிந்தர் கோலி ஆகியோருக்கு பிப்., 13ல், நொய்டா சி.பி.ஐ., கோர்ட் தூக்குதண்டனை விதித்தது. பின் செப்.11ல், இவர் களது தூக்கு தண்டனையை அலகாபாத் கோர்ட் ரத்துசெய்தது.


பிப். 17: தேர்தல் முடிவடைய 48 மணி நேரத்திற்கு முன்னதாக கருத்துக்கணிப்பு வெளியிட தடை விதித்தது தேர்தல் ஆணையம்.
பிப். 18: இலங்கை பிரச்னையில் தலையிட முடியாது என பார்லி.,யில் பிரணாப் அறிவிப்பு. பிப். 20: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் நெல்லையில் இயக்குனர் சீமான் கைது.


பிப்., 22: உலகை கவர்ந்த இசை! "ஸ்லம்டாக் மில்லினர்' என்ற ஹாலிவுட் படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்தார். உலக சினிமா கலைஞர்களின் கனவாக திகழும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் பிரமாண்டமான விழாவில் வழங்கப்படுகின்றன. 2008ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா பிப். 22ல் நடந்தது. கடந்த ஆண்டு வெளியான படங்களுக்கான விருது வழங்கும் இந்த விழாவில், இந்தியாவில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படமான "ஸ்லம்டாக் மில்லினர்' படம் எட்டு விருதுகளை வாரி குவித்தது. இதில் சிறந்த பாடல், சிறந்த இசை ஆகிய இரண்டு பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த படத்தில் இடம் பெற்ற "ஜெய் ஹோ' சிறந்த பாடலாக தேர்வானதால் அதற்கான விருதை இந்தி பாடலாசிரியர் குல்சார் உடன் ரஹ்மான் பகிர்ந்து கொண்டார். இதுவரை எந்த இந்தியரும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றதில்லை. ஆஸ்கர் விருதை பெற மேடை ஏறிய ரஹ்மான் "எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் கூறினார். இந்த படத்தில் இடம்பெற்ற "ஜெய்ஹோ' மற்றும் "ஓ சாயா' பாடல்களை மேடையில் தோன்றி பாடிய ரஹ்மான் அனைவரையும் இசை மழையில் நனைய வைத்தார். "ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்காக கோல்டன் குளோப், பாப்டா உள்ளிட்ட சினிமா உலகில் கவுரவமிக்கதாக கருதப்படும் பல விருதுகளை ரஹ்மான் வென்றார். "டைம்' பத்திரிகை 2009ம் ஆண்டில் உலகின் செல்வாக்கு மிக்க 59வது நபராக ரஹ்மானை தேர்வு செய்தது. இதே படத்தில் பணியாற்றிய கேரளாவின் ரெசுல் பூக்குட்டி சவுண்ட் மிக்சிங்பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றார். இந்த படத்தின் இயக்குனரான பிரிட்டனை சேர்ந்த டேனி பாய்லுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது. இந்தியாவில் எடுக்கப்பட்ட குறும்படமான "ஸ்மைல் பிங்கி' படமும் ஆஸ்கர் விருது வென்றது. இதற்கு முன்னர் "காந்தி' படத்தில் உடை வடிவமைப்பாளராக பணியாற்றிய பானு அத்தையா, பிரபல சினிமா இயக்குனர் சத்யஜித் ரே ஆகிய இரண்டு இந்தியர்கள் மட்டுமே ஆஸ்கர் வென்றுள்ளனர். சச


பிப்.23: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் "ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றார்.
பிப். 24: சென்னை ஐகோர்ட் மோதல் தொடர்பாக அ.தி.மு.க., ராஜ்யசபாவில் கடும் அமளி. பிப். 25: மாஜி மந்திரி சுக்ராமுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பு.


உலகம்


பிப். 2: பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சீன பிரதமர் உரையாற்றிய போது ஷூ வீசப்பட்டதால் பரபரப்பு.


பிப். 8: இலங்கையில் போர் நடக்கும் பகுதியில் இருந்து 14 ஆயிரம் தமிழர்கள் வெளியேறினர்.


பிப். 9: பேப்பர் இல்லாத "பேப்பர்': இ-புத்தகங்கள், இ-பேப்பர்கள் படிக்க பிரத்யேகமாக "கிண்டில்' என்ற கருவியை அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் 2007ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த கருவியை மேம்படுத்தி "கிண்டில் 2' என்ற பெயரில் இந்த ஆண்டு பிப்., 9ம் தேதி வெளியிட்டது. 17 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கருவி தற்போது 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பிப். 12: மும்பை தாக்குதல் சதி பாகிஸ்தானில் நடந்ததாக அந்நாடு ஒப்புதல்.

* விண்வெளியில் அமெரிக்க, ரஷ்ய செயற்கைக்கோள்கள் மோதின.

பிப். 13: அமெரிக்காவின் நியூயார்க் அருகில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 49 பேர் பலி.

 * ரயில் விபத்து: மேற்கு வங்கத்தின் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரஸ், பிப்., 13 தேதிஒரிசாவின் ஜாஜ்பூர் ரோடு அருகில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 13 பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்றாக மோதி கிடந்தன. சக்கரங்களும், ஸ்பிரிங்களும் 300 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டன. இந்த விபத்தில் 15 பேர் பலியானார்கள். அடுத்த 2 நாட்களுக்கு அந்த பாதையில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

பிப். 24: புதுக்குடியிருப்பு பகுதியை புலிகளிடம் இருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றியது.

பிப். 25: வங்கதேசத்தில் எல்லை பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவப்படை இடையே மோதல். 77 பேர் பலி.

 * பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிடக்கூடாது என பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

 * "அவுட்சோர்சிங்' செய்யும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையை ரத்து செய்தார் ஒபாமா.

விளையாட்டு

பிப். 1: முதல் வீராங்கனை: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் (பிப்.,1) கலப்பு இரட்டையரில் கோப்பை வென்ற முதல் இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தனர் மகேஷ் பூபதி, சானியா. தவிர, கிராண்ட்ஸ்லாம் பட்டம் (சீனியர் பிரிவு) கைப்பற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார் சானியா.


பிப். 5: கொழும்புவில் நடந்த ஒரு நாள் போட்டியில் இலங்கையை வீழ்த்திய தோனி தலைமையிலான இந்திய அணி, தொடர்ந்து 9 போட்டிகளில் வென்று சாதனை படைத்தது. * சுழல் ஜாலம் பிப். 5: ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்தார் இலங்கையின் முரளிதரன் (503 விக்.,). இவர், அக்ரம் (502 விக்.,) சாதனையை முறியடித்தார்.


பிப். 6: ஐ.பி.எல்., தொடருக்காக, இங்கிலாந்தின் பீட்டர்சன், பிளின்டாப் மிக அதிகமாக ரூ. 7.35 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.


பிப். 8: இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.


பிப். 9: பஞ்சாப்பில் நடந்த தங்க கோப்பை ஹாக்கி தொடரின் பைனலில் நெதர்லாந்து அணி, இந்தியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் கோப்பை வென்றது.


* துலீப் டிராபி பைனலில் மேற்கு மண்டல அணி, 274 ரன்கள் வித்தியாசத்தில் தெற்கு மண்டலத்தை வீழ்த்தி, 17 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. பிப். 10: இலங்கை அணிக்கு எதிரான "டுவென்டி-20' தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
பிப். 27: இந்தியாவுக்கு எதிரான "டுவென்டி-20' தொடரை நியூசிலாந்து அணி 2-0 என கைப்பற்றியது.


Advertisement

 

மேலும் வருடமலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X