மார்ச்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2010
00:00

தமிழகம்


மார்ச்.1: திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜைகள், அபிஷேகங்கள் செய்வது மட்டுமன்றி தங்குமிட வசதிகள் பற்றி அறிந்து கொள்ள இணையதளம் துவக்கப்பட்டது.


* தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள  இணையதளத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.


மார்ச் 2: விடுதலைப்புலிகள் சீருடையில் வைகோ, பிரபாகரனுடன் இருக்கும் போட்டோக்களை இலங்கை ராணுவம் வெளியிட்டது.


* பொதுக்கூட்டத்தில் சட்டவிரோதமாக பேசியதாக பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி கைது.


மார்ச் 5: உண்ணாவிரதம்: இலங்கை பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, ஜெயலலிதா மார்ச் 9ல், சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். மாலையில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். மார்ச் 6: ஐகோர்ட் மோதலின் போது போலீசார் வரம்பு மீறியதாகவும், வக்கீல்கள் முறைகேடாக நடந்ததாகவும் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை.
மார்ச் 7: விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் சென்னையில் கைது.
மார்ச் 10: சூதாட்ட தகராறில் பழநி 30வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் கடத்திக் கொலை.

மார்ச் 12: நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார்.
மார்ச் 15: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாஞ்சில் சம்பத் சிறையில் அடைப்பு. மார்ச் 17: ம.தி.மு.க., வில் இருந்து விலகிய செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் மார்ச்.17ல் தி.முக.,வில் இணைந்தனர். இவர்களைத் தொடர்ந்து ம.தி.மு.க.வின் தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., கண்ணப்பன், கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தி.மு.க.வில் இணைந்தனர். இவர் களில் ராமக்கிருஷ்ணன் கம்பம் இடைத் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார்.


மார்ச் 19: ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.
மார்ச் 26: காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பா.ம.க., விலகல். மார்ச் 27: தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னம் ஒதுக்க உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
மார்ச் 29: வீர வன்னியர் பேரவை நிறுவனர் ஜெகத்ரட்சகன் தி.மு.க.,வில் இணைந்தார்.

மார்ச் 31: நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் உறவினர்கள் ஐந்து பேரை அமெரிக்காவில் சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை.
இந்தியா
மார்ச் 1: லோக்சபா தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.


மார்ச் 8: ஒரிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதாதளத்துக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ., வாபஸ்.
* வருண்... சரண்! மறைந்த பிரதமர் இந்திராவின் பேரனான வருண், உ.பி.,யின் பிலிபித் தொகுதியில் பா.ஜ., சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் மார்ச் 6ல் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மத விரோதத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து மார்ச் 28ம் தேதி பிலிபித் கோர்ட்டில் வருண் சரணடைந்தார். பின்னர் கோர்ட் உத்தரவுப்படி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின் ஏப்ரல் 16ல் ஜாமீனில் விடுதலை ஆனார்.

மார்ச் 9: புதிய நீதிபதி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கோகலே, மார்ச் 9ல், ராஜ்பவனில் பதவியேற்றுக் கொண்டார். இவர் அலகாபாத் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்.

மார்ச் 11: ஒரிசாவில் குரல் ஓட்டெடுப்பு மூலமாக நவீன் பட்நாயக் அரசு வெற்றி.

மார்ச் 17: மேற்குவங்கத்தின் ஜல்பைகுரியில் சைக்கிள் குண்டுவெடித்ததில் 2 பேர் பலி.

மார்ச் 19: தெல்கிக்கு 7 ஆண்டு முத்திரைத்தாள் மோசடி வழக்கில் மூளையாக செயல்பட்ட அப்துல் கரீம் தெல்கிக்கு மார்ச் 19ல் ஆமதாபாத் சி.பி.ஐ., கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குறைவான தண்டனை வழங்க வேண்டுமென தெல்கி விடுத்த வேண்டுகோளை நீதிபதி நிராகரித்தார். அவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மார்ச் 22: நடிகை ஜேட்கூடி பிரிட்டன் காலமானார்
மார்ச் 27: குஜராத் வன்முறை தொடர்பாக அமைச்சர் மாயா கோட்னானி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
* குஜராத்தில் 2002ம் ஆண்டு நிகழ்ந்த வன்முறை வழக்கில் அம்மாநில அமைச்சர் மாயா கோட்னானிக்கு வழங்கிய ஜாமீனை ஐகோர்ட் ரத்து செய்தது. இதையடுத்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு போலீசில் அவர் சரணடைந்தார்.
மார்ச் 28: மத்திய அமைச்சர் பதவியை பா.ம.க., அமைச்சர்கள் அன்புமணியும், வேலுவும் ராஜினாமா செய்தனர்.
மார்ச் 31: நடிகர் சஞ்சய் தத் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது சுப்ரீம் கோர்ட். * ஐஸ்வர்யா ராய், கணபதி ஸ்தபதி, எழுத்தாளர் ஜெயகாந்தன் உள்ளிட்டோருக்கும் "பத்ம' விருதுகள் வழங்கப்பட்டன.
உலகம்

மார்ச் 6: தேசத்தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள் மார்ச் 6ல் நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டன. காந்திஜி பயன்படுத்திய மூக்குக்கண்ணாடி, பாக்கெட் கடிகாரம், தட்டு, குவளை, செருப்பு ஆகியவற்றை ஜேம்ஸ் ஓடிஸ் என்பவர் ஏலத்தில் விட்டார். இதில் விஜய் மல்லையா சார்பில் கலந்து கொண்ட டோனி பேடி 9.3 கோடி ரூபாய்க்கு இவற்றை ஏலம் எடுத்தார்.

மார்ச் 10: இலங்கையில் நடந்த ராணுவ தாக்குதலில் 129 தமிழர்கள் பலி.

* தெற்கு இலங்கையில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி. அமைச்சர் விஜயசேகரா படுகாயம்.

மார்ச் 11: ஜெர்மனியின் வின்னன்டென் பகுதியில் ஒரு பள்ளியில் நுழைந்து ஒருவன் வெறித்தனமாக சுட்டதில் 10 பேர் பலி.

மார்ச் 16: சர்வதேச விண்வெளி நிலைய பராமரிப்பு பணிகளுக்காக அமெரிக்காவின் டிஸ்கவரி விண்கலம் 7 வீரர்களுடன் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

* ஆப்கானிஸ்தானின் காந்தகாரில் தலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் பலி.
மார்ச்.17: கென்யாவில் குற்றவாளிகளிடம் இருந்து 2007ம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் தலைநகர் நைரோபியில் போலீஸ் பாதுகாப்புடன் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

மார்ச்.22: முஷாரப் ஆட்சிக்காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட இப்திகார் சவுத்ரி 16 மாதத்திற்கு பின் பாக்.சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மீண்டும் பதவி ஏற்றார்.
மார்ச் 26: இலங்கையில் வன்னிப் பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 112 பேர் பலி.

மார்ச் 27: பாகிஸ்தானின் ஜம்ரூத் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 50 பேர் உடல் சிதறி பலி.

* இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே அணை உடைந்து 70 பேர் பலி. மார்ச் 30: பாகிஸ்தானின் வாகா எல்லை அருகே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 போலீசார் பலி.


விளையாட்டு
மார்ச் 1: நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது.
மார்ச் 3: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 8 பேர் காயம் அடைந்தனர்.
மார்ச் 8: சீன தைபே அணிக்கு எதிரான "ஆசிய-ஓசியானா மண்டல குரூப்-1' டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில், இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
* லினாரஸ் செஸ் தொடரில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 4வது இடம் பிடித்தார்.

மார்ச் 14: நியூசிலாந்து மண்ணில் கடந்த 33 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை வென்று இந்திய அணி(3-1) வரலாறு படைத்தது.
மார்ச் 15: ஜூனியர் ஹாக்கி தொடரின் பைனலில் பாகிஸ்தான் அணி "கோல்டன் கோல்' மூலம் இந்திய அணியை வீழ்த்தி, கோப்பை வென்றது.
மார்ச் 20: இஸ்தான்புல் கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.
மார்ச் 21: ஹாமில்டன் போட்டியில் வென்ற இந்திய அணி, நியூசிலாந்து மண்ணில் 33 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
* பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3வது இடம் பிடித்தது.
மார்ச் 22: பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை வீழ்த்தி, கோப்பை வென்றது.
மார்ச் 24: லோக்சபா தேர்தல், பாதுகாப்பு பிரச்னை காரணமாக, இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) இரண்டாவது "டுவென்டி-20' தொடர் தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றப்பட்டது. மார்ச் 25: கோல்கட்டா நைட் ரைடர்ஸ் (ஐ.பி.எல்.,) அணியின் கேப்டன் பதவியிலிருந்து சவுரவ் கங்குலி நீக்கம்.


Advertisement

 

மேலும் வருடமலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X