3ஜி வை-பி இணைந்த பட்ஜெட் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2011
00:00

தொலை தொடர்புத் துறையின் நவீன அறிமுகமாக மக்களிடையே பரவி வருவது 3ஜி பயன்பாடு. தொடக்கத்தில் இதெல்லாம் நமக்கெதுக்கு என்று எண்ணியவர்கள், தங்கள் மொபைல் சேவை நிறுவனத்திடம் கேட்டு பெற்று பயன்படுத்தத் தொடங்கி யுள்ளனர். இந்த வசதியுடன் வை-பி எனப்படும் வசதியும் பெரும்பாலான போன்களில் கொடுக்கப்படுகிறது. இந்த வகையில், பலரும் வாங்கும் வகையில் ரூ.10,000க்கும் குறைவான விலையில் மக்கள் அதிகம் வாங்கும் மொபைல் போன்கள் எவை என்று சந்தையில் சுற்றிப் பார்க்கும் போது, கீழ்க்காணும் போன்கள் தென்பட்டன.

1. மைக்ரோமேக்ஸ் க்யூ 80
: இது ஒரு ஸ்மார்ட் போன் இல்லை என்றாலும், இதன் 3G மற்றும் WiFi சப்போர்ட் இதற்கு தனி அந்தஸ்தினைத் தந்துள்ளது. ஜாவா அடிப்படையில் இயங்கும் இந்த மொபைல் போனில் நிம்பஸ், நியூ ஷன்ட், என்.ஜி.பே மற்றும் புளூம்பெர்க் போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளன. எளிதாக டைப் செய்திட வசதியாக இதன் கீ போர்ட் அமைக்கப் பட்டுள்ளது. மற்ற மைக்ரோமேக்ஸ் போன்களுக்கு மாற்றாக இதில் ஆப்டிகல் ட்ராக் பேட் தரப்பட்டுள்ளது. 240 x 320 ரெசல்யூசன் கொண்ட 2.4 அங்குல டி.எப்.டி. திரை, நெட்வொர்க் இணைப்பிற்கு 3G, EDGE/GPRS, WiFi புளுடூத், யு.எஸ்.பி.2., 3 மெகா பிக்ஸெல் கேமரா, வீடியோ பதிவு, இரண்டாவதாக விஜிஏ கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக்கெட், 8 ஜிபி வரை அதிகப்படுத்தும் திறன் கொண்ட மெமரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் அதிக பட்ச விலை ரூ. 4,900.

2. மைக்ரோமேக்ஸ் ஏ 70: இந்த மொபைல் போன் குறித்து ஏற்கனவே இந்த பகுதியில் எழுதப்பட்டது. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், நெட்வொர்க் இணைப்பிற்கு 3G, EDGE/GPRS, WiFi புளுடூத், 5 மெகா பிக்ஸெல் ஆட்டோ போகஸ் கேமரா, 32 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி ஆகியவை மற்ற மைக்ரோமாக்ஸ் போன்களிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,200.

3. லாவா எஸ்12: இந்நிறுவனம் இன்னும் பிரபலமாகவில்லை என்றாலும், இந்த எஸ்12 மொபைல் பார்க்கப்பட வேண் டிய ஒன்றாகும். ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் இல்லாத ஒருவகை வடிவமைப்பு இதில் உள்ளது. இதில் ப்ராசசர் இயங்கிய போதும், இதன் முப்பரிமாண யூசர் இன்டர்பேஸ் எந்த பிரச்னையும் இன்றி இயங்குகிறது. இந்தியாவை மையப்படுத்தி பல அப்ளிகேஷன்கள் இதில் தரப்படுள்ளன. டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தி தளம் தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி சார்ஜ் செய்த பின்னர் இரண்டு நாட்களுக்குப் பயன்படுத்தும் வகையில் மின்சக்தியை அளிக்கிறது. இதன் மற்ற அம்சங்கள்:
480 x 320 பிக்ஸல்களுடன் 3.2 டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், நெட்வொர்க் இணைப்பிற்கும் ஹாட் ஸ்பாட் இயக்கத்திற்கும் 3G, EDGE/GPRS, WiFi தொழில் நுட்பம், அஎககு சப்போர்ட்டு டன் GPS, A2DP இணைந்த புளுடூத், 5 மெகா பிக்ஸெல் கேமரா, 640 x 480 ரெசல்யூசனில் வீடீயோ பதிவு, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி கொண்ட நினைவகம். இதன் அதிக பட்ச விலை ரூ.8,200.

4. சாம்சங் காலக்ஸி பிட் எஸ் 5670: ஆண்ட்ராய்ட் 2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், சற்றே பெரிய திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் வை-பி மற்றும் 3ஜி சேவையினைத் தேடுபவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. SWYPE இதில் பதியப்பட்டு, DNSe ஒலி தொழில் நுட்பத்துடன் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் கொண்ட 5 எம்பி கேமரா பல செட்டிங்ஸ் வசதியுடன் உள்ளது. இதன் ரெசல்யூசன் 320 x 240 ஆக உள்ளது. தொடுதிரை இயக்கத்தில் TouchWiz 3.0 UI யூசர் இன்டர்பேஸ் இயங்குகிறது. நெட்வொர்க் இணைப்பிற்கும் ஹாட் ஸ்பாட் இயக்கத்திற்கும் 3G, EDGE/GPRS, WiFi தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. கூடுதலாக, AGPS சப்போர்ட்டுடன் GPS, A2DP இணைந்த புளுடூத் கிடைக்கிறது. 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி கொண்ட நினைவகம் தரப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,100.

5.நோக்கியா இ5: ஓராண்டுக்கு முன்னர் சந்தையில் இது அறிமுகமாகியிருந்தாலும், இன்றும் பலரின் விருப்பத் தேர்வாக உள்ளது. வசதியான குவெர்ட்டி கீ போர்ட், சிம்பியன் பதிப்பு 9.3 இயக்கம் என அனைத்தும் கூடுதல் வசதியுடன் உள்ளன. துல்லிதமான, ரம்மியமான ஒலி வெளிப்பாட்டினைத் தரும் சிறப்பினைக் கட்டாயம் இங்கே குறிப்பிட வேண்டும். கூடுதலாக எம்.எஸ்.ஆபீஸ், ஸிப் பைல் வசதி, பி.டி.எப். ரீடர் ஆகியவையும் கிடைக்கின்றன. இதன் பேட்டரியும் நீண்ட நாள் உழைப்பதாகவும், நீண்ட நேரப் பயன்பாட்டினைத் தருவதாகவும் தரப்பட்டுள்ளது. மற்ற சிறப்பம்சங்கள்: இதன் திரை 2.3 அங்குல அகலத்தில் டி.எப்.டி. திரை 320 x 240 ரெசல்யூசனுடன் பளிச்சிடுகிறது. நெட்வொர்க் இணைப்பிற்கும் ஹாட் ஸ்பாட் இயக்கத்திற்கும் 3G, EDGE/GPRS, WiFi தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. 5 எம்பி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக் கூடிய ராம் நினைவகம் உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.8,700.
இந்த பட்டியலில் சில மொபைல் போன்கள் விடுபட்டுப் போயிருக்கலாம். இருப்பினும் மேலே தரப்பட்டவை பலரின் விருப்பத் தேர்வாக, குறைந்த விலையில் கிடைப்பனவாக இருப்பதால் தரப்பட்டுள்ளன.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பிகா.M - செல்லூர்மதுரை,இந்தியா
18-டிச-201106:12:04 IST Report Abuse
அம்பிகா.M சாம்சங் மொபைல் தான் இருகுறதில பெஸ்ட் மொபைல். மத்த மொபைல் எல்லாம் சார்ஜ் நிக்க மாட்டிங்குது. வேஸ்ட். அதுக்கு சாம்சங் எவ்வளவோ பெஸ்ட். i like samsung mobiles...
Rate this:
Share this comment
Cancel
mani - thiruvaiyaru,இந்தியா
15-டிச-201113:08:57 IST Report Abuse
mani சாம்சங் மொபைல் தான் இருகுறதில பெஸ்ட் மொபைல். மத்த மொபைல் எல்லாம் சார்ஜ் நிக்க மாட்டிங்குது. வேஸ்ட். அதுக்கு சாம்சங் எவ்வளவோ பெஸ்ட். i like samsung mobiles
Rate this:
Share this comment
Cancel
ஜெயராம் - சென்னை,இந்தியா
14-டிச-201111:28:30 IST Report Abuse
ஜெயராம் Samsung Galaxy Y ரூ.7,௦௦௦000 தில் ஆண்ட்ராய்ட். மிகவும் அருமையான மொபைல்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X