ஏப்ரல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2010
00:00

தமிழகம்


ஏப். 1: சேது சமுத்திர திட்டத்துக்காக நடந்த உண்ணாவிரதம் தொடர்பாக கருணாநிதி மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி.


ஏப். 2: இயக்குனர் பாலாஜி காலமானார்.

ஏப். 6: புதுச்சேரி கவர்னர் குஜ்ஜார் காலமானார்
ஏப். 8: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்.


ஏப். 9: தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் இரா.லட்சுமிபதிக்கு கோவை பாரதியார் பல்கலை., கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
ஏப். 19:பிரபாகரன் பயங்கரவாதி அல்ல, எனது நண்பர் என தமிழக முதல்வர் கருணாநிதி பேட்டி.


* தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ம.தி.மு.க., பிரமுகர் நாஞ்சில் சம்பத் கைது ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.
ஏப். 23: இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து தமிழகத்தில் தி.மு.க., சார்பில் "பந்த்'.
* இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு கோரி திருப்பூரில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை.
ஏப். 25: தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான "சிடி'க்கள் வைத்திருப்பதாக சசிகலா கணவர் நடராஜன் வீட்டில் போலீசார் திடீர் ரெய்டு.
* அதிகாரி கைது பாஸ்போர்ட் வழங்க ஏஜன்ட்களிடம் லஞ்சம் வாங்கியதாக ஏப்., 25ல் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன், சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


ஏப். 27: தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி விடுதலை.
* முதல்வர் உண்ணாவிரதம்: இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான சண்டையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். போர்நிறுத்தம் குறித்த உலக நாடுகளின் கோரிக்கையை அந்நாடு ஏற்கவில்லை. இலங்கையை கண்டித்து ஏப்., 27ம் தேதி காலையில் சென்னையில் முதல்வர் கருணாநிதி திடீரென காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். தமிழர் பகுதிகளில் குண்டுவீச்சு மற்றும் விமான தாக்குதலை நிறுத்துவதாக இலங்கை அறிவித்ததை தொடர்ந்து அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.


ஏப். 29: ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி.
* விபத்து மர்மம்: சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு புறப்படவிருந்த புறநகர் ரயிலை, மர்ம மனிதன் ஒருவன் கிளப்பி அசுர வேகத்தில் ஓட்டிச்சென்றான். ரயில் கட்டுப்பாட்டை இழந்து, வியாசர்பாடி ஜீவா ரயில்நிலையத்தில் நின்று கொண்டிருந்த எண்ணெய் சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் பலியானார்கள். ஏப்., 29ல் நடந்த இந்த சம்பவத்தில் ரயிலை ஓட்டிக்கொண்டு வந்தது யார் என்பது பற்றிய மர்மம் நீடிக்கிறது.


இந்தியா
ஏப். 1: ஒரிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் வீசிய கடும் சூறாவளிக்காற்றில் 10 பேர் பலி.

* கார் கனவு பலித்தது: டாடா நிறுவனத்தின் ஒரு லட்ச ரூபாய் காரான "நானோ' இந்த ஆண்டு அறிமுகம் ஆனது. இதற்கான புக்கிங் நாடு முழுவதும் ஏப்., 1ல் துவங்கியது. முதல் கட்டமாக ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்ய புக்கிங் நடந்தது. டில்லி, மும்பை போன்ற நகரங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்ட கார்களை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டு சென்றனர்.


ஏப்., 2 : சீக்கியர்களின் கோபம்: 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் காங்கிரசின் ஜெகதீஷ் டைட் லருக்கு எந்த தொடர்பும் இல்லை என சி.பி.ஐ., ஏப்., 2ல் டில்லி ஐகோர்ட்டில் தெரிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீக்கியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து லோக்சபா தேர்தல் போட்டியிலிருந்து டைட்லர் விலகினார்.


ஏப். 6: அசாமின் கவுகாத்தி நகரில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 8 பேர் பலி.
* ஐ.நா., பொதுச்சபை செயலரின் ஆலோசகராக நிருபம் சென் நியமனம்.
ஏப்.7: வருணை ரோடு ரோலர் கொண்டு நசுக்கியிருப்பேன் என கூறிய லாலுவுக்கு எதிராக வழக்கு பதிவு.
ஏப். 10: டில்லி அருகே குருஷேத்ராவில் காங்கிரஸ் எம்.பி., நவீன் ஜிண்டால் மீது ஓய்வுபெற்ற ஆசிரியர் "ஷூ'வை வீசியதால் பரபரப்பு.
ஏப். 14: டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்
ஏப். 15: பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் போலீசாருடன் நடந்த மோதலில் 5 போலீசார் கொல்லப்பட்டனர்.
* மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் வக்கீலாக அஞ்சலி வாக்மரே நியமிக்கப்பட்டதை, சிறப்பு கோர்ட் ரத்து.
ஏப். 17: மும்பை தாக்குதல் பயங்கரவாதி கசாப் தொடர்பான வழக்கு விசாரணை துவங்கியது.
ஏப். 18: உ.பி., முதல்வர் மாயாவதிக்கு எதிராக அவதூறாக பேசிய பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மீது வழக்கு.
ஏப். 20: "பி.எஸ்.எல்.வி.,-சி 12' ராக்கெட் "ஆர்.ஐ., சேட் -2' மற்றும் "அனு சேட்' ஆகிய இரு செயற்கைகோள்களை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் செலுத்தியது.
ஏப். 21: மகாராஷ்டிரா மாநிலம் துலே தொகுதியில் நடிகர் ஜிதேந்திரா பிரசாரம் செய்து கொண்டிருந்த போது செருப்பு வீச்சு.
* புதிய தலைமை கமிஷனர்: இந்தியாவின் 16வது தலைமை தேர்தல் கமிஷனராக நவீன் சாவ்லா ஏப்.21ல், பதவி ஏற்றார். இவருடன் தேர்தல் கமிஷனர்கள் வி.எஸ்.சம்பந்த் (இடது) மற்றும் எஸ்.ஒய்.குரேஷி.

* விஷ்ணு பிரபாகர் (சாகித்ய அகாடமி விருது பெற்றவர்) காலமானார்.


ஏப். 22: பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பந்த் அனுசரித்த மாவோயிஸ்ட் நக்சலைட்கள், 700 பயணிகளுடன் சென்ற ரயிலைச் சிறை பிடித்தனர்.
ஏப். 23: அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் விஜயகுமாருக்கு பிரதமர் விருதை துணை ஜனாதிபதி அமீது அன்சாரி வழங்கினார்.
ஏப். 26: நடிகர் பெரோஸ்கான் காலமானார். ஏப். 28: போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒட்டாவியோ குட்ரோச்சியின் பெயர் சி.பி.ஐ.,யின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்கம்.


ஏப். 31: எழுத்தாளர் கமலா சுரைய்யா காலமானார்
உலகம்


ஏப். 3: அமெரிக்காவின் நியூயார்க் மாகாண குடியேற்ற சேவை அலுவலகத்தில் மர்ம நபர் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 14 பேர் பலி.
* மலேசியாவின் புதிய பிரதமராக நஜீப் ரசாக் பதவியேற்றார்.


ஏப். 5: புதுக்குடியிருப்பை இலங்கை ராணுவம் கைப்பற்றியது.
* பாகிஸ்தானில் சக்வால் என்ற இடத்தில் மசூதி அருகே தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி.
ஏப். 6: இத்தாலியில் ரோம் அருகே உள்ள அகுயிலாவில் பூகம்பம் ஏற்பட்டதில் 90 பேர் பலி.
ஏப். 11: இலங்கையில் முல்லைத்தீவு அருகே நடந்த சண்டையில் 47விடுதலைப்புலிகள் பலி.
ஏப். 15: அமெரிக்க கப்பல் மீது சோமாலிய கொள்ளையர்கள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
ஏப்.19: முல்லைத்தீவில் நடந்த சண்டையில் 17 விடுதலைப்புலிகள் பலி.
ஏப். 20: இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தி பிரிட்டன் பார்லிமென்ட்டுக்கு வெளியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏப். 22: இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை ஐ.நா., விசாரிக்க வேண்டுமென சர்வதேச மனித உரிமை அமைப்பு வலியுறுத்தியது.
ஏப். 23: ஸ்பெயின் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், போலந்து சென்றார்.
விளையாட்டு
ஏப். 6: உலக சாதனை: நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில், இந்திய வீரர் டிராவிட் டெஸ்ட் அரங்கில் அதிக "கேட்ச்' (183) பிடித்த "பீல்டர்' என்ற உலக சாதனை படைத்தார். இவர், ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் (181 "கேட்ச்') சாதனையை தகர்த்தார்.
ஏப். 7: 41 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து மண்ணில் ஏப்., 7ல் தோனி தலைமையிலான இந்திய அணி சாதித்து காட்டியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என கைப் பற்றி, கோப்பை வென்றது. இதன் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் 1967-68 ம் ஆண்டு பட்டோடி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரை வென்றிருந்தது.


ஏப். 10: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில், இந்தியாவின் ககன் நரங் வெண்கலப் பதக்கம் வென்றார்.


ஏப். 12: மலேசியாவில் உள்ள இபோ நகரில் நடந்த, 18வது அஸ்லான் ஷா ஹாக்கி தொடரின் பைனலில் இந்திய அணி, மலேசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 13 ஆண்டுகளுக்கு பின், 4வது முறையாக கோப்பை வென்றது.
ஏப். 15: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், 50 மீ., ரைபிள்-3 தனிநபர் பிரிவில், இந்தியாவின் ககன் நரங் தங்கப் பதக்கம் வென்றார். ஏப். 18: இரண்டாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் தென் ஆப்ரிக்காவில் துவங்கியது.


ஏப். 25: பாதுகாப்பு காரணமாக சென்னையில் நடக்க இருந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா மறுத்தது. இந்திய அணி வென்றதாக அறிவிப்பு.


Advertisement

 

மேலும் வருடமலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X