கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2011
00:00

கேள்வி: என் பிரவுசரில் (கூகுள் குரோம்) உள்ள இணைய தள முகவரிகள் அனைத்தையும் அதன் மெமரியில் இல்லாமல் நீக்க முடியுமா? மற்ற பிரவுசர்களிலும் நீக்கும் வழிகளைக் கூறவும்.
-ஆ. ஸ்வாமிராஜ், தேவாரம்.
பதில்: பிரவுசரின் சர்ச் பாரில் உள்ள அனைத்து இணைய தளங்களின் முகவரி களையும் எளிதாக நீக்கலாம். ஒரு சில நிமிடங்களில் இதனை மேற்கொள்ளலாம். கூகுள் குரோம் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். கூகுள் டூல்பார் சர்ச் பாக்ஸில் உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடுங்கள். பின்னர் கிடைக்கும் மெனுவில் Clear History என்பதில் கிளிக் செய்திடவும். உங்கள் டூல்பார் எந்த சர்ச் ஹிஸ்டரியையும் சேவ் செய்திடக் கூடாது என எண்ணினால், வலது மேலாக உள்ள பைப் ரிஞ்ச் ஐகானில் கிளிக் செய்திடவும். இதில் சர்ச் (Search) என்னும் டேப்பினைக் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Store search history on my computer என்பதற்கு எதிராக உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இறுதியாக Save என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், அதனைத் திறந்து Ctrl+Shift+Delete பட்டன்களை ஒருசேர அழுத்தவும். அடுத்து, History மற்றும் Form data என்ற செக் பாக்ஸ்களில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் Delete என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்த பின்னர், டூல்ஸ் (Tools) மெனு செல்லவும். அல்லது AltT என்ற கீகளை அழுத்தவும். அடுத்து History என்பதனைத் தேர்ந்தெடுத்து, அதன் பின்னர் Clear Recent History என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Time range என்பதன் அருகே உள்ள கீழ்விரி மெனுவினைக் கிளிக் செய்திடவும். அதில் எந்த கால அளவில் உள்ள ஹிஸ்டரியை நீக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுத்து குறிக்கவும். அடுத்து Details என்பதன் அருகே உள்ள மெனுவினைக் கிளிக் செய்து பெறவும். அடுத்து Browsing & Download History மற்றும் Form & Search History என்று உள்ளவற்றின் எதிரே டிக் அடையாளங்களை ஏற்படுத்தவும். அடுத்து Clear Now என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
உங்கள் சர்ச் பாரில் உள்ள வெப்சைட் முகவரிகள் அனைத்தும் நீக்கப் பட்டிருக்கும்.
இது நல்ல கேள்வி. பலரின் எதிர்பார்ப்புகளுக்கு விடை கொடுக்கும் கேள்வி. தேவாரம் ஸ்வாமிராஜுக்கு நன்றி.

கேள்வி: குரோமா கீ என ஒன்று உள்ளதாக ஆங்கில கம்ப்யூட்டர் இதழில் படித்தேன். இது எந்த கீயைக் குறிக்கிறது?
-என்.நித்யா கிருஷ்ணன். சென்னை
பதில்: யாராவது உங்களிடம் கேட்டிருப்பார்கள். படித்திருந்தால், அதிலேயே அது என்ன விபரம் என்று தெரிந்திருக்குமே. இருப்பினும் சொல்கிறேன். இது கம்ப்யூட்டர் கீ போர்டுடன் சம்பந்தப் பட்டதல்ல. இரண்டு இமேஜ்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் தொழில் நுட்பம். இதன் முழுப்பெயர் Chroma key compositing அல்லது chroma keying. இது வீடியோ தயாரிப்பு அல்லது வீடியோ தயாரித்த பின்னர் எடிட்டிங்கில் பயன்படுகிறது. இதனை கிரீன் ஸ்கிரீன் அல்லது புளு ஸ்கிரீன் எனவும் சொல்கின்றனர். எளிமையாக ஓர் எடுத்துக்காட்டு தரட்டுமா! நம் கதாநாயகனும் கதாநாயகியும் நயாகரா நீர்வீழ்ச்சியின் முன் ஆடிப் பாடுவதாக ஒரு காட்சியை நீங்கள் சில நொடிகள் பார்க்கலாம். இதற்காக மெனக்கெட்டு திரைப்பட யூனிட்டாகப் பலரை அழைத்துக் கொண்டு, நயாகரா நீர்வீழ்ச்சி செல்ல முடியுமா என்ன? ஒரு பச்சை அல்லது நீல நிறத்தில் பெரிய துணி ஒன்றைப் பின்னணியில் கட்டி, கதாநாய கனையும் கதா நாயகியையும் ஆட விட்டு முதலில் படம் எடுப்பார்கள். பின்னர் நயாகரா நீர்வீழ்ச்சியின் வீடியோ காட்சி யினை, ஏற்கனவே எடுத்த ஆடல் பாடல் காட்சியுடன் இணைப்பார்கள். நமக்கு நீர்வீழ்ச்சி முன் எடுத்தது போலவே தெரியும். இதுதான் குரோமா கீ தொழில் நுட்பம்.

கேள்வி: நான் ஒரு டிஜிட்டல் போட்டோகிராபர். அடுத்து வீடியோ கிராபராக முயற்சிகள் எடுத்து வருகிறேன். எனக்கு இன்டர்நெட்டில் இலவச மாகக் கிடைக்கும் வீடியோ பார்மட் மாற்றும் புரோகிராம்களில் சிறந்த புரோகிராம் ஒன்றைக் கூறவும்.
-தா. கிருஷ்ணன், திண்டுக்கல்.
பதில்: தங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள். தங்களின் நீண்ட கடிதத்தினைப் படித்து ஏற்கனவே தாங்கல் மேற்கொண்ட முயற்சிகளைப் படித்தேன். இணையத்தில் பல ஆடியோ வீடியோ கன்வர்டர் புரோகிராம்கள் உள்ளன. சில கட்டணம் செலுத்திப் பெற வேண்டும். சில இலவசமாகக் கிடைக்கும். உங்களுக்கு ஹேண்ட் பிரேக் (Handbrake): என்ற புரோகிராம் சரியாக இருக்கும். இதனை http://handbrake.fr/?article=download என்ற இணைய தள முகவரியில் பெறலாம். ஏறத்தாழ அனைத்து டிவிடி பார்மட் பைல்களையும் இது மாற்றித் தருகிறது. இன்புட் வீடியோவிற்கான பிட் ரேட் கால்குலேட்டர், ஓரளவிற்கு கிடைக்கும் சப் டைட்டில் வசதி, வீடியோ படங்களை இன்டர்லேஸ் செய்வது, கிராப் மற்றும் ஸ்கேலிங் செய்வது போன்றவற்றையும் இதில் மேற்கொள்ளலாம். இது மாறா நிலையில் வீடியோ பார்மட்டினை .m4v என்ற பார்மட்டுக்கு மாற்றும். ஆப்ஷன் கட்டம் பெற்று உங்களுக்கு வேண்டிய பார்மட்களையும் பெறலாம். ஆனால் அது வெளிப்படையாகக் காட்டும்படி இதன் யூசர் இன்டர்பேஸ் இல்லை.

கேள்வி: விண்டோஸ் விஸ்டா இயக்கம் பயன்படுத்தி வருகிறேன். இதில் ஐகான்களின் அளவை எப்படி பெரிது படுத்துவது?
-கா. உமாராணி, திருத்தங்கல்.
பதில்: விண்டோஸ் விஸ்டாவில் இந்த வேலை மிக மிக எளிது. டெஸ்க் டாப் சென்று கண்ட்ரோல் கீயினை அழுத்திக் கொண்டு மவுஸின் ஸ்குரோல் வீலை உருட்டவும். ஐகான்கள் சிறியதாகவும் பெரியதாகவும் மாறுவதனைக் காணலாம். இன்னொரு வழியும் உள்ளது. டெஸ்க் டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “View” என்பதில் ஸ்மால், மீடியம் மற்றும் பெரியது என மூன்று அளவில் இவற்றை அமைக்க வழி தரப்பட்டிருக்கும். இதனையும் அழுத்தி ஐகானின் அளவை அமைக்கலாம்.

கேள்வி: டைனமிக் கன்டென்ட் என வெப்சைட் பக்கங்களில் எதனைக் குறிப்பிடு கின்றனர்? இதற்கு மாறாக ஏதேனும் உள்ளதா?
-சா. முத்துவேல், சாத்தங்குடி.
பதில்: இன்டர்நெட் தளங்களில் நாம் உலா வருகையில், நம்மிடம் கருத்து கேட்டு நிரப்பச் சொல்லி சில படிவங்கள் காட்டப்படும். நம்மிடம் தகவல்களைக் கறக்கும் இத்தகைய கட்டங்கள் சார்ந்த வற்றை ஆக்டிவ் கன்டென்ட் என்று அழைக்கின்றனர். இதற்கு மாறாக டைனமிக் கன்டென்ட் என்று ஒன்று உண்டு. இது அனிமேஷன் படங்கள், ஸ்ட்ரீமிங் வீடியோ, அவ்வப்போது தகவல் களுக்கு ஏற்ப மாறும் வரைபடங்கள் போன்றவற்றைக் குறிக்கும்.

கேள்வி: ஹார்ட்வேரில் மாற்றங்கள் ஏற்படுத்துவது குறித்து ஒரு தமிழ் கட்டுரை ஒன்றைப் படிக்கையில் சில மாற்றங்களை செய்தால் BSOD ஏற்படலாம் என்று ஒரு குறிப்பு தரப்பட்டிருந்தது. இதன் பொருள் என்ன?
-கா. நெல்சன் ராஜ், பெரம்பூர்.
பதில்: தற்போது வரும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இது போல ஏற்படுவதில்லை. நீங்கள் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்துப் படிக்கையில் இந்த குறிப்பினைப் பார்த்தீர்கள் என்று தரவில்லை. விண்டோஸ் 98ல் இது அதிகம் ஏற்பட்டது. தற்போது ஹார்ட்வேரில் மாற்றங்களைச் செய்தால் அது குறித்த எர்ரர் செய்தி மட்டுமே கிடைக்கிறது. ஏற்படுவதில்லை. Blue Screen of Death என்பதன் சுருக்கமே இது. ஹார்ட்வேரில் பிரச்னை ஏற்பட்டு கம்ப்யூட்டர் இயங்காமல் முடங்குகையில் கம்ப்யூட்டர் திரை முழுவதும் நீல நிறத்தில் காட்டப்படும். அதில் என்ன பிரச்சினை என்று ஒரு எர்ரர் கோட் எண் காட்டப்பட்டு சிறிய அளவில் பிரச்சினை என்று கோடி காட்டப்படும். இந்த பிரச்னை குறித்த கோட் எண் மூலம் ஹார்ட்வேர் படித்தவர்கள், பிரச்னையைப் புரிந்து கொண்டு அதற்கான தீர்வை மேற்கொள்ள முயற்சி செய்வார்கள்.

கேள்வி: எனக்கு அனுப்பப்பட்ட வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள டேபிள்கள் சாதாரணமாக இல்லாமல், கண்களையும் கருத்தையும் கவரும் வண்ணம் வித விதமாக உள்ளது. இதனை எப்படி தயாரித்து டாகுமெண்ட்டில் இணைப்பது?
-ஆ. ஷீலா பால்ராஜ், திருநெல்வேலி.
பதில்: தயாரித்து ஒட்டும் வேலை எல்லாம் வேண்டாம் சகோதரி. வேர்ட் தொகுப்பிலேயே இந்த வசதி தரப்பட்டு ள்ளது. தாங்கள் இன்னும் வேர்ட் 2003 பயன் படுத்து வதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
முதலில் ஒரு டேபிளை உருவாக்குங்கள். பின் கர்சரை அந்த டேபிள் உள்ளே வைத்து Table மெனு சென்று அதில் Table Auto Format என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இங்கு பல பிரிவுகளில் டேபிள் எப்படி தோற்றமளிக்கும் எனக் காட்டப்படும். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் உருவாக்கிய டேபிள் அதே தோற்றத்தில் அமைவதைக் காணலாம். டேபிள்களுக்கான நிறைய ஸ்டைல்கள் உங்களுக்கு ஆப்ஷனாகக் காட்டப்படும். இதனால் உங்களின் டேபிள் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப் படுவதனைக் காணலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha - திண்டுக்கல்,இந்தியா
17-டிச-201122:32:41 IST Report Abuse
Nisha நான் ஆரம்பத்தில் விண்டோஸ் xp பயன்படுத்தி வந்தேன்.பிறகு விண்டோஸ் 7 க்கு மாறி விட்டேன். திரும்பவும் இப்போது விண்டோஸ் xp பயன்படுத்துகிறேன்..format செய்த ஆரம்ப பொழுதில் ms - ஆபீஸ் இருந்தது.. இப்போது திடீரென்று ms - ஆபீஸ் ஐ காணவில்லை.. என்ன செய்வது?
Rate this:
Share this comment
Cancel
ஷங்கர் - chennai,இந்தியா
13-டிச-201111:38:50 IST Report Abuse
ஷங்கர் வெரி யூஸ்புல் திஸ் book
Rate this:
Share this comment
Cancel
ராஜேஸ்வரன்.k - tiruppure,இந்தியா
12-டிச-201121:22:04 IST Report Abuse
ராஜேஸ்வரன்.k விண்டோஸ் 8 எப்ப சார் வெளிஈல் ரீச்பன்னுவங்க?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X