மே
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2010
00:00

தமிழகம்


மே 2: கோவையில் ராணுவ வண்டிகள் மீது ம.தி.மு.க., மற்றும் பெரியார் தி.க., வினர் தாக்குதல் நடத்தினர்.


மே 4: ஜல்லிக்கட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பாதுகாப்பாக நடத்தப்படும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் உறுதி.


* புரோட்டா கடையில் வேலைபார்த்துக் கொண்டே படித்த வீரபாண்டியன், ஐ.ஏ.எஸ்., தேர்வில் இந்திய அளவில் 53வது இடம் பெற்றார்.


மே 6: நாமக்கல் அருகே வளையப்பட்டி தவிடு உற்பத்தி மில்லில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் பலி.


மே 7: கரூரில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தம்பித்துரை வீட்டில் வருவாய் துறை, போலீஸ் உயர் அதிகாரிகள் திடீர் சோதனை.


மே 9: பிரதமருடன் முதல்வர்: ஒரே நேரத்தில் காய்ச்சல் காரணமாக முதல்வர் கருணா நிதியும், மூட்டுவலி காரணமாக கவர்னர் பர்னாலாவும், உடல் நலக் குறைவு காரணமாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரனும் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மே 9ல், சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங் மூவரையும் சந்தித்து நலம் விசாரித்தார்.


மே 15: இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக ஏழு கோடி மதிப்புள்ள பொருட்கள் தமிழக அரசின் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


* மதுரை ரிங்ரோட்டில் ஆட்களை ஏற்றிவந்த வேன் மீது தனியார் பஸ் மோதியதில் 17 பேர் பலி.


மே 26: திருச் செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியது.


*பெரியார் அணைக்கு சென்று திரும்பிய தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேரள வனத்துறையினர் தாக்கினர்.


மே 29: தமிழகத்தின் துணை முதல்வராக ஸ்டாலின் நியமனம்.


இந்தியா


மே 7: ஆந்திர தலைமைச் செயலகத்தில் தீ விபத்து.


மே 8: ஸ்வாட் பகுதியில் சீக்கியர்களுக்கு எதிராக செயல்படும் தலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜம்முவில் கடையடைப்பு.


* கல்லூரிகளில் ராகிங் அபாயத்தை ஒழிக்க கமிட்டிகளை அமைக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு.


மே 9: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சித்து பேசியதற்காக காங்கிரஸ் மீடியா பிரிவு தலைவர் பதவியிலிருந்து வீரப்பமொய்லி நீக்கப்பட்டார்.


மே 11: "டிவி' நடிகை சில்மிஷ வழக்கில் கேரளாவின் முன்னாள் அமைச்சர் ஜோசப்பை ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் விடுதலை செய்தது.


மே 16: இந்தியாவில் பதினைந்தாவது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாயின. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 261 இடங்களைக் கைப்பற்றியது.


மே 20: சிக்கிம் முதல்வராக தொடர்ந்து 4வது முறையாக பவன் குமார் சாம்லிங் பதவியேற்றார்.


மே 22: இந்திய பிரதமராக டாக்டர் மன்மோகன்சிங் மீண்டும் பதவியேற்பு. அவருடன் 19 அமைச்சர்களும் பதவியேற்றனர்.


மே 23: அய்லா பயங்கரம்: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தையும், வங்க தேசத்தையும் மே 23ல் "அய்லா' புயல் தாக்கியது. மேற்கு வங்கத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இந்த புயலுக்கு 330 பேர் பலியாகினர்.இந்தியாவில் மட்டும் 150 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். புயலால் பாதிக்கப்பட்ட சுந்தர்பன், போலா பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்ப பல வாரங்கள் ஆகின.


மே 24: உ.பி., மாநில சமாஜ்வாடி மூத்த தலைவர் அசம்கான் பதவி நீக்கம்.


* நக்சலைட் தலைவர் சுதாகர் ரெட்டியை வாரங்கல்லுக்கு அருகே ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர்.


* ஆந்திராவில் அடிலாபாத் அருகே மின்நிலைய கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி.


* ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள ருடோல்ப்செய்ம் என்ற இடத்தில் உள்ள குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் சந்த் ராமானந்த் பலி.


மே 25: ஒரிசாவின் சட்டசபை சபாநாயகராக பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் பிரதீப்குமார் அமத் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


* ஆஸ்திரிய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் ஜலந்தரில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி.


மே 27: ஆஸ்.,யில் இனவெறி: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் நான்கு பேரை மே 27ல், மது அருந்திய கும்பல் ஒன்று தாக்கியது. இதில் சிரவண் குமார் என்ற மாணவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது ஆண்டு முழுவதும் தொடர்ந்தது.


மே 28: புதிய அமைச்சர்கள்: நாட்டின் 15வது லோக்சபாவில் மே.28ல், புதிய அமைச்சர்கள் பலர் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுடன் தமிழகத்தை சேர்ந்த மு.க.அழகிரி ஆர்.ராசாவும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.


மே 31: இந்திய விமானப்படை புதிய தளபதியாக பிரதீப் வசந்த் நாயக் பொறுப்பேற்பு.உலகம்


மே 1: முல்லைத் தீவு கடற்பகுதியில் ஊடுருவ முயன்ற 23 கடற்புலிகள் கொல்லப்பட்டனர்.


மே 4: நேபாள பிரதமர் பிரசாண்டா தனது பதவியை ராஜினாமா செய்தார்.


மே 6: சண்டையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம் ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூன் வலியுறுத்தினார்.


மே 10: இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.


மே 13: ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரத்தில் அமெரிக்க ராணுவ தளம் அருகே கார் குண்டு வெடித்ததில் ஏழு பேர் பலி.


மே 18: இலங்கை போரில் பிரபாகரன் பலியானதாகவும் மறுநாள் நந்திக்கடல் பகுதியில் உடல் மீட்கப்பட்டது எனவும் இலங்கை அரசு அறிவித்தது.


மே 20: இந்தோனேசியாவின் மாகிடான் நகரம் அருகே விமானம் விழுந்து நொறுங்கியதில் 93 பேர் பலி.


மே 21: "ஹாட்ரிக்' முதல்வர்: ஒரிசா மாநிலத்தின் புதிய முதல்வராக நவீன் பட்நாயக் மே.21ல் பதவியேற்றார். ஒரிசாவில் வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்று நவீன் சாதனை படைத்துள்ளார். லோக்சபா தேர்தலோடு ஒரிசா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 103 தொகுதிகளை கைப்பற்றி பிஜு ஜனதா தளம் ஆட்சியை பிடித்தது. முதல்வருடன் 20 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.


மே 23: நேபாள நாட்டின் லலித்பூர் மாவட்டம் தோபிகட் பகுதியில் உள்ள சர்ச்சில் நடந்த குண்டுவெடிப்பில் 2 இந்தியர்கள் பலி. மே. 25: வடகொரியா சக்திவாய்ந்த அணுகுண்டு சோதனை நடத்தியது.


* நேபாளத்தில் "நேபாள்' நேபாளத்தின் புதிய பிரதமராக மாதவ் குமார் நேபாள் மே 25ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இவருடன் இரு அமைச்சர்கள் மட்டும் பதவியேற்றுக் கொண்டனர்.


மே 26: வடகொரியா இரண்டு குறுகிய தூர ஏவுகணை சோதனைகளை நடத்தியது.


மே 27: பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் கார்வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் பலி.


விளையாட்டு


மே 1: ஜெர்மனி, சர்வதேச ஜூனியர் துப்பாக்கி சுடுதல் ஒற்றையரில் இந்திய வீரர் ஆஷர் நோரியா தங்கம் வென்றார்.


மே 2: டில்லி, ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.


மே 6: 2வது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் வீரர் ரோகித் சர்மா, மும்பை அணிக்கு எதிராக "ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.


மே 8 : செஸ் கிங் உலக செஸ் அரங்கில் இந்தியாவின் அசத்தலான வீரர் விஸ்வநாதன் ஆனந்த். இவருக்கு இந்த ஆண்டுக்கான செஸ் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் இந்த விருதை ஆறாவது முறையாக (1997, 1998, 2003, 2004, 2007, 2008) கைப்பற்றி சாதித்தார். இவ்விருதை இதற்கு முன்பு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் (11), அமெரிக்காவின் பாபி பிஸ்ஷர் (3) பெற்றுள்ளனர்.


மே 14: கஜகஸ்தானில் நடந்த குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் நானோ சிங் (48 கி.கி.,) தங்கம் வென்றார்.


மே 17: ஐரோப்பிய கிராண்ட் பிரிக்ஸ் குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் சுரன்ஜாய் சிங் "பிளை வெயிட்' பிரிவில் தங்கம் வென்றார்.


மே 18: இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது.


மே 24: இரண்டாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கோப்பையை கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி வென்றது. மே 26: இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியது.


மே 27: மைக் டைசனின் நான்கு வயது மகள் எக்சோடஸ், உடற் பயிற்சி இயந்திரத்தில் கழுத்து சிக்கி மரணம் அடைந்தார்.


Advertisement

 

மேலும் வருடமலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X