ஜூன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2010
00:00

தமிழகம்


ஜூன் 1: இந்தியாவிலேயே முதல்முறையாக கண்பார்வையற்ற சக்கரவர்த்தி என்பவர் கோவை மாவட்ட மூன்றாவது கூடுதல் முன்சீப் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றார்.


ஜூன் 3: திருச்சி மேயராக சுஜாதா பதவியேற்றார்.
ஜூன் 10: ரவுடி "வெல்டிங்' குமார் சென்னை புழல்சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த தகராறில் கொல்லப்பட்டார்.


ஜூன் 11: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தை கருணாநிதி துவக்கி வைத்தார்.
ஜூன் 14: திருச்சி மருங்காபுரி அருகே மல்லிகைப்பட்டியில் சமத்துவபுரத்தை கருணாநிதி திறந்து வைத்தார்.
ஜூன் 16: மதுரை விரகனூர் ரிங் ரோடு பாலத்தின் அடியில், கூஜா வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
ஜூன் 18: அல்ஜீரியாவில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய அப்பாசி சலீம் என்ற பயங்கரவாதி சென்னையில் பிடிபட்டான்.
ஜூன் 27: சென்னை கூடுவாஞ்சேரி அருகே ஊரப்பாக்கம் ஊராட்சித் தலைவர் குமார் வெடிகுண்டுகளை வீசி, வெட்டிக் கொலை.
ஜூன் 30: கல்லூரிக்கு வரும்போது சேலை அணியவேண்டும் என பயிற்சி மாணவியை கட்டாயப்படுத்தக் கூடாது என ஐகோர்ட் உத்தரவு.
இந்தியா
ஜூன் 1: பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 32 கி.மீ., தொலைவில் உள்ள குஸ்ரூபூரில் 2 ரயில்களை கிராம மக்கள் தீ வைத்து எரித்தனர்.
* பதினைந்தாவது லோக்சபாவின் தற்காலிக சபாநாயகராக மாணிக் ராவ் கேவிட்டுக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பதவிப்பிரமாணம்.
ஜூன் 4 : முதல் பெண் சபாநாயகர்: பதினைந்தாவது லோக்சபாவில் நாட்டின் முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர் ஜூன் 4ல், சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்டார்.


ஜூன் 5: பாகிஸ்தான் பயங்கரவாதியும், ஜமாத்-உத்-தவா அமைப்பின் கமாண்டருமான முகமது உமர் மத்னி டில்லியில் கைது.
ஜூன் 7: மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி., பதம்சிங் பாட்டீல், இரட்டைக்கொலை வழக்கில் சி.பி.ஐ., போலீசாரால் கைது.
* லோக்சபா துணை சபாநாயகராக பா.ஜ.,வின் கரியமுண்டா தேர்வு.
ஜூன் 13: பா.ஜ., வின் துணைத்தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த்சின்கா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா.


* மர்மமான முறையில் காணாமல் போன அணு விஞ்ஞானி மகாலிங்கத்தின் உடல், கர்நாடகாவின் காளியாற்று படுகையில் மீட்கப்பட்டது.
ஜூன் 15: நடிகர் ஷைனி அகுஜா கைது: பிரபல பாலிவுட் நடிகர் ஷைனி அகுஜா. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இவர் ஜூன்.15ல், அவரது வீட்டில் வேலை பார்த்த 19 வயது பெண்ணை கற்பழித் ததாக கைது செய்யப்பட்டார். பின் அக்.3ல் ஜாமீனில் விடு தலையானார்.


ஜூன் 16: பா.ஜ., கட்சியின் பொதுச் செயலர் பதவியை அருண் ஜெட்லி ராஜினாமா செய்தார்.


ஜூன் 17: மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் தலைவர்கள் மூன்று பேர் மாவோயிஸ்ட்களால் சுட்டுக் கொலை.
* தலிபான்கள் பலி: ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்., எல்லையில் அமைந்த தெற்கு வசீர் ஸ்தான் பகுதிகள் "டெஹ்ரிக் இ தலிபான்' பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழ்ந்தது. இவற்றை அழிக்க ஜூன் 19ல், பாக்., ராணுவம் போர் விமானங்கள், பீரங்கிகள் மூலமாக தாக்குதல் நடத்தியது. 2 நாட்கள் நடந்த தாக்குதலில் தலிபான் கமாண்டர் குவாரி உசேன் உட்பட 50க்கும் மேற்பட்ட பயங்கர வாதிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகின.

ஜூன் 22: மாவோயிஸ்ட் நக்சலைட் அமைப்புக்கு மத்திய அரசு தடை .
ஜூன் 24: பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித்சிங்கின் மறுசீராய்வு மனுவை பாக்., சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதிப்படுத்தியது.


ஜூன் 25 : சவால் பணியில் நிலேகனி: இந்திய குடிமக்களுக்கு சிறப்பு அடையாள எண் அட்டை வழங்குவதற்கான திட்டப்பணிகளை மத்திய அரசு துவக்கியது.திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவராக இன்போசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் நந்தன் நிலேகனி ஜூன் 25ல், நியமிக்கப்பட்டார். கேபினட் அந்தஸ்து கொண்ட பதவிக்கு தேர்வானதை தொடர்ந்து தனது இன்போசிஸ் பதவியை நிலேகனி ராஜினாமா செய்தார்.


ஜூன் 27: முதல்வர் பொக்ரியால் லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பா.ஜ.,வை சேர்ந்த உத்தரகண்ட் முதல்வர் கந்தூரி பதவி விலகினார். ஜூன் 27ல், ரமேஷ் பொக்ரியால் புதிய முதல்வரானார்.


ஜூன் 29: மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசின் இடைக்கால அதிபராக மைக்கேல்லெட்டி பொறுப் பேற்றார்.
ஜூன் 30: பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரித்த லிபரான் கமிஷன் 17 ஆண்டுகளுக்கு பின் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அறிக்கையை சமர்பித்தது.
உலகம்
ஜூன் 1: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு அந்நாட்டு பிரதமர் கெவின் ரூத் கண்டனம்.
* மோசமான விபத்து: பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் இருந்து பாரீசிற்கு சென்ற ஏர் பிரான்ஸ் விமானம் ஜூன் 1ல், அட்லாண்டிக் கடலில் விழுந்தது. இந்த விபத்தில் 228 பயணிகள் பலியாகினர். 12 விமானங்கள் 3 கப்பல்களின் உதவியுடன் கடுமையான முயற்சிக்கு பின்னர் உடல்களையும், விமானத்தின் பாகங்களையும் மீட்புப்படையினர் மீட்டனர். எனினும் விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏர் பிரான்சின் மிக மோசமான விபத்து இது.


ஜூன் 2: மும்பை தாக்குதலுக்கு காரணமான ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத்தை லாகூர் ஐகோர்ட் விடுதலை செய்தது.
* ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நர்சிங் பயின்று வரும் நர்தீப் சிங் என்ற மாணவன் மீது இனவெறிக் கும்பல் தாக்குதல்.


ஜூன் 4: தாவூத் இப்ராகிமின் கூட்டாளி தாவூத் ரயூப் மெர்சன்ட் என்பவனை வங்கதேச போலீசார் தாகாவில் கைது செய்தனர்.
ஜூன் 5: பாக்., வடமேற்கு மாகாணத்தில் உள்ள திர் மாவட்டத்தில் மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 40 பேர் பலி.
ஜூன் 13: ஈரானில் மீண்டும் அதிபராக மகமூத் அகமதி நிஜாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூன் 16: இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் பலி.
ஜூன் 18: அமெரிக்க பாப் இசைப்பாடகி மடோனா, மலாவி நாட்டு கறுப்பினக் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள மலாவி நாட்டு கோர்ட் அனுமதியளித்தது.
ஜூன் 22: ரஷ்யாவில் உள்ள இங்குஷ்தியா நாட்டின் அதிபர் யூனுஷ் பெக் கார்குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தார். அவரது தம்பி பலியானார்.
ஜூன் 30: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கு உதவி அதிகாரியாக காஷ்மீரை சேர்ந்த பாரா பண்டித் நியமிக்கப்பட்டார்.
* ஏமன் நாட்டு விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 153 பேர் பலி.


* மறைந்த பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் எஸ்டேட் மற்றும் அவரது குழந்தைகளுக்கு தற்காலிக பாதுகாவலராக அவரது தாயார் நியமிக்கப்பட்டார்.


விளையாட்டு


ஜூன் 2: பி.சி.சி.ஐ.,க்கு போட்டியாக துவக்கப்பட்ட கபில்தேவின் ஐ.சி.எல்., அமைப்பில் இருந்து 79 இந்திய வீரர்கள் விலகினர்.
ஜூன் 6: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை ரஷ்யாவின் ஸ்வெட்லனா கஸ்னட் சோவா கைப்பற்றினார்.


* பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் பயஸ், செக் குடியரசின் லூயி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இது கிராண்ட்ஸ் லாம் அரங்கில் பயஸ் வெல்லும் 9வது பட்டம்.


ஜூன் 13: ஆசிய குத்துச்சண்டை தொடரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் சுரன்ஜாய் சிங் (51 கி.கி.,) தங்கம் வென்றார்.


ஜூன் 15: உலக கோப்பை "டுவென்டி-20' தொடரில் அரையிறுதிக்கு செல்லாமல் இந்திய அணி வெளியேறியதற்கு கேப்டன் தோனி, மன்னிப்பு கேட்டார்.


ஜூன் 21: "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் பைனலில் பாகிஸ்தான் அணி, இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஜூன் 29: வெண்கல நாயகன் ஜெர்மனில் கிராண்ட்பிரிக்ஸ் மல்யுத்த தொடர் நடந்தது. இதில் இந்தியாவின் சுஷில் குமார், "பிரிஸ்டைல்' 66 கி.கி., எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதித்தார்.


Advertisement

 

மேலும் வருடமலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X