2012ல் டேப்ளட் பிசி சந்தை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2012
00:00

இந்தியாவில் இந்த ஆண்டில், டேப்ளட் பிசி விற்பனை பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மிகக் குறைந்த விலையில் அறிவிக்கப்பட்ட ஆகாஷ் டேப்ளட் பிசி வரும் ஜனவரியில் வர இருப்பதால், இந்த சந்தை வேகமாக சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. தற்போது நாளொன்றுக்கு 8,000 டேப்ளட் பிசிக்கள் விற்பனையாகின்றன. தற்போது ரூ.10,000க்கும் கீழாக ரூ.3,500 முதல் ரூ.48,000 வரை உள்ள டேப்ளட் பிசிக்களே அதிகம் விற்பனையாகின்றன. கம்ப்யூட்டர் மார்க்கட் ரிசர்ச் என்னும் ஆய்வு அமைப்பின் கணிப்பின்படி, 2012 ஆம் ஆண்டில், 85,000 டேப்ளட் பிசிக்கள் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பினையும் மீறி இன்னும் அதிகமாகவும் விற்பனை செய்யப்படலாம். ஏறத்தாழ, 15 நிறுவனங்கள் தற்போது இந்தச் சந்தையில் போட்டியிட்டு வருகின்றன.
டேப்ளட் பிசி விற்பனை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மடங்கு ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், 2017ல் 2 கோடியே, 33 லட்சத்து 80 ஆயிரம் என்ற எண்ணிக்கையை இந்த விற்பனை எட்டும்.
நடப்பு ஆண்டில், இந்த சந்தையில் சீன சந்தையிலிருந்து மைக்ரோமேக்ஸ், ஜி பைவ் மற்றும் கார்பன் போன்ற நிறுவனங்களும் விற்பனையில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் பெயர் பெற்ற Apple, Samsung, RIM, மற்றும் Motorola போன்ற நிறுவனங்கள், உயர் நிலையில் இயங்கும் நிறுவனங்களாகும். இவை விற்பனை செய்திடும் டேப்ளட் பிசிக்களின் விலை ரூ. 29,000 முதல் ரூ. 48,000 வரை உள்ளன. இந்த விலை அமைப்பை அடுத்து, இந்திய நிறுவனங்களான Reliance Communications, Beetel, Wespro ஆகியவை அடுத்த மத்திய மற்றும் அதற்கும் அடுத்த நிலையில் இயங்குகின்றன.
2010ல் 60 ஆயிரம் டேப்ளட் பிசிக்களும், 2011ல் 3 லட்சம் பிசிக்களும் விற்பனை செய்யப்பட்டன. டேட்டா விண்ட் நிறுவனத்தின் ஆகாஷ் டேப்ளட் பிசி ரூ.2,500க்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிறுவனம், முதலில் தன்னை கல்வி நிலையங் களில் நிலைப்படுத்த முயற்சிக்கிறது. பெங்களூருவில் இயங்கும் லஷ்மி அக்செஸ் கம்யூனிகேஷன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனம் தன்னுடைய மேக்னம் (Magnum) டேப்ளட் பிசியினை ரூ. 6,999 என விலையிட்டுள்ளது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஹமீது அலி - வொர்கிங்இன்oman,இலங்கை
15-ஜன-201216:09:41 IST Report Abuse
ஹமீது அலி THIS IS THE ONE OF THE BEST HELP HANDS FOR US. THANKS FOR EVER.
Rate this:
Share this comment
Cancel
kandasamiponnusami - Salem,இந்தியா
05-ஜன-201212:38:28 IST Report Abuse
kandasamiponnusami very usueful to ners/new users
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X