கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜன
2012
00:00

கேள்வி: தற்சமயம் கம்ப்யூட்டர் டிஸ்க் குறித்து பேசுகையில் டெரா பைட்டில் அதன் அளவினைக் கூறுகின்றனர். இந்த அளவின் பரிமாணம் என்ன?
-ஜி. மெர்லின், தாம்பரம்.
பதில்: ஆம், இப்போது எல்லாமே டெரா பைட் தான். பல ஆண்டுகளுக்கு முன்னால், கிலோ பைட் என்ற அளவில் நின்றனர். இது 1024 பைட்ஸ். பின்னர் 1024 கிலோ பைட்ஸ் அளவை மெகா பைட் என்று வெகுநாட்கள் புழக்கத்தில் இருந்தது. இப்போதும் பல இடங்களில் 1024 மெகா பைட் சேர்ந்த ஒரு கிகா பைட், குறிப்பிடப்படும் அளவாக உள்ளது. ஆனால், சில மாதங்களாக, 1024 கிகா பைட் சேர்ந்த டெரா பைட் அடிப்படை அளவாக உள்ளது. பரிமாணத்தைப் பற்றிக் கேட்டுள்ளீர்கள். இதனை வேறு வழியில் விளக்குகிறேன். ஒரு பக்க டெக்ஸ்ட் உத்தேசமாக, 2 கேபி அளவு எடுக்கும். எனவே ஒரு மெகா பைட்டில் ஏறத்தாழ 500 பக்கங்கள் இருக்கலாம். இப்படியே கணக்கிட்டால், கிகா பைட் 5 லட்சம் பக்கங்களின் டெக்ஸ்ட்டைக் கொண்டி ருக்கும். அப்படியானால், டெரா பைட் எந்த அளவில் இருக்கும்? கணக்கெல்லாம் வேண்டாம்; ரொம்ப ரொம்ப பெரிய பெரிய அளவில் இருக்கும் என்று எண்ணுவதோடு திருப்தி அடைவோம்.

கேள்வி: அடாசிட்டி புரோகிராம் குறித்து முன்பு எழுதியிருந்தீர்கள். அந்த சாப்ட்வேர் மூலம், எப்படி ஆடியோ பாடல்களை சிடியில் எழுதலாம்? முழுமையான வழியினைப் படிப்படியாகக் கூறவும்.
-என். யோகேஷ், மதுரை.
பதில்: உங்களின் கேள்விக்குப் பின்னர், அடாசிட்டி புரோகிராம் இயக்கிப் பார்த்தேன். அதில் சிடியில் பைல்களை எழுதும் வசதி தரப் படவில்லை. உங்களுடைய ஆடியோ ட்ரேக்குகளை அதன் மூலம் எடிட் செய்து, கட் செய்து, வேறு ஒரு மீடியத்தில் பதியலாம். சிடியில் புதியதாகப் பதிய முடியாது. அதற்கு வேறு ஒரு புரோகிராம் தான் பயன்படுத்த வேண்டும். இப்போது வரும் ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்கள் இந்த வசதியைக் கொண்டுள்ளன. விண்டோஸ் சிஸ்டத்தி லேயே, சிடி எழுத ஒரு புரோகிராம் தரப்பட்டுள்ளது. ராக்ஸியோ, நீரோ, நீரோ க்விக் பர்ன், பர்ன் பார் பிரீ, சிடி பர்னர் எக்ஸ்பி (Roxio, Nero,Nero Kwik Burn, Burn4free, CDBurnerXp) என நிறைய சிடி பதியும் சாப்ட்வேர் புரோகிராம்கள் உள்ளன. டவுண்லோட் செய்து பயன் படுத்தவும்.

கேள்வி: நான் உருவாக்கும் வீடியோ பைல்களை குறிப்பிட்ட அளவிற்குள், குறிப்பிட்ட நேரத்திற்குள் இயங்கும்படி அமைக்க வேண்டியதுள்ளது. இந்த வசதியுடன் ஏதேனும் வீடியோ கன்வர்டர் புரோகிராம் உள்ளதா?
-தி.கீர்த்தி சுரேஷ், சென்னை.
பதில்: மல்ட்டிமீடியா பிரிவில் அதிக இடம் எடுத்துக் கொள்ளும் பைல் வகை வீடியோ பைல் ஆகும். எனவே தான் குறிப்பிட்ட அளவில் அதனை அமைக்க விரும்புகிறோம். இதற்கு முதலில் உதவுவது விண் ஆர்.ஏ.ஆர். மற்றும் விண் ஸிப் ஆகும். இவை பைலைச் சுருக்கித் தர வெகு நேரம் எடுத்துக் கொண்டாலும், குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு வீடியோ பைலின் அளவு குறைவதில்லை. இந்த வகையில் நமக்கு உதவுவது Freemake Video Converter ஆகும். இதனை http://www. freemake.com/free_video_converter/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இருந்து பெறலாம். இதன் மூலம் 2.3 ஜிபி பைலை ஒருமுறை 420 எம்பி அளவிற்குக் குறைத்தேன். பைல் அளவு குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகையில், இந்த புரோகிராம் எந்த அளவிற்குக் குறைக்க முடியும் என்று அறிவிக்கும். அதற்கேற்ப செயல்படலாம். இந்த புரோகிராமினைத் தயாரித்து வழங்குபவர்கள், 40 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோவினை, இதனைப் பயன்படுத்தி டிவிடியில் பதிய முடியும் என்று அறிவித் துள்ளனர். 10.5 ஜிபி வீடியோ பைல் 4.5 ஜிபி வீடியோ பைலாகச் சுருக்கப்படுகிறது.

கேள்வி: வீட்டிலிருந்து இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று எனக்கு வந்த இமெயிலைக் கிளிக் செய்தேன். அதிலிருந்து தினந்தோறும் என் அட்ரஸ் புக்கில் உள்ள் அனைத்து முகவரிக்கும் நான் அனுப்பாமலேயே அஞ்சல்கள் செல்கின்றன. இதனை நிறுத்த இயலவில்லை. தயவு செய்து வழி கூறுங்கள்.
-கே. எஸ். முகேஷ், நிலக்கோட்டை.
பதில்: இது போல இனி எவருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த நீண்ட விளக்கத்தினைக் கீழே தருகிறேன். உங்கள் மெயில் அக்கவுண்ட், உங்களுக்குத் தெரியாமல், நீங்கள் அறியாமல் செய்த செயல்பாட்டினால், மற்றவர்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்று விட்டது. நமக்கு அறிமுகமாகாத நபர்களிடமிருந்து இது போல வரும் இமெயில்களைத் திறக்காமல், அழித்துவிட்டிருந்தால் இந்நிலை ஏற்படாது. சரி, ஏற்பட்டபின் என்ன செய்யலாம்?
உடனடியாக, உங்கள் இமெயில் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டினை மாற்றவும். உங்கள் அட்ரஸ் புக்கில் உள்ள அனைவரின் முகவரிக்கும், உங்கள் இமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டி ருப்பதனை அறிவித்து, உங்கள் பெயரில் மெயில் வந்தால், கிளிக் செய்து திறக்க வேண்டாம் என்று தெரிவிக்கவும். உங்கள் இன்டர்நெட் பிரவுசரின் கேஷ் மற்றும் குக்கீஸ் பைல்களை அழிக்கவும். உங்கள் கம்ப்யூட்டரின் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மூலம், முழுமையாக ஸ்கேன் செய்திடவும். மீண்டும் வைரஸ் இருப்பது தெரிய வந்தால், வேறு ஒரு ஆண்ட்டி வைரஸ் தொகுப்பின் அப்டேட்டட் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும்.

கேள்வி: என் சிஸ்டம் ட்ரேயில் நிறைய ஐகான்கள் உள்ளன. இவற்றை எப்படி மறைக்கலாம்? அல்லது நீக்கலாம்?
-தே.கிருஷ்ண குமார், சங்கரன் கோவில்.
பதில்: உங்கள் சிஸ்டம் என்னவென்று நீங்கள் கூறவில்லை. எக்ஸ்பிக்கு வழி சொல்கிறேன். டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து, ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக் கவும். கிடைக்கும் விண்டோவில் நோட்டிபிகேஷன் ஏரியா என்னும் பிரிவில் உள்ள Customize பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Customize Notifications என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். Current Items என்ற தலைப்பின் கீழ் தற்போது சிஸ்டம் ட்ரேயில் உள்ளவை காட்டப்படும். ஒவ்வொன்றுக்கும் எதிராக, ஒரு கீழ் விரி மெனு இருக்கும். இதில் Hide when inactive, Always Hide, Always show ஆகிய ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்கள் விருப்பப்படி Always Hide தேர்ந்தெடுத்து, பின் இந்த விண்டோக்களை மூடினால், எதனை மறைக்கச் சொல்லி தேர்ந்தெடுத்தீர்களோ அவை சிஸ்டம் ட்ரேயில் காட்டப்பட மாட்டாது.

கேள்வி: ஆபீஸ் 2007 தொகுப்பினை நான் என் கம்ப்யூட்டரில் பயன்படுத்துகிறேன். ஆனால், என் வாடிக்கையாளர்கள் சிலர் இன்னும் ஆபீஸ் 2003 பயன்படுத்தி வருகின்றனர். எனவே அவர்கள் அலுவலகத்தில் நான் அனுப்பும் Docx பார்மட்டில் உள்ள டாகுமெண்ட் பைல்களைக் காட்ட இயலவில்லை. இன்டர்நெட் சென்று மாற்றிக் காட்ட நேரம் ஆகிறது. இந்த பைல்களைப் படிக்க உதவும் DocX Viewer புரோகிராம் குறித்து முன்பு நீங்கள் எழுதி இருந்தீர்கள். இதனை எங்கு பெறலாம்? எப்படி பயன்படுத்தலாம்?
-சி.மாணிக்கவேல், சிவகாசி.
பதில்: உங்கள் வாடிக்கையாளர்களுக்கான பைல்களைத் தயாரிக்கும் போதே, வேர்ட் 2007ல், பழைய Doc பார்மட்டில் தயாரிக்கலாமே! இது ஓர் எளிய வழி.
இருந்தாலும், நீங்கள் கேட்டுள்ள தகவலையும் தருகிறேன். DocX Viewer என்பது எளிதாக எடுத்துச் சென்று பயன் படுத்தக் கூடிய ஒரு புரோகிராம். இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை. இதன் மூலம் நாம் DocX பார்மட்டில் உள்ள பைல்களை, நம் கம்ப்யூட்டரில் வைத்தே, திறந்து படிக்கலாம். இதற்கு நம் கம்ப்யூட்டரில் வேர்ட் அல்லது வேர்ட் போன்ற புரோகிராமும் தேவையில்லை. இந்த புரோகிராமில் திறந்து படித்த பின்னர், அதனைக் காப்பி செய்து, அப்படியே நாம் பயன்படுத்தக் கூடிய டெக்ஸ்ட் புரோகிராமில், நாம் பயன்படுத்தும் பார்மட்டில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த புரோகிராமை டவுண்லோட் செய்து, ஸிப் பைலை விரித்து வைத்து இயக்கினால் போதும். உடனே, நமக்கு DocX பார்மட்டில் உள்ள பைலைத் திறப்பதற்கான மெனு கிடைக்கிறது. அதே புரோகிராமில் பார்மட்டில் சேவ் செய்திட முடியாது. அதனைப் படிக்கலாம்; திருத்தலாம் மற்றும் காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு போகலாம். பின்னர் கிளிப் போர்டில் இருப்பதை, டெக்ஸ்ட் ப்ராசசருக்குக் கொண்டு செல்லலாம். இவ்வளவு எளிதாக நம் தேவையை நிறைவேற்றும் இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்திட http://download. cnet.com/DocXViewer/300018483_475179715.html? tag=mncol;2 என்ற முகவரிக்குச் செல்லவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Covindane - ThimphuBhutan,பூடான்
12-ஜன-201213:57:38 IST Report Abuse
R. Covindane I want to know the command for cleaning of shortcut icon d by virus in the file manger in thumb டிரைவர்ஸ்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X