ஜிமெயிலில் சில இமெயில்களுக்குத் தடை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2010
00:00

நம் மின்னஞ்சல் முகவரிக்குத் தேவையற்ற நபர்கள் பலரிடம் இருந்து தொடர்ந்து அஞ்சல் செய்திகள் வந்து கொண்டே இருக்கும். நிச்சயமாக அவை பயனற்றவை என்று தெரிந்தும், வேறு வழியின்றி அவற்றை நம் மெயில் பாக்ஸிலிருந்தும், ட்ரேஷ் பாக்ஸிலிருந்தும் நீக்கிக் கொண்டிருப்போம். இதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட முகவரியிலிருந்து வரும் மெயில்களை, வடிகட்டி, அவற்றை இன்பாக்ஸுக்கு அனுப்பாமல் இருக்கும் வசதியினை ஜிமெயில் தருகிறது. அதனை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.
ஜிமெயிலில் இத்தகைய இமெயில்களின் முகவரிகளுக்கென மற்ற தளங்கள் தருவது போல பிளாக் லிஸ்ட் வசதி இல்லை. இருப்பினும் அவற்றை எப்படி தடை செய்வது என இங்கு காண்போம்.  நீங்கள் இத்தகைய மெயில்களுக்கென ஒரு பில்டர் தயாரிக்க வேண்டும்.  இதற்கு உங்கள் அக்கவுண்ட் மூலம் ஜிமெயிலுக்குச் செல்லவும். நீங்கள் எந்த இமெயில் முகவரிகளிடமிருந்து, மின்னஞ்சல்களைப் பெற விரும்பவில்லையோ, அவற்றின் முன் ஒரு சிறிய டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அடுத்து திரையின் மேலாக உள்ள  More Actions  என்ற பகுதியில் கிளிக் செய்திடவும்.இங்கு  Filter Messages like these  என்ற இடத்தில் பின்னர் கிளிக் செய்திடவும். உடன் create filter  என்ற விண்டோ காட்டப்படும். நீங்கள் தடை செய்திட விரும்பும் மின்னஞ்சல் முகவரிகள் அனைத்தும்  From  பீல்டில் இருப்பதனைப் பார்க்கலாம். அந்த மின்னஞ்சல் முகவரிகள் சரியாக உள்ளனவா என்று பார்க்கவும். நீங்கள் விரும்பினால், ஓர் இணைய தளத்திலிருந்து வரும் அனைத்து மெயில்களையும் தடை செய்திடலாம். அதற்கு @ என்ற அடையாளம் மட்டும் அமைத்து, அதன் பின்னர் தளத்தின் பெயரை அமைக்கவும். இத்துடன் மெயில் செய்தியில் சில சொற்கள் உள்ள மெயில்களையும் தடை செய்திடலாம். இதனை எல்லாம் முடித்தவுடன், அடுத்து Next Step   என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து என்ன செயலை நீங்கள் மேற்கொள்ள விரும்புகிறீர்களோ, அந்த பாக்ஸ் முன் டிக் அடையாளத்தினை அமைக்கவும். எடுத்துக்காட்டாக, விரும்பாத இமெயில் வந்தால், உடனே அழிக்க வேண்டும்  என எண்ணினால்,  Delete it என்பதில் டிக் அடையாளம் அமைக்கவும். இந்த முகவரிகளில் இருந்து வரும் அனைத்து மெயில்களும் உடன் ட்ரேஷ் பெட்டிக்குச் செல்லும். நீங்கள் தேர்ந்தெடுக்க  Skip the Inbox, Archive it, Mark as read, Star it, Apply a label, Forward it, Send canned response, and Never send to spam   என்ற பல ஆப்ஷன்கள் உள்ளன. சில வேளைகளில், சிலரிடமிருந்து வரும் இமெயில்களைப் பார்த்துவிட்ட பின்னர், அழிக்க எண்ணலாம். அத்தகைய இமெயில்கள் ட்ரேஷ் பெட்டியில் 30 நாட்கள் தங்கும். இவற்றை எல்லாம் முடித்தவுடன்  Create Filter Button என்ற பட்டனை  அழுத்தவும். உடனே பில்டர் செயல்படத் தொடங்கும்.  எவற்றை எல்லாம் தடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பது Settings – Filters  என்ற இடத்தில் பட்டியலாகக் காட்டப்படும். உங்களுடைய விருப்பம் மாறும் போது, இந்த இமெயில் முகவரிகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthuraja - dindigul,இந்தியா
09-செப்-201021:35:18 IST Report Abuse
muthuraja cell போன் மூலம் payanpaduthum இனைய வேகத்தை kuutuvathu பற்றி kuurungal எனது operating சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ் பீ டூ.
Rate this:
Share this comment
Cancel
முத்துராஜா.ந - dindigul,இந்தியா
09-செப்-201021:23:46 IST Report Abuse
முத்துராஜா.ந neengal guriyapadi gpedit.msc என்ற mugavarien keel நான் எனது inaya vegathai kuta ninaithu அவ்வாறு செய்தேன். ஆனால் athan pinnar than inaya waygam kuraithatpool enakku therigirathu.நான் nokia 2700௦௦ மொபைல் udan airtel sim sayrthu blutooth வழியாக inayathai payanpaduthi வருகிறேன்.என்னுடைய inaya vegathai athigarika veru vali yathenum kuuravum.
Rate this:
Share this comment
Cancel
ந.மாடசாமி - Sivakasi,இந்தியா
18-ஜூலை-201014:08:16 IST Report Abuse
ந.மாடசாமி I have used this excellent tip and prevented spam mails. Thanks to the Editor of Computer Malar and his team. Madasamy
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X