ஒருவருக்கு மொபைலில் அழைப்பு விடுக்கையில், வழக்கமான ட்ரிங் ட்ரிங் அல்லது அவர் செட் செய்த, அவருக்குப் பிடித்தமான பாடல் ஒலிக்கும். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அதனைக் கேட்டுத்தான் தொலைக்க வேண்டும். இதற்குப் பதிலாக, ஒருவரை அழைக்கையில் நாம் விரும்பும் பாடல் அல்லது ட்யூன் நமக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும் இல்லையா! இதனை ரிவர்ஸ் ரிங் பேக் டோன் என்று அழைக்கின்றனர். முதல் முதலாக இந்தியாவில் இதனை டாட்டா டொகொமோ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் போஸ்ட் பெய்ட் மற்றும் பிரி பெய்ட் சந்தாதாரர்கள் இந்த வசதியை அனுபவிக்கலாம். இதற்கு மை சாங் சர்வீஸ் (My song service) என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை முற்றிலும் புதுமையாக இருப்பதுடன், மற்ற மொபைல் சர்வீஸ் நிறுவனங்களிடமிருந்து டாட்டா டொகொமோவினை வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்த சேவையைப் பெற 543217 என்ற எண்ணுக்கு டயல் செய்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இவ்வகையில் மூன்று பாடல்களைத் தேர்ந்தெடுக்கலாம். பாடலைத் தேர்ந்தெடுக்கையில் ஒவ்வொரு விநாடிக்கும் 2 பைசாவும், இதனை டவுண்லோட் செய்திட பாடல் ஒன்றுக்கு ரூ.10 மற்றும் இதனை 30 நாட்களுக்குப் பயன்படுத்த ரூ.15ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.