விண்டோஸ் 7 வேகமாக இயங்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜன
2012
00:00

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக வேகமாக பயனாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம். நம் கம்ப்யூட்டர் செயல்பாடு களை வேகமாக மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. விரைவாக அப்ளிகேஷனை இயக்க: கீ போர்டில் விரல்களை இயக்கியவாறே, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க வேண்டுமா? முன்பு இவற்றை இயக்க, மவுஸ் கொண்டு, முகப்பு திரையில் ஐகான் இருந்தால், அதன் மீது கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். அல்லது விண்டோஸ் லோகோ கீ அழுத்தி, கிடைக்கும் பட்டி யலில், ஆல் புரோகிராம்ஸ் (All Programs) தேர்ந்தெடுத்து, அதில் அப்ளிகேஷன் புரோகிராமின் இடம் தேடி கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. விண்டோஸ் கீ அழுத்தி, கிடைக்கும் கட்டத்தில், அப்ளிகேஷன் பெயரைச் சுருக்கமாக டைப் செய்து, (எ.கா: Google Chrome இயக்க ‘chr’, iTunes இயக்க ‘it’) என்டர் தட்டினால் போதும். அல்லது டாஸ்க் பாரில் இந்த அப்ளிகேஷன்களை வைத்திருந்தால், விண்டோஸ் கீயுடன், டாஸ்க் பாரில் அந்த அப்ளிகேஷன் இடம் பெற்றுள்ள இடத்தின் எண்ணை இணைத்து அழுத்தினால் போதும். எடுத்துக்காட்டாக, குரோம் பிரவுசர் இரண்டாவது இடத்தில் இருந்தால், விண்டோஸ்+2 அழுத்தினால் குரோம் பிரவுசர் இயங்கத் தொடங்கும்.

2. ஆட்டோ பிளே கட்டுப்படுத்துதல்: ஒரு சிடி அல்லது டிவிடி திரைப்பட சிடியைப் போட்டவுடன், அது இயங்கத் தொடங்கு கிறது. அது ஏன்? என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? விண்டோஸ் ஆட்டோ பிளே (Windows Auto Play) என்ற செயல்பாடு இதனை இயக்குகிறது. இந்த இயக்கம் எந்த சிடிக்கும் பொருந்தும். அது பைல்கள் அல்லது புரோகிராம்கள் இருப்பதாக இருந்தாலும் இதே போலச் செயல்படும். இதனை நம் விருப்பப்படியும் மாற்றி அமைக்கலாம். இதற்கு முதலில் Control Panel> AutoPlay எனச் செல்லவும். இங்கு சிடி, டிவிடி, கேமரா, ஸ்மார்ட் போன் என எந்த சாதனத்தை இணைத்தாலும் அதனை எப்படி இயக்க வேண்டும், இணைத்தவுடனா அல்லது நாம் விரும்பும் போதா என செட் செய்திடலாம்.

3. தானாக இடம் மாறும் விண்டோ: மாறா நிலையில், விண்டோஸ் 7 சிஸ்டம், திறக்கப் பட்டிருக்கும் விண்டோ ஒன்றை நீங்கள் ஓர் ஓரத்திற்கு இழுத்துச் சென்றால், விண்டோ வினைச் சுருக்கி ஓரத்தில் அமைக்கும்; மேலாக இழுத்தால், திரை முழுமையும் கிடைக்கும். வேறு வகையில் திரையில் பாதியாக அமைக்கும். பல விண்டோக் களை ஒரே நேரத்தில் திரையில் பார்த்த வாறே இயக்க எண்ணுபவர்களுக்கு இந்த செயல்பாடு உதவக் கூடியதாகவே உள்ளது. ஆனாலும், பலருக்கு இது எரிச்சலைத் தரும். இந்தச் செயல்பாட்டினை நிறுத்த எண்ணுவார்கள். இதனை நிறுத்த, Control Panel, Ease of Access Center சென்று, Make the mouse easier to use என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Prevent windows from being automatically arranged when moved to the edge of the screen என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

4. தவறினைச் சரி செய்திட வேறு ஒரு பயனாளராக: விண்டோஸ் இயக்கம் அல்லது தினந்தோறும் நீங்கள் பயன் படுத்தும் ஒரு அப்ளிகேஷன் இயங்குவதில் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா? விண்டோஸ் 7 இயக்கத்தில் இதனைப் புதிய ஒரு வழியில் சரி செய்திடலாம். வழக்கமான உங்கள் யூசர் அக்கவுண்ட் விடுத்து, தனியாக ஒரு யூசர் அக்கவுண்ட் திறந்து, அந்த பயனாளராக இந்த அப்ளிகேஷன்களை இயக்கிப் பார்க்கவும். இந்த வழியில் மீண்டும் பிரச்னைகள் வருகின்றனவா எனக் கண்காணிக்கவும். இந்த அக்கவுண்ட்டில் பிரச்னைகள் இல்லை என்றால், பிரச்னைகள் சிஸ்டத்தைப் பாதிக்கும் வகையில் இல்லை என்று பொருளாகிறது. அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததில், அல்லது செட்டிங்ஸ் அமைப்பதில் ஏதேனும் சிறிய அளவில் தவறு நேர்ந்திருக்கலாம். இரண்டு அக்கவுண்ட்களிலும் பிரச்னைகள் ஏற்பட்டால், அப்ளிகேஷன் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

5. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைலின் துணைப் பெயர்: பைல்களின் துணைப் பெயர், நீங்கள் எத்தகைய பைலைத் தேடுகிறீர்கள் அல்லது தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைக் காட்டும். .doc என்பது வேர்ட் பைலின் துணைப் பெயர். ஒரு டிஜிட்டல் போட்டோ .jpg என்ற துணைப் பெயரினைக் கொண்டுள்ளது. இப்போது வரும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்களின் துணைப் பெயரை மறைத்துக் காட்டுகிறது. ஆனால், இந்த பெயர் காட்டப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், விண்டோஸ் எக்ஸ்பு ளோரரை இயக்குங்கள். பின்னர் Organize, Folder and search options எனச் செல்லுங்கள். இங்கு View டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் Hide extensions for known file types என்பதற்கு முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

6. லேப்டாப் ட்ராக்பேட் இயக்க நிறுத்தம்: லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள், தொடக்கத்தில் கீ போர்டில் டைப் செய்கையில் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் விரல்கள் ட்ரேக் பேடைத் தொட்டு விட்டால், உடன் கர்சர் எங்காவது சென்று நிற்கும். டைப் செய்வது எல்லாம் வேண்டாத இடத்தில் டைப் ஆகும். ட்ரேக் பேடில் விரல் அல்லது உள்ளங்கைப் பாகம் படாமல் டைப் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்த சிரமத்தை TouchpadPal 1.2 என்ற புரோகிராம் நீக்குகிறது. இதனை http://tpp.desofto.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டால், பிரச்னை தீரும். இது தானாகவே இயங்கி, நீங்கள் கீ போர்டில் டைப் செய்கையில், ட்ரேக் பேடின் செயலாக்கத்தினை நிறுத்திவிடும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahindeesh - Cuddalore,இந்தியா
05-பிப்-201222:14:20 IST Report Abuse
Mahindeesh கம்ப்யூட்டர் மலரில் சுலபாக பழைய தகவல்களைத் தேட ஒரு SEARCH BOX வைக்கலாமே ப்ளீஸ்..? உதாரணமாக நான் WINDOWS 7-இல் TEMP FILE ஒன்றை (FXSAPIDDebugLogFile.txt என்கிற பைலை) அழிக்க முடியாமல் இன்றும் தடுமாறுகிறேன்-இது குறித்த தகவல் முந்தைய இதழ்களில் இருந்தால் உடனே எங்ஙனம் அறிய..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X