கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2012
00:00

கேள்வி: விண்டோஸ் 2007 சிஸ்டத்தில், ட்ரைவர் பைல்களை முழுமையாக அன் இன்ஸ்டால் செய்திட முடியவில்லை. இதற்கான செட்டிங்ஸ் அமைப்பு அல்லது வழிகளைக் காட்டி உதவி செய்திடுங்கள்.
-எம். மீனா துரைராஜ், மதுரை.
பதில்: ட்ரைவர் புரோகிராம் ஒன்றை முழுமையாக நீக்க (அன் இன்ஸ்டால்) விரும் பினால், அந்த புரோகிராமுடன் இணைத்துத் தரப்பட்டிருக்கும் அன் இன்ஸ்டால் வசதியைப் பயன்படுத்துவதே நல்லது. கிராபிக்ஸ் கார்ட் மற்றும் சவுண்ட் கார்ட்களை இன்ஸ்டால் செய்கையில் நாம் ஒரு இன்ஸ்டாலர் மூலம் தான் இவற்றைக் கம்ப்யூட்டரில் இணைத்திருப்போம். அத்தகைய சூழ்நிலையில், மற்ற புரோகிராம்களின் ட்ரைவர்களை நீக்குவது போல நீக்கலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து கிடைக்கும் கட்டத்தில் Uninstall Program என டைப் செய்து என்டர் தட்டவும். கிடைக்கும் Uninstall விண்டோவில் பட்டியல் ஒன்று தரப்படும். அதில் உங்கள் சாதனம் அல்லது ட்ரைவர் புரோகிராம் இருக்கும். அதில் டபுள் கிளிக் செய்து அன் இன்ஸ்டால் பணியினைத் தொடங்கவும்.
சில சாதனங்களுக்கு அன் இன்ஸ்டாலர் இருப்பதில்லை; அல்லது அவை பட்டியலில் காட்டப்படுவதில்லை. அந்நிலையில், Device Manager பயன்படுத்தி ட்ரைவர் பைல்களை முழுமையாக நீக்கலாம். இதற்கு ஸ்டார்ட் கிளிக் செய்து Device Manager என டைப் செய்து என்டர் அழுத்தவும். உங்கள் சாதனத்தின் பெயரைக் கண்டறிந்து டபுள் கிளிக் செய்திடவும். இதனைப் பொறுமையாகத் தேட வேண்டிய திருக்கும். ஏனென்றால், எடுத்துக்காட்டாக, கிராபிக்ஸ் கார்ட் Display Adapters என்பதன் கீழ் தரப்பட்டி ருக்கும். வெளிப்படையாகக் காட்டப்படமாட்டாது. இதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் Uninstall என்பதில் கிளிக் செய்திடவும். ட்ரைவர் பைல் நீக்கப்படும் முன்னர், விண்டோஸ் உங்களிடம் பைலை நீக்குவதனை உறுதி செய்திட கேள்வி கேட்டு, நீங்கள் ஓகே கிளிக் செய்த பின்னரே, ட்ரைவர் பைலை முழுமையாக நீக்கும்.

கேள்வி: இணையத்திலிருந்து டவுண்லோட் செய்த வீடியோ பைல் ஒன்றை இயக்க முற்படுகையில் அதற்கான இOஈஉஇ ஒன்றையும் டவுண்லோட் செய்திட வேண்டும் என மெசேஜ் வருகிறது. ஆனால், மற்ற வீடியோக்கள் இயங்குகின்றன. இது என்ன பிரச்னை?
-மா. செழியன், மதுரை.
பதில்: சில வேளைகளில் இந்த மெசேஜ் கிடைப்பதாக எழுதி உள்ளீர்கள். பெரும்பாலும் டவுண்லோட் செய்த சில வீடியோக்களுக்கும், சில வேளைகளில் ஆடியோ பைல்களூக்கும் இது தேவைப்படலாம்.
கோடெக் என்பது Coder-Decoder அல்லது Compressor-Decompressor ஆகிய இரண்டையும் குறிக்கும் சுருக்குச் சொல். இவற்றில் ஆடியோ, வீடியோ மற்றும் டெக்ஸ்ட் கோடக் உள்ளன. இவை ஆடியோ, வீடியோ மற்றும் டெக்ஸ்ட் சப் டைட்டிலிங் ஆகியவற்றை ஒருங்கிணைக்கத் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் டவுண்லோட் செய்த வீடியோ கிளிப்களுக்குத்தான் இது போன்ற கோடக் தேவைப்படும்.

கேள்வி: வேர்ட் புரோகிராமினை அடிக்கடி பயன்படுத்துகிறேன். மெனு பாரில் சில குறிப்பிட்ட மெனு பட்டன்களை அடிக்கடி பயன்படுத்துகிறேன். இவற்றை எனக்கு வாகாக அமைத்திட முடியுமா? நான் பல முறை முயற்சி செய்தும், அதற்கான செட்டிங்ஸ் எங்குள்ளது என்று தெரியவில்லை.
-எஸ். பாஸ்கரன், செங்கல்பட்டு.
பதில்: இது மிகவும் எளிது. இதற்கென தனியே செட்டிங்ஸ் எல்லாம் தேட வேண்டாம். வழியைச் சொல்லட்டுமா!
முதலில் Alt கீயை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங்கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு நான்கு முனை சக்கர அம்பாக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டுவிடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் மெனு பாரில் பட்டன்கள் அமைந்திருக்கும்.

கேள்வி: கம்ப்யூட்டர் மானிட்டர் திரையில் புரோகிராம்கள், பைல்கள் என ஐகான்கள் கலந்து உள்ளன. இவற்றைச் சரியான இடைவெளியில் அழகாக அடுக்கி வைப்பது எப்படி?
-சி. முத்துலிங்கம், திண்டிவனம்.
பதில்: ஐகான்களை அழகாக அடுக்கி வைத்து கம்ப்யூட்டர் திரையை அழகாகக் காட்ட விரும்புகிறீர்கள். உங்கள் விருப்பப்படி ஐகான்களின் உருவத்தினைக் கூட சிறிது, பெரிது என அமைக்கலாம். இதற்கான வழி இதோ!
டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties பிரிவைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். கிடைக்கும் விண்டோவில் உள்ள Appearance டேபில் கிளிக் செய்திடவும். அங்குள்ள Advance பட்டனில் அதன்பின் கிளிக்கிடவும். அங்கு Item என்ற பிரிவில் உங்கள் ஐகானை எப்படி எல்லாம் வளைக்கலாம் என்று காணலாம். எடுத்துக்காட்டாக நெட்டு வரிசையிலும் படுக்கை வரிசையிலுமாக ஐகான்கள் அமைக்கப்படும் இடைவெளியை மாற்றலாம். அனைத்தையும் முடித்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் செட் செய்தபடி ஐகான்கள் அமைந்திருக்கும்.

கேள்வி: என் மகன் தற்போது ஆறாவது படிக்கிறான். இந்த விடுமுறையில் அவனுக்கு எளிதாக புரோகிராமிங் வகையினை அறிமுகப் படுத்த விரும்புகிறேன். அதற்கான இலவச புரோகிராம் இணையத்தில் கிடைக்குமா?
-சி. லட்சுமி பிரியா, காரைக்குடி.
பதில்: உங்கள் மகன் கல்வி குறித்து மிகப் பொறுப்பாகத் திட்டமிடும் உங்களுக்கு என் பாராட்டுக்கள். நிறைய தளங்கள் இருந்தாலும் என்னைக் கவர்ந்த ஒரு தளம் குறித்து கூறுகிறேன். அதன் பெயர் Scratch. இது ஒரு புரோகிராமிங் மொழி. விசுவல் புரோகிராமிங் லாங்குவேஜ் வழியாக குழந்தைகளுக்கு புரோகிராமிங் குறித்த அடிப்படைகளைக் கற்றுத் தருகிறது. இதனைப் படித்துத் தெரிந்து கொண்ட பின்னர் சிறுவர்கள் தாங்களாகவே கம்ப்யூட்டருக்கான கேம்ஸ்களை உருவாக்க முடியும். வீடியோ மற்றும் மியூசிக் புரோகிராம்களையும் வடிவமைக்க முடியும். இது ஒரு ஸ்டோரி போர்ட் உருவாக்குவதைப் போல இயங்குகிறது. வண்ணங்களில் இயங்கும் இதன் தன்மை நம்மை ஈர்க்கிறது.
புரோகிராமிங்கிற்குத் தேவையான அனைத்தும் பல்வேறு பேனல்களில் தரப்படுகிறது. அவற்றிலிருந்து தேவை யானதை எடுத்துப்போட்டு நாம் விரும்புவதனை உருவாக்கலாம்.
புரோகிராமிங் மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு உங்கள் குழந்தைகளுக்குச் சரியான தொடக்கத்தினை இந்த புரோகிராம் கொடுக்கிறது. இந்த புரோகிராம் விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களுக்கெனத் தரப்படுகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி:http://scratch.mit.edu/

கேள்வி: சமீபத்தில் புதிய ஆபீஸ் ஒன்றில் சேர்ந்துள்ளேன். அங்கு முழுவதும் கம்ப்யூட்டரிலேயே பணியாற்ற வேண்டியுள்ளது. இங்கு எந்த டாகுமெண்ட் பிரிண்ட் எடுத்தாலும், ப்ராப்பர்ட்டீஸ் பிரிண்டிங் சேர்த்து எடு என்கிறார்கள். எனக்குப் புரியவில்லை. இதனை விளக்கி அன்பு கூர்ந்து வழி காட்டவும்.
-பெயர் தராத வாசகர், திருப்பூர்.
பதில்: எதனையும் புதிதாகக் கற்றுக் கொள்வதில் தவறில்லை. அதற்காக பெயர் இல்லாமல் கடிதம் எழுத வேண்டுமா? இதனைப் பெரும்பாலும் பலர் பயன் படுத்துவதில்லை. இருப்பினும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் தருகிறேன்.
டாகுமெண்ட் அச்செடுக்கையில் பிரிண்ட் ப்ராப்பர்ட்டீஸ் தகவல்களை டாகுமெண்ட் டிலேயே அச்செடுத்து வைத்துக் கொள்வது நமக்கு பைலிங் செய்வதிலும் பின்னர் அச்செடுப்பதிலும் உதவியாக இருக்கும். இதனை அனைத்து அச்செடுக்கும் படி களிலும் இருக்குமாறு செட் செய்திடலாம்.
Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Include with document” என்ற பகுதியில் “Document properties” என்ற வரியின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடினால் நீங்கள் அச்செடுக்கையில் ஒவ்வொரு டாகுமெண்ட்டிலும் அந்த டாகுமெண்ட் குறித்த தகவல்கள் தனியே கிடைக்கும். அலுவலகங்களில் இதனைக் கோப்பாக வைக்கையில் இந்த குறிப்புகள் பெரிதும் உதவியாக இருக்கும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முத்துக்குமார் - singapore,சிங்கப்பூர்
20-ஜன-201213:03:04 IST Report Abuse
முத்துக்குமார் MS excel 2007 இல் ஒரு அனிமேஷன் பேக்ரவுண்டு செட் செய்திட விரும்புகிறேன். ஆனால் முடியவில்லை, அதற்கு ஏதும் வழி இருக்கிறதா ?
Rate this:
Share this comment
Cancel
jegan - kanyakumari,இந்தியா
17-ஜன-201217:01:39 IST Report Abuse
jegan 1. எனக்கு ஓரு பிளாக்கர்(blogger) site இருக்கு அதன் மூலம் சம்பாதிக்க முடியுமா? 2 . வேற முறை மூலம் Onlineல சம்பாதிக்க முடியுமா? details....
Rate this:
Share this comment
Cancel
mohamed hanifa - riyadh,இந்தியா
17-ஜன-201201:09:44 IST Report Abuse
mohamed hanifa Dear sir, thanks for your respond
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X