சென்னை இ.எஸ்.ஐ.சி.,யில் மருத்துவப் பணி இடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2012
00:00

இந்தியாவில் உள்ள முறை சாரா பணியாளர்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றுவதில் எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்பொரேஷன் மருத்துவமனைகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
பிரிவுகள் : இ.எஸ்.ஐ.சி.,யின் சென்னை மண்டலத்தில் ஸ்டாப் நர்ஸ் பிரிவில் 47 இடங்களும், மெடிக்கல் ரெகார்ட் ஆபிசர் பிரிவில் ஒரு இடமும், பார்மஸிஸ்ட் (அலோபதி) பிரிவில் 5 இடங்களும், ஆப்டோமெட்ரிஸ்ட், மெடிக்கல் ரெகார்ட் டெக்னீசியன் ஆகிய பிரிவுகளிலும், லேப் அசிஸ்டன்ட் பிரிவில் 5 இடங்களும், டார்க் ரூம் அசிஸ்டன்ட் பிரிவில் ஒரு இடமும் நிரப்பப்பட உள்ளன.
என்ன தேவை : இ.எஸ்.ஐ.சி.,யின் மருத்துவம் சார்ந்த காலி இடங்களில் ஸ்டாப் நர்ஸ் பிரிவுக்கு உச்ச பட்ச வயது 37 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனைய பிரிவுகளுக்கு இது 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டார்க் ரூம் அசிஸ்டன்ட் பிரிவுக்கு அதிக பட்ச வயது 27 ஆகும்.
இதர தகவல்கள் : மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.225/-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை கோர் பேங்கிங் வசதியுள்ள ஏதாவது ஒரு இந்தியன் வங்கிக் கிளை மூலமாக ESI Savings Fund Account No-1ல் செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யவேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டைப் பின்வரும் முகவரிக்கு 14.02.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் Application for the Post of ______________ESIC PGIMSR/ESIC/ESI Medical College/Hospitals என்று குறிப்பிட வேண்டும்.
முகவரி:
The Medical Superintendent,
ESI&PGIMSR & Model Hospital,
Ashok Pillar Road,
K.K. Nagar, Chennai 600 078.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 07.02.2012
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 14.02.2012
இணையதள முகவரி : www.esichennai.org/

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X