ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஜன
2012
00:00

ஏற்கனவே முன்பு ராம்நிட் வைரஸ் வந்து இறங்கிய போது மிகவும் கஷ்டப்பட்டேன். தாங்கள் அப்போது கூறிய வழிகள் மூலம் சரி செய்தேன். மீண்டும் இந்த வைரஸ் வருகிறது என்ற செய்தி கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை என்ற ஒரு நிம்மதி தான் இப்போதைக்கு ஆறுதலாய் உள்ளது.
-ஆ.சியாமளா, திருவள்ளுர்.

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாக இயங்குவதற்கான வழிமுறை களை நீங்கள் அவ்வப்போது தருவது எங்களுக்கு டானிக் போல. ஒவ்வொரு முறையும் புதிய வழிகளையும், பழைய முக்கிய வழிகளையும் காட்டுவதனைத் தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-ஆ. மா. சிவானந்தம், தாம்பரம்.

எக்ஸெல் நம் பிழையக் காட்டுவதனை அறியக் கூட ஒரு குறுக்கு வழி அமைத்து தருகிறீர்களே. சபாஷ் சார்!
-கா.உமா பிரகாஷ், மதுரை.

பைல்களைச் சுருக்கும் புரோகிராம்களில் பெரும்பாலும், இதுவரை அறியப்படாததாக உள்ளன. நல்ல வழி காட்டுதலுக்கு நன்றி.
-கே.நீதிவாணன், திருப்பூர்.

நான் வெகுநாட்களாகவே குயிக் ஸிப் பயன்படுத்தி வருகிறேன். நீங்கள் குறிப்பிட்டது போல அதன் இன்டர்பேஸ் மிக எளிமையாகவும், நாம் பயன்படுத்த நல்ல வழி காட்டுவதாகவும் உள்ளது.
-என். சுரேந்திரன், கோவை.

கம்ப்யூட்டர் கேம்ஸ் இருபக்கம் தீட்டப் பட்ட கத்தி என மிக அருமையாக விவரித்து இருக்கிறீர்கள். நான் என் பிள்ளைகளை கேம்ஸ் விளையாடுவதனைத் தடுத்து வந்தேன். தங்களின் கட்டுரையைப் படித்தபின், என் கண்காணிப்பில் விளையாட அனுமதித்துள்ளேன்.
-என். முருகதாஸ், மேட்டுப் பாளையம்.

நியூசியம் ஓர் அருமையான தளம். ஆனால் ஏன் இதில் நம் நாட்டுப் பத்திரிக்கைகள், குறிப்பாக இந்திய மொழிப் பத்திரிக்கைகள் மிகவும் குறை வாகவே உள்ளன என்று தெரியவில்லை.
-க.ராம் மஹேஷ், சென்னை.

ஒர்க்ஷீட்டில் தலைப்பை அமைக்க இடம் அமைக்க நல்ல டிப்ஸ் தந்துள்ளீர்கள். பல ஆண்டுகளாய், இதில் மிகவும் கஷ்டப் பட்டே அமைத்து வந்தேன். தொடர்ந்து வேர்ட் மற்றும் எக்ஸெல் புரோகிராம் களூக்கான டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களை நிறைய தரவும்.
-மு. இளவேனில், மதுரை.

மொபைல் வழியாகப் பணம் செலுத்தும் முறை வந்தால், நம் பணம் பரிமாறும் முறையில் பெரிய புரட்சி ஏற்படும். இந்த தொழில் நுட்பம் நடைமுறைக்கு வருமுன்னரே, போன்களில் இந்த வசதி கொண்ட போன் கிடைப்பது வர இருக்கும் எதிர்கால நிதி நடைமுறைக்கு நம்மைத் தயார்ப்படுத்துகிறதாக உள்ளது.
-பேரா. சிவஷண்முகம். பள்ளிக்கரணை.

என் கேள்விக்கு தந்த பதிலைப் புரிந்து கொண்டு, நீங்கள் கூறியபடியே பட்டன் களை மெனு பாரில் மாற்றி அமைத்து சந்தோஷமாகச் செயல்படுகிறேன். மிக்க நன்றி.
-எஸ். பாஸ்கரன், செங்கல்பட்டு.

ஐ.பி. முகவரியைத் திருடி எப்படித் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பத னையும் எழுதவும். நாங்கள் கொஞ்சம் கவனமாக இருக்கலாம் அல்லவா!
-என். கணேஷ் சித்தன், வேலூர்.

வேர்ட் டிப்ஸ் இரண்டு வாரங்களாக இல்லையே! ஏன்? எத்தனையோ எழுதும் நீங்கள், எங்களுக்காக சிலவற்றையாவது தரவும்.
-க.இளையராஜா, மாணவர்கள் சார்பாக, கம்பம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - Chennai,இந்தியா
27-ஜன-201215:44:22 IST Report Abuse
Ramesh Sir, i have been reading, your computer malar articles for the past one month., they are very much useful.,i suggested most of fris to get malar and read these articles., is there any option in online to read all the past published articles?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X