கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஜன
2012
00:00

கேள்வி: என் குழந்தைகள், விருந்தினர்கள், கம்ப்யூட்டர் டெக்னீஷியன்கள் மட்டும் பயன்படுத்த ஒரு யூசர் அக்கவுண்ட் தனியே உருவாக்க விரும்புகிறேன். இதற்கான வழி என்ன?
-சா. முத்தையா, காரைக்குடி.
பதில்: முதலில் Start கிளிக் செய்து பின் Control Panel தேர்ந்தெடுக்கவும். இப்போது கண்ட்ரோல் பேனல் விண்டோ கிடைக்கும். இதில் User Accounts என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் யூசர் அக்கவுண்ட்ஸ் விண்டோவில் Create a New Account என்று இருப்பதில் கிளிக் செய்திட வும். இப்போது நியூ அக்கவுண்ட் விஸார்ட் கிடைக்கும். இதில் விஸார்ட் உங்களை புது அக்கவுண்ட்டுக்கான பெயரைக் கேட்கும். நீங்கள் விரும்பும் வகையில், அடையாளம் காட்டும் வகையில் பெயர் கொடுக்கலாம். அதன் பின் இந்த அக்கவுண்ட் எந்தவித டைப்பாக இருக்க வேண்டும் என கேட்கப்படும். குறைந்த அளவே சுதந்திரம் கொடுப்பது உங்கள் குறிக்கோள் என்பதால் Limited User என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Create Account என்பதில் கிளிக் செய்தால் அக்கவுண்ட் உருவாக்கப்படும். இப்போது நீங்கள் விரும்பியபடி அக்கவுண்ட் உருவாக்கப் பட்டுவிட்டது. இதிலிருந்து அந்த யூசர் கம்ப்யூட்டருக் குள் நுழையலாம். அவருடைய பாஸ்வேர்ட் அல்லது அவர் உருவாக்கும் பைல்களை மாற்றலாம். இவ்வாறே கம்ப்யூட்டரை ரிப்பேர் கடைக்கு எடுத்துச் செல்கையில் இதே போன்று ஒரு அக்கவுண்ட்டை உருவாக்கி எடுத்துச் சென்று அவர்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து பார்க்க அந்த அக்கவுண்ட்டைப் பயன்படுத்தச் சொல்லலாம்.

கேள்வி: எனக்கு வரும் இமெயில்களில் செய்தியை மட்டும் அல்லது நான் விரும்பும் பகுதியை மட்டும் அச்செடுக்க, பிரிண்டரில் எப்படி செட் செய்வது?
-சி. மோகனவேல், திருவண்ணாமலை.
பதில்: நமக்கு வரும் இமெயில் அஞ்சல் செய்திகளில், தகவல் தரும் வரிகள் மட்டுமே நமக்குத் தேவையானதாகும். இமெயில் வரும் வழி குறித்த தகவல்களைக் கொண்டுள்ள ஹெடர், சிக்னேச்சர், செய்தியின் தன்மை குறித்த சில அறிவிப்புகள், செய்தி அனுப்புபவர் தரும், அவர் விரும்பும் இணைய தள முகவரிகள், தேவையற்ற சில மேற்கோள்கள் இவை எல்லாம் அச்சில் நமக்கு எரிச்சல் ஊட்டும் விஷயங்கள் தான். ஆனால், பிரிண்டரில், இதிலிருந்து சிலவற்றை மட்டும் விலக்கி பிரிண்ட் எடுக்கும் வகையில் செட் செய்திட முடியாது. அதற்குப் பதிலாக, தேவையானதை மட்டும் காப்பி செய்து, அதனை ஒரு வேர்ட் எடிட்டிங் புரோகிராம் (வேர்ட், வேர்ட்பேட் போன்றவை) ஒன்றில் பேஸ்ட் செய்து பிரிண்ட் எடுக்கலாம்.

கேள்வி: பேஸ்புக் தளத்தில் என்னைப் பற்றிய பல தகவல்களைத் தந்துள்ளேன். சில என் நினைவில் இல்லை. இவற்றை எங்கு எப்படி மொத்தமாகப் பெற முடியும். டெக்ஸ்ட் பைலாகக் கிடைக்குமா?
-ஆ. சிவராஜ் குமார், மதுரை.
பதில்: நல்ல கேள்வி. இது போல பல தளங்களில் நாம் நம்மைப் பற்றிய தகவல்களை அதிகரித்துக் கொண்டே செல் கிறோம். சில வேளைகளில் நம் தகவல் களையே நாம், சந்தேகக் கண்ணோடு நாம் தான் கொடுத்தோமா என்று எண்ணுகிற வகையில் இவை அமைந்துவிடுகின்றன. பேஸ்புக் தளம் இந்த தகவல்களைப் பெறும் வழியைக் கொண்டுள்ளது. யாரும் அதைப் பற்றி அவ்வளவாக நினைப்பது இல்லை என்பதால், பலரும் இந்த வழியை அறியாமல் இருக்கின்றனர். இதோ இங்கே அதனைப் பார்க்கலாம்.
முதலில் பேஸ்புக் தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டில் செல்லுங்கள். உங்கள் தள முகப்பு பக்கம் கிடைத்தவுடன், வலது மேல் மூலையில் உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Account Settings என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த பக்கத்தில், கீழாகச் சென்று Download a copy of your Facebook data என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து கிடைக்கும் பக்கத்தில், உங்கள் டேட்டாவினைக் காத்து வைத்திட (Archive) வழி தரப்படும். இங்கு Start My Archive பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் டேட்டாவினைச் சேகரித்து காத்திட சற்று நேரம் ஆகும், பரவாயில்லையா! என்ற செய்தி தரப்படும். சரி எனச் சொல்ல, இரண்டாவது முறையாக, Start My Archive பட்டனில் கிளிக் செய்திடவும். அவ்வளவுதான்! நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்களைப் பற்றிய ஸிப் பைல் எங்கு கிடைக்கும் என்பதற்கான அஞ்சல் அனுப்பப்படும். அங்கு கிளிக் செய்து பைலைப் பெறலாம். படங்கள், நிகழ்வு கள், நண்பர்கள், வால் போஸ்டர்கள் என அனைத்தும் அதில் கிடைக்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு என் கம்ப்யூட்டரை மாற்றப் போகிறேன். இந்த சிஸ்டத்துடன் இயங்கும் வகையில் இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் எது சிறப்பாக இருக்கும் என டிப்ஸ் தரவும்.
-சி. கார்த்திக், சென்னை.
பதில்: விண்டோஸ் 7 பதிந்தவுடன் நீங்கள் இன்ஸ்டால் செய்திட வேண்டிய முதல் சாப்ட்வேர், ஆண்ட்டி வைரஸ் தொகுப்புதான். விண்டோஸ் 7 பதிந்து முடித்தவுடனேயே, ஒரு பாப் அப் கட்டத்தில், இணையத்தில் ஆண்ட்டி வைரஸ் தேடிப் பெறுங்கள் என்று ஒரு செய்தி கிடைக்கும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இன்ஸ்டால் செய்த பின்னர், இந்த பாப் அப் கட்டம் மறைந்துவிடும்.
இப்போது பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற, கூடுதல் திறனும் வசதிகளும் கொண்ட சில ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன. AVG antivirus– இந்த தொகுப்பு ஆண்ட்டி ஸ்பைவேர் தொகுப்பாகவும் செயல்படும். Avira Anti-Virus Personal Edition – எந்த சிக்கலுமின்றி சிறப்பாகச் செயல்படும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு என அனைவராலும் சான்றளிக்கப்படும் சாப்ட்வேர் தொகுப்பு. Norton Anti-Virus 2009 – மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 2007 சிஸ்டத்துடன் இணைந்து செயலாற்றும் சாப்ட்வேர் தொகுப்புகள் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது. சிறப்பான பாதுகாப்பினைத் தருகிறது. அதிச்ண்t அணtடி-ஙடிணூதண் ஏணிட்ஞு – பொதுவாகப் பல கம்ப்யூட்டர்களில் காணப்படும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர். விண்டோஸ் 7 சிஸ்டம் இயக்கத்திற்கு முழுப் பாதுகாப்பினைத் தருகிறது என்ற சான்றினைப் பெற்றது. விண்டோஸ் எக்ஸ்புளோரர் ரைட் கிளிக் மெனுவில் இடம் பெற்று, பைல்களை ஸ்கேன் செய்து வைரஸ் கண்டறிய உதவிடும் வசதியைத் தருகிறது.
இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றைக் கட்டாயமாகப் பதிந்து இயக்குவதுடன், அவ்வப்போது இணையம் வழி அப்டேட் செய்வது மிக மிக முக்கியம்.

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திறக்காமலேயே, ஷார்ட்கட் கீகள் மூலம் ஓர் இணைய தளத்தினைத் திறக்க முடியுமா? அப்படியானால், பிரவுசர் திறக்காமலேயே தளம் எப்படி திறக்கப்படும்?
-சி.கண்ணன், திருப்பூர்.
பதில்: நீங்கள் சற்று குழப்படைந் துள்ளீர்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 பயன்படுத்துவதாக உங்கள் நீண்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதில் ஷார்ட்கட் கீ உருவாக்கி, உங்கள் பேவரிட் தளத்தினைத் திறக்கலாம். இது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அல்லது நீங்கள் செட் செய்த வேறொரு பிரவுசரில் திறக்கப்படும். இதற்குக் கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளவும்.
1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் கமாண்ட் பாரில் பேவரிட்ஸ் பட்டனில் கிளிக் செய்திடவும்.
2. இதில் உள்ள பேவரிட் தளங்களில் எதற்கு ஷார்ட்கட் கீ அமைக்க விரும்புகிறீர்களோ அதனை ரைட் கிளிக் செய்திடவும். மெனுவில் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது அந்த பேவரிட் தளத்திற்கான ப்ராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் “Web Document” என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Shortcut Key என்று இருப்பதற்கு அடுத்தபடியாக ஒரு ஷார்ட் கட் கீ தொகுப்பினை டைப் செய்திடவும். இந்த ஷார்ட் கட் கீ வேறு அப்ளிகேஷன் புரோகிராம் அல்லது விண்டோஸ் ஆப்பரெட்டிங் சிஸ்டம் பயன்படுத்தாததாய் இருக்க வேண்டும். இதற்கு Alt, Ctrl, மற்றும் Shift போன்றவற்றைப் பயன்படுத்தவும்.
எடுத்துக்காட்டாக தினமலர் இணைய தளத்திற்கு நீங்கள் Ctrl + Shift + Alt + D என்பதை உருவாக்கலாம்.
இதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி இந்த ஷார்ட் கட் கீயினை அழுத்தினால் உங்களுக்குப் பிடித்தமான தளம் நீங்கள் டிபால்ட்டாக அமைத்திருக் கும் பிரவுசரில் திறக்கப்படும். அது இன்டர்நெட் எக்ஸ்புளோரராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பயர்பாக்ஸ், குரோம், சபாரி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

கேள்வி: தகவல்களைத் தேட எல்லாரும் கூகுள் தான் பயன்படுத்துகின்றனர். யாஹூ தளம் பயன்படுத்துவோர் இணைந்துள்ள தேடல் இஞ்சினைப் பயன்படுத்துகின்றனர். தகவல்களைத் தேடிப் பெற வேறு தளங்கள் இல்லையா?
-கா. அனிதா, தாம்பரம்.
பதில்: ஏன் இல்லை! நிறைய இருக்கின்றன. இவற்றையும் பயன்படுத்திப் பார்க்கலாம். நான் அறிந்த வகையில் கீழே காட்டப்பட்டுள்ளவை சிறப்பாக இயங்குகின்றன. பெயர்களும் முகவரிகளும் கீழே தரப்பட்டுள்ளன.
AltaVista - http://www.altavista.digital.com
Excite - http://www.webcrawler.com
GoTo - http://www.goto.com
HotBot - http://www.lycos.com
InfoSeek - http://www.infoseek.com
Northern Light - http://www.northernlight.com
Lycos - http://www.lycos.com
WebCrawler - http://www.webcrawler.com

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
egamurthy - coimbatore,இந்தியா
30-ஜன-201207:53:22 IST Report Abuse
egamurthy நான் எம் எஸ்௨௦௧௦ உபயோகப் படுத்துகிறேன். ஷார்ட் கட்டில் [ஆல்ட் + ஷிஃப்ட்+டி] தேதி அமைத்தால் தானாக அப்டேட் ஆகிறது இதை எப்படி சரி செய்வது
Rate this:
Share this comment
Cancel
suriyaprakash - mudhukulathur,இந்தியா
29-ஜன-201213:23:51 IST Report Abuse
suriyaprakash நான் sony vaio E series VPCEH26EN லேப்டாப் பயன்படுத்துகிறேன், அதில் நான் விண்டோஸ் 7 ஹோம் பெசிக் பயன்படுத்திகொண்டிருந்தேன். அதை windows 7 ultimate க்கு மாற்றி விட்டேன்(upgrade).என்னுடைய ஹர்ட் டிஸ்க் ஒரே hard disk(c) ஆய் உள்ளது ..என்னுடைய நண்பன் hard disk ஐ நான்கு volume (C,D,E,F)ஆய் வைத்துள்ளான். அதை எப்படி செய்தாய் என்று கேட்டதற்கு, OS போடும்போது மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என்றான் .OS போடாமல் hard disk ஐ பிரிக்கமுடியுமா ? disk partition ஐ எப்படி செய்வது தயவு செய்து என்னுடைய இ-மெயில் க்கு பதில் அனுப்பவும் இப்படிக்கு தினமலர்வாசகன் க.சூரியபிரகாஷ்
Rate this:
Share this comment
Cancel
vasantharaja - வடக்கன்குளம்tamilnadu,இந்தியா
28-ஜன-201200:44:10 IST Report Abuse
vasantharaja யாஹூ மெயிலில் ulla காண்டக்ட் அட்ரஸ்க்கு நான் அனுப்பாமலே மெயில் சென்ட் ஆகுது. இதை எப்படி தடுப்பது - பதில் தயவு செய்து மெயிலில் அனுப்பuம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X