பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜன
2012
00:00

மகான்கள் தரிசனம், புண்ணியம் என்பர். மகான்களுக்கு சுயநலம் இருக்காது. மக்கள் நலமாக இருக்க வேண்டும்; உலகம் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான், அவர்களது எண்ணம். அதனால், அவர்களை நேரில் தரிசிப்பதும் விசேஷம் தான்.
"நலமாக இரு...' என்று மகான்கள் சொன்னாலே போதும், நலமாக இருக்கலாம். அவர்களுடைய கண் பார்வை பட்டாலே போதும்; நலமாக இருக்கலாம். மகானின் பார்வையை, "நேத்ர தீட்சை' என்பர்.
கையசைத்து, "நலமாக இரு...' என்று மகான்கள் சொல்வதற்கு, "ஹஸ்த தீட்சை' என்று பெயர். மனதால் நினைத்து, "நலமாக இரு...' என்பதற்கு, "மானச தீட்சை' என்று பெயர். அதனால் தான், நாம் மகான்களை தேடிச்சென்று வணங்குகிறோம்; ஆசி பெறுகிறோம்.
ஆமையானது, மணலில் முட்டையிட்டு போய் விடும்; ஆனால், அது, தன் முட்டைகளையே மனதில் நினைத்திருப்பதால், குஞ்சு பொரித்து விடும்.
மீன் முட்டையிட்டு விட்டு, தண்ணீரில் போய் கொண்டிருந்தாலும், தன் முட்டைகளையே நினைத்துக் கொண்டிருக்கும். அடிக்கடி திரும்பித் திரும்பி, முட்டைகளைப் பார்த்தபடி இருப்பதால், முட்டைகள் குஞ்சு பொரித்து விடும்; தாய் மீனின் பின்னாடியே போகும்.
தன் குஞ்சுகளை திரும்பித் திரும்பிப் பார்க்கும் தாய் மீனின் பார்வை பட்டு, குஞ்சுகள் வளர்ந்துவிடும். இதை, "நேத்ர தீட்சை' என்பர். இப்படியாக, கண் பார்வைக்கு சில விசேஷங்கள் உண்டு; ஆனால், சிலருடைய கண்கள், அப்படி இருக்காது.
"என்ன சார்... புது கடிகாரம் வாங்கியிருக்கீங்களா? பேஷ், பேஷ்... ரொம்ப அழகா இருக்கே...' என்று சொல்வர்; தொப்பென்று கீழே விழுந்து, கடிகாரம் உடைந்து விடும்.
"என்ன மாமி... புதுப் புடவையா, எப்போ வாங்கினீங்க? ரொம்ப அழகா இருக்கே...' என்று சொல்வாள் இன்னொரு மாமி. கண் திருஷ்டி சும்மா விடுமா? கம்பியில் மாட்டி, புடவை கிழிந்து விடும். இதுவும் ஒருவித பார்வை தோஷம்தான்.
சில குழந்தைகளை, கூப்பிட்டுக் கொஞ்சுவாள், பக்கத்து வீட்டு பாட்டி... "குழந்தை ரொம்ப சமர்த்து. எவ்வளவு அழகா இருக்கு...' என்பாள். அன்று இரவே, குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்படும். அந்த பாட்டியின் கண் அப்படிப்பட்டது. கண்களால் நல்லதும் ஏற்படலாம்; கெடுதலும் ஏற்படலாம். நல்லதை நினைத்து, நல்லதை தேடிப் போக வேண்டும்.
***

ஆன்மிக வினா-விடை
பெண்கள் மட்டும்தான், கவுரி பூஜை செய்ய வேண்டுமா, ஆண்களும் செய்யலாமா?
பெண்கள் தான் செய்ய வேண்டும்.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharuman - Kolkata,இந்தியா
30-ஜன-201213:08:49 IST Report Abuse
Dharuman உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மகிமை உண்டு.ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே விளைய / வளரும் தன்மை சில தாவரங்களுக்கு உண்டு.அதே போன்றே நமது மனமும்.தனது எண்ணத்திற்கு தகுந்தவாறு சில அதிர்வலைகளை சிலர் உருவாக்கிக் கொள்கின்றனர்.நல் எண்ணங்கள் நன்மையாகவும் தீய எண்ணங்கள் தீமையுடனும் முடிவடைகின்றன. கல்வி மட்டுமல்லாது நல் எண்ணங்களையும் வளர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.சரியா வைரம் சார்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X