இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2012
00:00

பேப்பர் கப் ஒழிக!
ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.
எச்.விஜயகுமார்,சென்னை.

விநோதமான வழி... உறக்கம் வர!
நண்பர் அவசர வேலையாக, குடும்பத்துடன் வெளியூர் செல்ல நேர்ந்ததால், தன் ஐந்து வயது மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டி, என் வீட்டில் தங்க வைத்தார். அன்று இரவு எனக்கு எழுத்து வேலை இருந்தது. அப்போது, விசும்பல் சத்தம் கேட்டு, அறைக்கு சென்று பார்த்த போது, நண்பரின் மகன், தூங்காமல் சிணுங்கி கொண்டிருந்தான்.
"ஏன் தூங்கவில்லை... உடம்புக்கு என்ன பண்ணுது...' என கேட்ட போது, "எனக்கு, விரல் நகத்தால், உடலில் பட்டும் படாமலும், (வருடி) சொறிந்து விட்டால் தான் தூக்கம் வரும்...' என்றான். இவனுடைய பாட்டி ஏற்படுத்திய இப்பழக்கத்தை, தற்போதும் இவனுடைய பெற்றோர் தினமும் செய்து விடுவராம்.
"இது என்ன விநோதமாக இருக்கு?' என நொந்தபடி, அவனை எழுப்பி, சிறுநீர் போக வைத்து, தண்ணீர் குடிக்க வைத்து, அவனிடம், "கண்களை மூடி கொண்டு, மனசுக்குள், ஒன்று முதல் நூறு வரை சொல்லிட்டே இரு; தூக்கம் வரும்...' என கூறி, தூங்கச் சொன்னேன். சிறிது நேரத்தில் வந்து பார்த்த போது, அப்போதும், "தூக்கம் வரல, வந்து இப்படி செய்யுங்க...' என கூறினான்.
அவனிடம், "இப்போது நூறுல இருந்து, ஒன்று வரை தப்பில்லாமல் சொல்லிட்டே இரு; தூக்கம் வரும். அப்படியும் வரலைனா, நான் வந்து சொறிஞ்சி விடுறேன்...' என்று சொல்லி சென்றேன். சிறிது நேரத்தில், வந்து பார்த்தேன்; ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
பெற்றோரே... உங்கள் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், இதுபோன்ற விநோத பழக்க வழக்கத்தால், உங்கள் குழந்தையும் தூங்காமல், மற்றவர்களின் தூக்கத்தையும் கெடுக்கலாமா?
தயவு செய்து, இது போன்ற தவறான பழக்கங்களை மாற்றுங்கள்.
பெ.சக்திவேல், முத்தியால்பேட்டை.

தபால் ஒழுங்காகச் சேர ஒரு ஐடியா...
சென்ற வாரம் மும்பைக்கு, கவர் ஒன்றை அனுப்ப, நண்பருடன், தபால் அலுவலகத்திற்குச் சென்றிருந் தேன். அவர் வாங்கிய ஸ்டாம்ப், 10 ரூபாய்; ஆனால், அந்த கவரின் எடை, 20 ரூபாய்க்கு மேல் இருக்கும்.
"ஏன் இப்படி செய்தாய்?' என்று கேட்டதற்கு, "ஒரு மாதத்திற்கு முன், இந்த தபால் அடங்கிய கவரை அனுப்பி, இதுவரை போய் சேரவில்லை. இப்போது அனுப்பும் கவரின் எடை அதிகம்; ஸ்டாம்ப் விலை குறைவு. எனவே, "டியூ' போட்டு, சரியான ஆளிடம், சரியான நேரத்திற்கு போய் சேரும். மும்பையில் உள்ள நண்பருக்கும், தகவல் கொடுத்து விட்டேன்...' என்று கூறினார். அவர் கூறியதிலும் உண்மை உள்ளதே என்று எண்ணி, சமாதானம் அடைந்தேன்.
நம் நாட்டு தபால் துறையின் ஆபீசின் நிலைமையை எண்ணி, வருத்தப்பட்டதோடு, நண்பரின் ஐடியாவை கண்டு, மகிழ்ச்சியும் அடைந்தேன்.
வி.எஸ்.மோகன், மதுரை.
பின்குறிப்பு: ம்... எப்படி இருந்த இலாகா... இப்படி ஆயிருச்சே!
பொறுப்பாசிரியர்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பர்வின்ச்ரிச்தீன - புடுசெர்ரி,இந்தியா
02-பிப்-201212:54:55 IST Report Abuse
பர்வின்ச்ரிச்தீன நான் அரசாங்க மருத்துவமனையில் வேலை செய்து வருகிறேன். ஒரு நாள் நான் முதல் மாடிக்கு படிக்கட்டு வழியாக ஏறிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த வழியாக சென்ற அந்த பெண் ஒருவர் படிக்கட்டு பக்கம் உள்ள ஜன்னல் வழியாக எச்சில் துப்பினார். அது பாதி வெளியுலும் பாதி உள்ளேயும் விழுந்தது. அதனை கண்ட எனக்கு ஏன் இந்த மக்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று நினைத்து வருந்தினேன். மருத்துவமனையில் பலதரப்பட்ட நோயாளிகள் வருகிறார்கள். இவர்கள் இவ்வாறு செய்வது மேலும் நோய்களை பரப்பும். அது மட்டும் இல்லாமல் மருத்துவமனையின் சுத்தத்தையும் கெடுக்கும் . மக்கள் இதனை உணர்வார்களா ? அரசாங்க சொத்தை காப்பார்களா? மக்களே சிந்தியுங்கள் !
Rate this:
Share this comment
Cancel
vpselvam - Nettapakkampondicherry,இந்தியா
01-பிப்-201215:45:50 IST Report Abuse
vpselvam அரசு வேலையில் இருந்தால் , அவர்களுக்கு என்னமோ , எதையும் செய்யலாம் என்ற திமிர் வருகிறது. (ஒரு சில நல்லவர்களை தவிர)
Rate this:
Share this comment
Cancel
அஞ்சலி - சென்னை,இந்தியா
30-ஜன-201215:27:00 IST Report Abuse
அஞ்சலி IT companies ல அநியாயத்துக்கு தொழிலாளர்கள வேல மட்டும் தான் வாங்குறாங்கன்னு நினைச்சா, இப்படி மட்டமான பேப்பர் கப் ல டீ, காபி குடுத்து தொழிலாளர்களோட ஆரோக்கிய விஷயத்துலயும் விளயாடுராங்கலே. ச்ச இவங்கலாம் திருந்தவே மட்டங்களா..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X