அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2012
00:00

"நம்மூரில் நவகிரக ஸ்தலங்களுக்கு சுற்றுலா, காசி, நேபாளம் சுற்றுலான்னு விளம்பரம் செய்றாங்க... அதுக்கு போய்வரக் கூட, நம்மில் பலரிடம் பணம் இல்லை. ரஷ்யக்காரன் என்னடான்னா, நூறு கோடி ரூபாய் கட்டணம் வாங்கி, பயணியை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்புகிறான்! சுற்றினாலும் மார்கோ போலோ போல சுற்றினால் சரித்திரத்திற்காவது பயன்படும்!' என்றார் குப்பண்ணா.
"மார்கோ போலோவா? அது ஏதோ நம்மூர் பிராந்தி, விஸ்கி ஐட்டம் இல்லே...' என்றேன்.
கப்பல் பயணியான மார்கோ போலோ எப்போதும், தண்ணியிலேயே, அதாவது, கடலிலேயே இருந்ததால், இந்த, "தண்ணி' சரக்குக்கும் அவன் பெயரை வைத்திருக்கின்றனர் போலும்.
"இத்தாலிக்காரனான, போலோ தான், ஆசியா கண்டம் முழுவதையும் முதன் முதலாக பார்த்தவன். ஒவ்வொரு நாட்டிலும் தங்கி, அந்த நாட்டின் ஜனங்கள், அவர்கள் வியாபாரத் தன்மைகள் அவ்வளவையும் எழுதி வைத்திருக்கிறான்.
"நம் தமிழ்நாடு, 13ம் நூற்றாண்டில் எப்படி இருந்தது என்பதை, அவன் ஒன்று விடாமல் குறிப்பிட்டிருக்கிறான். படித்தால் ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது - சில நம்ப முடியாததாயிருந்தாலும் கூட! நம் தேசத்தை அவன், "மாபார், மாபார்' என்று குறிப்பிட்டிருக்கிறான்!' என்றார் குப்பண்ணா.
"ஒரு வேளை மலபாரை - அதாவது, கேரளாவை தான் அப்படி குறித்திருக்கிறாரோ, என்னவோ?' என்றேன்.
"இல்லையே... அதை மலபார் என்றே தனியாக குறித்திருக்கிறான். சிலோனை அவன் சைலான் என்கிறான். முத்துக்குளித்தலைப் பற்றியும், நம் முத்து வியாபாரத்தைப் பற்றியும் விவரித்திருக்கிறான். அதிலே ஒன்று, படிக்க ஆச்சரியமாயிருக்கிறது. கிடைக்கிற முத்தில், பத்தில் ஒரு பங்கு ராஜாவைச் சேருமாம்...'
"ஆச்சரியமென்ன இதில்? நிலத்திலே விளைவதில், இத்தனையில் ஒரு பங்கு ராஜாவுக்கு என்று தருவதில்லையா?' என்றேன்.
"சரிதான், ஆனால், கிடைக்கிற முத்தில்... இருபதில் ஒரு பங்கு மந்திரவாதிகளுக்குத் தந்து விடவேண்டுமாம்...'
"மந்திரவாதிகளா? அவர்கள் எங்கேயிருந்து வந்து முளைத்தனர்?' என்றேன்.
"முத்தெடுக்க முழுகுகின்றனரே, அவர்களை மீன்கள் கடித்து விடாமலிருப்பதற்காக, மீன்கள் வாயை மந்திரம் போட்டுக் கட்டி விடுவார்களாம், அந்த மந்திரவாதிகள்; அதற்காகத்தான் அந்தச் சன்மானம்.
"அதே மாதிரி, இரவு வேளையில் திருட்டுத் தனமாக யாராவது கடலில் மூழ்கி முத்தெடுத்து விடாமலிருப்பதற்காக, இரவில் மீன்கள் வாயை மந்திரக் கட்டிலிருந்து எடுத்து விடுவராம். திருட வருகிறவர்களைக் கடிப்பதற்காக' என்று விளக்கினார் குப்பண்ணா.
— நல்ல கூத்து தான் என்று நினைத்து கொண்டேன்!
***

"பந்திக்கு முந்து, படைக்கு பிந்துன்னு ஒரு பழமொழி இருக்கே... வீரத்திற்கு பெயர் பெற்ற தமிழகத்தில், இப்படி ஒரு பழமொழி இருக்க முடியுமா? புறநானூறு என்ற வீர காவியம் எழுந்த நாட்டிலா, இப்படி ஒரு பழிச்சொல்?' எனக்
கேட்டேன் குப்பண்ணாவிடம்.
"நீ சின்னப் பையன்ங்கறதாலே இப்போதான் உனக்கு இந்த உணர்வு வந்திருக்கு... எனக்கு, 30 வருஷத்துக்கு முன்னாலயே இந்த உணர்வு இருந்தது. மதுரைக்கார அன்பர் ஒருவர் இக்குழப்பத்தை தீர்த்து வைத்தார்...
"அந்த அன்பர், இப்பழமொழி வழங்கக் காரணம் என்னவென்று சிந்தித்து, பல அன்பர்களிடம் வினவி இருக்கிறார். "பந்திக்கு முந்து; படைக்கு பிந்து - அதாவது, சாப்பிட, முதல் பந்தியிலேயே உட்கார்ந்து விடு. முதல் பந்தியில் சாப்பிடுபவர்களுக்கு படைப்பதற்கு (பரிமாறுவதற்கு) பிந்து. ஏனென்றால், சோறு, கறி, காய்களை பரிமாறுவதில் ஈடுபட்டு விட்டால், பின்னர் நீ உட்கார்ந்து சாப்பிட மனம் கொள்ளாது... என்று விளக்கம் கூறி இருக்கின்றனர்.
"இது அத்தனை பொருத்தமாக அவருக்குப் படவில்லை.
"காலஞ்சென்ற பெருஞ்சொல் விளக்கனார் அ.மு.சரவண முதலியாரிடம் (அ.ச.ஞானசம்பந்தத்தின் தந்தையார்) அவரது ஐயத்தைக் கூறி விளக்கம் கேட்டிருக்கிறார்.
"அவர் கூறிய கருத்து: பந்திக்கு முந்து; படைக்கு பிந்து என்பது பழமொழியே அல்ல. அது ஒரு விடுகதை. பந்திக்கு முந்தும்; படைக்குப் பிந்தும்; அது என்ன? என்று கேட்பது அக்காலத்தில் வழக்கம்.
"அந்த விடுகதைக்கு விடை, வலது கை என்பதாகும். பந்தியில் சாப்பிட உட்காரும் போது, நம் வலது கைதான் முந்தி உணவை எடுக்கும்.
"வில்லேந்தி போருக்குச் செல்லும் போது, அதே வலது கை, எவ்வளவுக்கெவ்வளவு பின் செல்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு, அம்பானது வேகமாகச் செல்லும்.
"இந்த விடுகதையே நாளடைவில் சிதைந்து, தமிழ்நாட்டை இழிவுப்படுத்தும் பழமொழியாக உருவெடுத்து விட்டது எனக் கூறி உள்ளார்' என்றார் குப்பண்ணா.
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
காமாட்சிநாதன் - sivakasi,இந்தியா
02-பிப்-201214:06:26 IST Report Abuse
காமாட்சிநாதன் பந்திக்கு முந்து என்றால் நாம் சாப்பிடும் பொழுது நம் கைகள் முன்னால் வைத்து சாப்பிடுவோம். படைக்கு பிந்து என்றால் போரின் பொழுது நம் கைகள் வில்லின் நாண்ஐ பின் இழுத்து போர் புரிவோம். அதை தான் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
காமாட்சிநாதன் - sivakasi,இந்தியா
02-பிப்-201213:55:48 IST Report Abuse
காமாட்சிநாதன் i think this is not right meaning for that proverb. i think that the meaning was " panthiku munthu enpathu nam panthil amarnthu sapidum pothu nam kaikal munooki sella vandum. padiku pinthu enpathu por samayathil vil (athavathu bow & arrow) nan atri ambu vida nam kaikal pinoki sallum athai than panthiku munthu padaiku pinthu enparkal.......
Rate this:
Share this comment
Cancel
ஜோசப் ஆல்பர்ட் - புதுச்சேரி,இந்தியா
31-ஜன-201222:23:22 IST Report Abuse
ஜோசப் ஆல்பர்ட் “பந்திக்கு முன் தீ படைக்கு பின் தீ” என்பதே சரி. அதாவது பந்திக்கு முன் உணவு சமைப்பதற்கு தீ பயன்படுகிறது.மன்னர்கள் காலத்தில் போரில் வெற்றி அடைந்தவுடன் தீயிட்டு எதிரி நாட்டு கூடாரங்களை அழிப்பர் அதாவது படைக்கு பின் தீ. - ஆல்பர்ட் , புதுச்சேரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X