அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2012
00:00

*ஆர்.புஷ்பவல்லி, ஷெனாய் நகர்: எப்போதும் சிரித்த முகத்துடனே, சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பு கிறேன்...
வேண்டாம்... உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங் கள். சிரிக்க வேண்டிய இடங்களில் சிரியுங்கள்; மகிழ்ச்சியான நேரங்களில், சிரித்த முகத்துடன் இருங் கள்! எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்கள், "யாரிடமோ ஏமாந்து கொண்டிருக்கின்றர்...' என்றோ, எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பவன், "யாரையோ ஏமாற்றி கொண்டிருக்கிறான்...' என்றோ இப்போதெல்லாம் எண்ணுகின்றனர்!
***

** க.வெற்றிவேந்தன், கோவில்பட்டி: எளிமையைக் கண்டு ஏளனம் செய்யலாமா? அப்படி ஏளனம் செய்பவர்களை என்ன செய்யலாம்?
மிகப் பெரிய பாவமாக, கொடுஞ்செயலாக நான் கருதுவது, எளிமையை ஏளனம் செய்வதை! மனம் நொந்து, வேதனைப் பட்டு, துடித்துப் போகும்... ஏளனம் செய்பவர்களை அப்படியே விட்டு விடுங்கள்... காலம் அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும்!
***

*ஆ.நாகராஜன், உத்தமபாளையம்: பணம் இருந்தால், கொலைகாரனை கூட நிரபராதியாக்கி விடலாம் என்கின்றனரே... உங்கள் அபிப்ராயம் என்ன?
கொஞ்ச நாட்களுக்கு முன் வெளியான நீதிமன்ற தீர்ப்பு ஒன்று, உங்கள் கூற்றை மெய்ப்பிப்பது போல் உள்ளது. போலீசை, "கரெக்ட்' பண்ணி, சாட்சியங்களே இல்லாமல் செய்து இருக்கின்றனர். கற்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் நாம்!
***

*ஆர்.முருகேசன், சேத்தியாதோப்பு: அரசு பணியில் இருப்பவர்கள், "கடமை' என நினைத்து செயல்பட வேண்டுமா... "சேவை' என நினைத்து செயலாற்ற வேண்டுமா?
இரண்டையுமே நினைக்க வேண்டாம்... வாங்கற சம்பளத்துக்கு, உண்மையா உழைச்சா போதும்ங்க.
***

** பி.ராஜேஷ் பாபு, பீளமேடு: உண்மையே பேசி கஷ்டப்படுவதை விட, சமயத்திற்கு தகுந்தாற் போல, பொய் பேசி, மிக வசதியாக வாழலாமே...
வசதியாக வேண்டு மானால் வாழலாம்; ஆனால், மன நிம்மதியோடு வாழவே முடியாதே! மன நிம்மதி இல்லாமல், பொருள் இருந்து என்ன பயன்? இரவில் உறக்கம் கூட வராதே... நிம்மதியான தூக்கம் இல்லாத வாழ்வு, ஒருவனுக்கு தேவையா?
***

*பி.சம்பத், கோட்டூர்: பணக்காரர்கள் சந்தோஷமாக இருக்கின்றனரா?
ஏழையும், பணக்காரனும், இன்னும் விழி பிதுங்கி கொண்டிருக்கின்றனர். ஏழை - வட்டிக்காரனிடம் சிக்கி முழிக்கிறான். பணக்காரன் - வங்கி அதிகாரிகளிடமும், வருமான வரி அதிகாரிகளிடமும் மாட்டிக் கொண்டு, முழித்துக் கொண்டிருக்கிறான்; ஆனால், இருவருமே, "விழித்து' கொள்ளவில்லை.
***

** வி.பிரகாஷ், நாகல் நகர்: சொந்தக் காலில் நிற்க பழகிக் கொண்டிருக்கும் நம் பெண்களிடம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரித்து வருகிறதா? குறைந்து வருகிறதா?
குறைந்து வருகிறது என்றே பலரும் நினைக்கின்றனர்; சொல்கின்றனர் - இது தவறு! நம் சமூகக் கட்டமைப்பில் குழந்தைகள் பெற்றோரிடமோ, வாலிப வயதினர், பெரியவர்களிடமோ, மாணவர்கள், ஆசிரியர்களிடமோ கேள்வி கேட்கக் கூடாது என்ற அவல நிலை இருந்து வருகிறது. கேள்வி கேட்டால், எதிர்த்து பேசுகிறாள் - திமிர் வந்து விட்டது என்று பொருள் கொள்கின்றனர். சம்பாதிக்கும் பெண், நியாயமானவற்றுக்கு விட்டுக் கொடுக்கிறாள்; நியாயமற்றது குறித்து கேள்வி கேட்கும் போது, "விட்டுக் கொடுக்க மறுக்கிறாள்... சம்பாதிக் கும் திமிர்' போன்ற பட்டங்கள் கட்டப் படுகின்றன.
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜன-201214:14:43 IST Report Abuse
வெண்ணிலா பாலசுப்ரமணி பணக்காரர்கள் சந்தோஷமாக இருக்கின்றனரா? இந்த பதில் சிகரங்களை நோக்கி என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட வைரமுத்து அவர்களோட வரிகள் . இங்கு யாரும் வாழ்கையே வாழவில்லை , ஏழை மகிழ்ச்சியாய் இல்லை , பணக்காரன் நிம்மதியாய் இல்லை, வைற்றுக்கு சம்பாதிக்கும் ஏழை, வருமான வரிக்கு சம்பாதிக்கும் பணக்காரன், இருவருமே வாழ்கையை சம்பாதிக்க மறந்து விட்டனர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X