கார் விபத்தில் பலியான, பிரிட்டன் இளவரசி டயானா, நேர்த்தியாக உடை அணிவதில் மிகவும் பிரபலம். உடை மட்டுமல்லாமல், அவர் அணி யும் தோடு, வளையல், தொப்பி ஆகியவையும், பிரிட்டன் மக்களிடம், மிகவும் பிரபலமாகி விடும். இந்த விஷயத்தில், தன் மாமியாரைப் போலவே நடந்து கொள்கிறார், தற்போதைய இளவரசியும் இளவரசர் வில்லியமின், மனைவியான, கதே மிடில்டன்.
எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், இவர் அணியும் உடைகளும், அணிகலன் களும், பிரிட்டன் மக்களால், கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. சமீபத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக, தேவாலயத்துக்கு சென்றார். அவரை பார்ப்பதற்காகவும், வாழ்த்துக் கள் கூறுவதற்காகவும், ஏராளமான மக்கள் குவிந்தனர்.
ஒவ்வொருவரிடமும், பொறுமையாக கை குலுக்கி, புன்னகையுடன் வாழ்த்துக் களை ஏற்றுக் கொண்டார். அப்போது, அவர் காதுகளில் மின்னிய தோடுகள், அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன. இந்த தோடுகள், வைரம் மற்றும் விலை உயர்ந்த, அரிய மாணிக்க கற்களால் தயாரானவை. இதன் விலை, ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய். லண்டனைச் சேர்ந்த கிகி மெக்டோனாக் என்ற, பிரபலமான நகைகள் வடிவமைப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை.
மறைந்த இளவரசி டயானா, பிரபல ஹாலிவுட் நடிகைகள், ரோசமாண்ட் பைக், எமிலியா பாக்ஸ் ஆகியோர், இந்த நிறுவனத்தின் ரெகுலர் கஸ்டமர்கள். இளவரசி கதேயின் காதுகளில், டாலடித்த இந்த தோடுகளை, அவருக்கு கிறிஸ்துமஸ் பரிசாக அளித்தவர், அவரது அன்பு கணவர் வில்லியம். பொதுவாக@வ, இளவரசி கதே, பிரிட்டன் மக்களுக்கு ஸ்பெஷல். தற்போது, அவர் அணிந்திருந்த தோடு, அவர்களுக்கு ரொம்ப ஸ்பெஷலாகி விட்டது.
— ஜோல்னா பையன்.