அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2012
00:00

அன்புள்ள அக்காவுக்கு —
உங்களது அன்பு தங்கை எழுதிக் கொள்வது. எனக்கு வயது 49. கல்யாணமாகி, 31 வருடங்கள் ஆகி விட்டன. 30 வயதில் ஒரு பெண்ணும், 26 வயதில் அடுத்த பெண்ணும், 22 வயதில் மூன்றாவது பையனும் உள்ளனர். என் கணவருக்கு வயது 53. நாங்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருந்தோம். என்னவரும் ராமனாகவே வாழ்ந்து வந்தார். எங்கள் வாழ்வில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் தான், வினையே ஆரம்பம் ஆனது. இரண்டு பெண்களுக்கும் கல்யாணமாகி, மூன்று பேத்திகள் உள்ளனர். பையன் மட்டும் படித்து கொண்டிருக் கிறான். வீட்டில் நாங்கள் இருவர் மட்டுமே.
நாங்கள் எங்காவது விசேஷங்களுக்கு வெளியூர் சென்றால், அவரது ஒன்றுவிட்ட தம்பியும், அவன் மனைவியும் எங்களுடன் காரில் வருவர். இதுவே, எனக்கு எமனாக வந்து விட்டது. அவள் பார்வையிலே, என் கணவரை வளைத்து போட்டு விட்டாள். அதனால், எங்களுக்குள் சண்டை வந்து கொண்டே இருந்தது. இதனால், ஒன்றும் ஆகப் போவதில்லை என விட்டு விட்டேன்.
ஒருமுறை, என் மகளை ஊரில் கொண்டு விட சென்று விட்டு, நான்கு நாள் கழித்து வந்தேன். அப்போது, என் கணவரும், அவளும் போனில் பேசி இருக்கின்றனர். பின், என்னை எங்காவது ஊருக்கு அனுப்புவதிலேயே குறியாக இருந்தார் என் கணவர். ஆனால், நான் ஒரு சில நாட்களிலேயே இவர்கள் போனில் பேசுவதை கண்டுபிடித்@தன். பின், இரு மாதங்கள் வரை, என்ன செய்வது என தெரியாமல், அழுதழுது தவித்தேன். மூன்று வருடங்களுக்கு முன், ஒரு நாள், என் கணவரின் தம்பி கடைக்கு போன் செய்து, "தப்பு எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், எங்களுடன் குடும்பமாக வருவதை தவிர்த்து விடு...' என்று சொன்னேன்.
(இதற்கிடையில் ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் சொல்ல வேண்டும். அவள், தன் கணவன், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவளை சந்தேகப்படாமல் இருக்க, அவனை ஆன்மிகத்தில் நுழைத்து விட்டாள்.)
இதனால், என் கொழுந்தன் அவளை நம்புகிறான். என்னிடமே இதையே தான் சொன்னான். நான் சொன்னதை, அவன் சோதித்துப் பார்க்காமல், நான் பேசியதை அவளிடம் கூறி விட்டான். அவளும், அன்றே என் கணவரிடம் கூறி விட்டாள். அன்று மதியம் வரை, நானும், என் கணவரும் நன்றாகத்தான் இருந்தோம். அன்று மாலையில் இருந்து, ஆறு மாதங்களாக என்னுடன் பேசவே இல்லை. என் கொழுந்தனும், தன் அண்ணனுடன் பேசுவதை நிறுத்தி விட்டான். எங்களுடன் காரில் எங்கும் வருவதும் இல்லை. இதுவே, எனக்கு ரொம்ப நிம்மதியாக இருந்தது.
நாங்கள் எந்த விசேஷ வீட்டிற்கு (என் கணவர் வழி சொந்தம்) போக வேண்டும் என்றாலும், இரண்டு பேருமே போக வேண்டிய சூழ்நிலை. அவளால் வர முடியவில்லை என்றால், உடனே என் கணவருக்கு போன் செய்து, நான் தான் அவளை கூப்பிட்டு வர வேண்டாம் என்று, அவள் புருஷனிடம் சொல்லியதாக கூறி விடுகிறாள். இதனால், என் கணவர், என்னிடம் வந்து கோபப்படுவார். அதன்பின் ஒரு மாதமாக எங்களுக்குள் பேச்சு வார்த்தை இருக்காது. அப்பப்ப என் உடம்பு மட்டுமே தேவை. எனக்கு எதுவுமே வாங்கித் தருவதில்லை. பேசாமல் இருப்பதைத் தான், தாங்க முடியவில்லை.
முப்பத்தியோரு வருடமாக, கூட வாழ்ந்து வரும் மனைவியை புரிந்து கொள்ளாமல், மூன்று வருடமாக போனில் பேசுபவளின் சொல் கேட்டு, என்னை எந்தளவுக்கு படுத்த வேண்டுமோ, அந்த அளவுக்கு பாடாய் படுத்துகிறார். நான் என் கொழுந்தனிடம் பேசியது ஒரு முறைதான். ஆனால், என்னையும், என் கணவரையும் பிரிக்க வேண்டும் என்பதற்கு, அவள் கணவனிடம், "இப்படி சொன்னேன், அப்படி சொன்னேன்...' என்று சொல்லி சொல்லியே, என் கணவனிடம் இருந்து என்னை பிரிக்கிறாள். இது, எங்கள் மூவருக்கும் இடையில் நடக்கும் யுத்தம்.
இந்த பிரச்னைக்கு முடிவுதான் என்ன? என் சாவு தான் முடிவா? எனக்கே தெரியவில்லை. நான் சாக வேண்டும் என நினைப்பேன். இப்படி தப்பு பண்ணியவளே நன்றாக வாழும் போது, நாம் ஏன் சாக வேண்டும் என்ற எண்ணம், என்னை மாற்றி விடும். எங்காவது முதியோர் இல்லம் சென்று விடுவோமா என்றால், யாருடனோ ஓடி விட்டதாக கூறிவிடுவரோ என்ற பயம்.
நாங்கள் இருவரும், உனக்கு நான், எனக்கு நீ என ஒற்றுமையாக இருக்க வேண்டிய இந்த வயதில் இப்படி இருக்கிறோம். வாழ்க்கையில் பிரச்னை என்றால், தாங்கிக் கொள்ளலாம்; ஆனால், பிரச்னையே வாழ்க்கை என்றால், என்ன தான் செய்வது?
நீங்கள் தரும் பதில், என் கணவரை எந்த விதத்திலும் அசிங்கப்படுத்துவதாகவோ, அவமானப் படுத்துவதாகவோ இருக்கக் கூடாது. உங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள் உடன்பிறவா சகோதரி.

அன்புள்ள சகோதரிக்கு —
பெரும்பாலும், 25 வயது மணமான பெண் களுக்கு வரும் பிரச்னை, உனக்கு ஐம்பது வயதில் வந்திருக்கிறது. உன், 53 வயது கணவர் பெரும் பணக்காரர். ஊரின் பிரபல புள்ளிகளில் ஒருவர். அவரிடம் கார் இருக்கிறது. பத்து வர்ணங்களில், ஏ.டி.எம்., கார்டு வைத்திருக்கிறார். இரு மகள்களை கட்டிக் கொடுத்து விட்டார். மெனோபாஸ் தாண்டிய மனைவி. இவ்வளவு பிளஸ் பாயின்ட் உள்ள கிழவனை வளைத்துப் போடவே முயற்சிப்பர் தவறான பெண்கள்.
ஒன்றுவிட்ட தம்பியின் மனைவியுடன் தான், உன் கணவர் தவறான உறவு வைத்திருக்கிறார் என நினைக்காதே. 20 - 35 வயதுகளில் உள்ள ஏழெட்டுப் பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பார் என நம்புகிறேன். வீட்டில் நீயும், உன் கணவரும் மட்டும்தான். தனிமை குற்ற எண்ணங்களின் தொழிற்சாலை. அதுவும், நீ, மகள்கள் வீடுகளுக்கு போய் விட்டால், உன் கணவருக்கு கிடைப்பது உல்லாசத் தனிமை.
உன் கொழுந்தனை அவனது மனைவி, வலிய ஆன்மிகத்துக்குள் புகுத்தி விட்டதாக எழுதியிருக் கிறாய். மனைவியின் துர்நடத்தை கண்டு மனம் பொறுக்காமல், ஆன்மிகம் போனானோ அல்லது கணவன் ஆன்மிகத்திற்கு போனதும், சுதந்திரமாய் கள்ள உறவு புகுந்தாளோ?
உன் கணவனை, நீ பொருளாதார ரீதியாய் சார்ந்திருக்கிறாய். 31 வருடம் பயன்படுத்திய, பழைய பொருளாக உன்னை பார்க்கிறார். இன்றல்ல நேற்றல்ல, 31 வருடங்களாகவே உன் கணவர் ஒரு கலப்படமற்ற சுயநலவாதிதான். தன் சுகம் மட்டுமே அவருக்கு முக்கியம்.
நடப்பது, கணவன் - மனைவி - கள்ள உறவுப் பெண் என மூவருக்கும் இடையே நடக்கும் யுத்தம் என எழுதியிருக்கிறாய். உன் கை, கால்களை கட்டி, வாயில் பிளாஸ்திரி ஒட்டி நிராயுதபாணியாய், போர் முனையில் நிறுத்தியிருக்கின்றனர். அவர்கள் கையிலோ சகலவிதமான ஆயுதங்கள். இதென்ன நியாயமில்லாத யுத்தம்.
என் பதில், உன் கணவரை அசிங்கப்படுத்து வதாக, அவமானப்படுத்துவதாக இருக்கக் கூடா தென்று கட்டளையிட்டிருக் கிறாய். உன்னுடைய இந்த எண்ணம் தான், உன்னை படுகுழியில் தள்ளுகிறது. உன் கணவர், உன்னை வேலைக்காரியாய் பாவிக் கிறார். எந்த கள்ள உறவு பெண் பேச்சையோ கேட்டு, உன்னுடன் பல மாதங்கள் பேசாமல் இருந்திருக்கிறார். உன்னை டன் கணக்கில் அசிங்கப்படுத்துகிறார், அவமானப்படுத்துகிறார். தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் தேவை. எந்த வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு.
அடுத்து, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
சென்டிமென்ட் பார்க்காமல், கணவரின் திருவிளையாடல்களை, மகள்கள், மருமகன்கள், மகன் கவனத்துக்குக் கொண்டு போ. கலகம் பிறந்தால் வழி பிறக்கும் கண்ணம்மா. அவர்கள் உன் கணவனை, தகுந்த விதத்தில் கண்டிக்கட்டும். அடியாத மாடு பணியாது. நீ அடுத்த ஐந்து வருடங்கள் அமைதி காத்தால், கள்ள உறவு பெண்கள், உங்கள் குடும்பத்தையும், குடும்ப சொத்தையும் ஏப்பமிட்டு விடுவர். உடனடி கண்டிப்பு அவருக்கும் நல்லது, அவரது நற்பெயருக்கும் நல்லது.
உன் மகள்களை விட்டு, ஒன்றுவிட்ட தம்பி மனைவிக்கு மண்டகப்படி நடத்தச் சொல். இனி, அவள், உன் கணவனின் நிழல் பக்கம் கூட ஒதுங்கக் கூடாது. வீட்டில் வேலைக்காரி பாவனையில் இருக்காதே; மகாராணி பாவனையில் இரு. மகள்கள், உறவினர் வீடுகளுக்கு, நீ அடிக்கடி போவதை தவிர்த்து, அவர்களை, சுழற்சி முறையில் வீட்டுக்கு வரவழை. வருடத்தின், 365 நாட்களும், உன் வீடு கலகலப்பாய் இருக்கட்டும். உன் கணவனுக்கு எந்த விதத்திலும் பரிச்சயமாகும் பெண்களை, "ஸ்கிரீனிங் ' செய். சொத்துகளை பாகப் பிரிவினை செய்யச் சொல். மொத்த சொத்தும், உன் புருஷன் கையில் இருந்தால், கள்ள உறவு பெண்களின் கண்கள் உறுத்தும். கணவனின் கையில் பணப் புழக்கத்தை குறை.
விவாகரத்து என்று பூச்சாண்டி காட்டினால், நானும் தயார் எனக் கூறு. சட்டப்படி உனக்கு சேர வேண்டியவற்றை பெற்று, சுதந்திர வாழ்க்கை வாழலாம். நீரழிவு நோய் முற்றினால், காயம் ஆறாத விரலை, அறுவை சிகிச்சை செய்து அகற்று வதில்லையா? ஊர் மேயும் மாட்டை குளிப்பாட்டி, புல்லுக்கட்டு போடாதே.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (60)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gayathri - Chennai,இந்தியா
05-பிப்-201208:37:07 IST Report Abuse
Gayathri கெளசல்யா மேடம், வேலைப்பளு அதிகமா? மாயாவிற்கு உங்கள் வழிகாட்டுதல்களும் இருந்தால் வசதியாக இருக்கும் என்று தோன்றுகிறது. நேரம் இருந்தால் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Gayathri - Chennai,இந்தியா
05-பிப்-201208:27:59 IST Report Abuse
Gayathri அபிராமி,பத்மா,கணேஷ் பாராட்டிய நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். நாமும் பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் சமுதாயத்திற்கு நம்மாலான சிறு சேவையைச் செய்வதே எனது எண்ணம். &39கத்தி முனையை விட பேனா முனை வலிமையானது&39 என்பார்கள். என் எழுத்துக்கள் எத்தனையோ பேருக்குப் பயன்பட்டுள்ளது, பயன்படுகிறது, பயன்படும். பிரச்சினைகளோடு வாழும் என் சகோதர, சகோதரி, நண்ப, நண்பிகளுக்கு என்றென்றும் என் எழுத்துக்கள் ஆறுதல் அளிக்கும், என் இதயம் அவர்களுக்காக வேண்டிப் போராடும். ஒவ்வொருவரின் கசப்பான அனுபவங்கள் மூலம் மனிதர்களைக் கற்கிறேன். பச்சி, மாயா உங்கள் பத்திகளும் உருக வைத்தன. உங்கள் பிரச்சினைகள் தீர கடவுளைப் பிரார்த்திக் கொள்கிறேன். நன்றிகள்.
Rate this:
Share this comment
Cancel
Gayathri - Chennai,இந்தியா
05-பிப்-201208:17:15 IST Report Abuse
Gayathri மீனவன் வழக்கம் போல் உங்கள் கருத்துக்களும் சிந்தனைகளும் அருமை. ஆனால் நீங்கள் மாயாவைப் போராடச் சொல்லும் யோசனை அவ்வளவு தூரம் சரியாக வருமா? என்று தெரியவில்லை. என்னுடன் வேலை பார்த்த தோழியின் கதையைச் சுருக்கமாகக் கூறுகிறேன். அவர் ஓஹோவென்று அழகில்லை. ஆனால் பார்த்தவுடன் திரும்பிப் பார்க்க வைக்கும் பாந்தமான முகம், கலகலப்பாக பழகும் அவருக்கு மாயாவின் கணவர் போலவே கணவர் அமைந்தார். எதற்கெடுத்தாலும் அடி, உதை தான். திருத்தப் பல முயற்சிகள் செய்தும் சந்தர்ப்பங்கள் கொடுத்தும் திருந்தாமல் பாடாய் படுத்தினார். அந்தப் பெண் எப்பொழுதும் கன்னம் வீங்கிக் கொண்டு அதை மறைப்பதற்குச் செயற்கையாய் சிரிப்பை வரவழைத்து வாழ வேண்டும் விதியே என்று வாழ்ந்து வந்தார். தாங்க முடியாமல் கை மீறிப் போகவே அப்பா, அம்மா வீட்டில் அமர்ந்தார். பிறகு சொந்தங்களும் பந்தங்களும் சேர்ந்து அறிவுரைகள் கூறி அந்தக் கணவரிடம் இருப்பதாகக் குறிப்பிடும் நல்ல குணங்களை எடுத்துக் கூறி சேர்த்து வைத்தனர். ஒரு நாள் இல்லை, ஒவ்வொரு நிமிடமும் திக் திக்காக வாழ்ந்து ஒரு நாள் சந்தேகபுத்தி எல்லை மீறவே அந்தப் பெண்மணியைத் துடிதுடிக்கக் கொலை செய்யத் திட்டமிட்டு அந்தப் பெண் தன் மகனுடன் தப்பி வந்தது பெரும் கதை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து பெற்ற ஒருவரைக் கரம் பிடித்து சீரும் சிறப்புமாய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவது தனிக்கதை(இந்த முறை இந்தப் பெண் ஜாதகம், ஜோசியம் எதையும் பார்க்காமல் புரிந்து கொண்டவர் என்ற முறையில் மனம் விட்டுப் பேசி புரட்சித் திருமணம் போல் செய்து கொண்டாள்). இப்பொழுது இன்னொரு உலகம் உண்டு, அதிலும் நல்ல மனிதர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டு என்பதை அனுபவப்பூர்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். நீங்கள் இந்தியக் கலாச்சரப் பெண்ணாக மாயாவின் வாழ்க்கை பறிபோய் விடக் கூடாது என்ற அக்கறையில் அனைவரும் யோசிப்பது போல கூறி இருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் இந்த ஆலோசனை சாதா சண்டை, ஈகோ உள்ள மனிதர்கள் இன்னும் சில சாராருக்குப் பொருந்தலாம். மாயா மிகவும் நல்ல பெண். அவர் கூறியுள்ள விஷயங்கள் வைத்துப் பார்க்கும் பொழுது அவரது கணவர் திருந்தும் கட்டத்தில் இல்லாமல் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வைப்பது மிகவும் கடினம். திருமண பந்தம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். கணவனும் மனைவியும் பிரிந்திருக்கும் வேளையில் ஒருவருடைய நிறைகளும் தங்கள் குறைகளும் தெரியும். பிரிவுத் துயரில் ஆழ்ந்து மனைவியைத் தேடி வருவது நல்ல கணவரின் செயல். இங்கு மாயாவின் விஷயத்தில் அவரது கணவர் கண் கெட்டாத தொலைவில் ஓடி ஒளிந்திருக்கிறார். அன்பும் அன்னியோன்னியமும் இல்லை. இந்தப் பெண் இனியாவது நிம்மதியாக வாழட்டுமே என்ற நல்லெண்ணத்தில் தான் இவரது மண முறிவை ஆதரித்தேன். மற்றபடி மாயாவால் கணவரைத் திருத்த முடியும், கவுன்சிலிங் கணவரை அழைத்துக் கொண்டு போக முடியும், முக்கியமாக வாழ முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே போராடட்டும். இல்லையேல் தன் வழியைப் பார்த்துக் கொள்ளட்டும். மாயாவின் உறவினர்களும் சரி, நாமும் சரி, நம்மால் வருந்தி வேண்டி ஆலோசனைகள் சொல்ல மட்டுமே முடியும். ஒரு பிரச்சினை என்றால் ஓடிப் போய்க் காப்பாற்றும் நிலையிலில்லை. தெரிந்தே புதைகுழியில் ஆபத்தான பாதையில் விழுவது முட்டாள்தனம். இபோது சமாதனம் ஆகி வரும் மாயாவின் கணவர் நல்லவராக மாறி அன்புடன் வாழ்ந்தால் மிகவும் மகிழ்ச்சி. அப்படி இல்லாமல் ஏதேனும் கொடுமை நடந்து விட்டால்? நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறதே. மாயா, நீங்களும் நாங்கள் சொல்லும் அறிவுரைகளை எந்தெந்த இடத்திற்கு எது எது பொருந்தும் என்று சரி பார்த்து பயன்படுத்துங்கள். உங்கள் கனவருடன் வாழ்ந்தது நீங்கள், உங்களால் மட்டுமே ஒத்து வருமா? வராதா? என்ற முடிவை எடுக்க முடியும். மீனவன் அவர்கள் சொல்வது போல் நீங்கள் பேசிப் பார்த்து முடிவுக்கு வருவதானாலும் சரி. கூடிய விரைவில் நல்ல செய்தி இந்த அக்காவிற்கும் இணைய அண்ணகாக்களுக்கும் சொல்ல வருவீர்கள் என்று நம்புகிறோம். எதிலும் எச்சரிக்கையுடனும் தைரியமுடனும் செயல்படுங்கள், வெற்றி நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X