திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2012
00:00

காஞ்சி பெரியவர் ஒரு உபன்யாசத்தில் சொல்கிறார்:
மேல் நாட்டு மாது ஒருத்தி என்னிடம் வந்து, இந்தப் புனர்ஜென்மம் (மறுபிறவி) தத்துவத்திற்கு நிரூபணம் கேட்டாள். நான் அவளிடம் வாதம் ஒன்றும் செய்யவில்லை.
அப்போது மடத்து முகாமில், ஆங்கிலம் தெரிந்த பண்டிதர் ஒருவர் இருந்தார். அவரிடம், அவளை அருகில் உள்ள பிரசவ மருந்துவமனை ஒன்றுக்கு அழைத்து போய், அங்கே பிறந்துள்ள குழந்தைகளைப் பற்றிய விவரங்களைக் குறிப்பெடுத்து வரும்படி சொன் னேன்.
அவரும் அப்படியே பிரசவ மருத்துவமனைக்கு போய், விவரங்களுடன் அந்தப் பெண்மணியை அழைத்து வந்தார்.
அதன்படி ஒரு குழந்தை, "கொழு கொழு' வென்று இருந்தது; இன்னொன்று நோஞ்சானாக இருந்தது. ஒன்று அழகாக இருந்தது, இன்னொன்று அவலட்சணமாக இருந்தது. ஒன்று உசத்தியான வார்டில், சவுக்கியமாகப் பிறந்தது. இன்னொன்று, சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு நடுவே, பரம ஏழைப் பெண்ணுக்குப் பிறந்தது.
நான் அந்த மேல் நாட்டு மாதிடம் கேட்டது இதுதான்: ஜன்மாவின் கடைசியில், ஒருவர் பண்ணும் பாவ புண்ணியத்துக்கு ஏற்றபடி கஷ்டங்களையும், நன்மைகளையும் அடைகின்றனர் என்று எங்கள் மதம் சொல்கிறது. அது, நம்முடைய கண்ணுக்குத் தெரியாத விஷயம்.
ஆனால், இப்போது, பல ஜன்மங்களின் ஆரம்பத்தை பார்த்தாயல்லவா? இந்த பிரசவ மருந்துவமனையில் பிறக்கும் குழந்தைகள், ஏன் ஒன்று அழகாகவும், இன்னொன்று அவலட்சணமாகவும் பிறக்க வேண்டும்? ஏன் ஒன்று தரித்திரத்திலும், இன்னொன்று செல்வத்திலும் பிறக்க வேண்டும்?
ஜீவனுக்கு ஒரு ஜன்மா தான் உண்டு என்ற, உங்கள் மதக் கொள்கையை ஒப்புக் கொண்டால், அவை பிறக்கும் போதே, ஏன் இத்தனை பாரபட்சங்கள் இருக்கின்றன? சுவாமி கொஞ்சம் கூடக் கருணை அல்லது புத்திசாலித்தனம் இல்லாமல், "கன்னா பின்னா' என்று காரியம் செய்து கொண்டிருக்கிறார் என்று தானே ஆகிறது?
அப்படிப்பட்ட சுவாமியிடம், கருணை காட்டுவார் என்று நம்பி, எப்படி பக்தி செலுத்துவது? பூர்வ ஜன்ம பாவ புண்ணியங்களை ஒட்டியே புனர்ஜன்மா அமைகிறது என்ற கொள்கையைத் தவிர, நீ பார்த்த ஏற்றத் தாழ்வுக்கு என்ன காரணம் சொல்ல முடியும் என்று கேட்டேன்.
அந்த மாது, நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு, சந்தோஷத்தோடு போனாள்.
***

கடந்த, 1919 - ஜாலியன் வாலா பாக் படுகொலை, கிளாபத் கிளர்ச்சி, ஒத்துழையாமை இயக்கம் ஆகிய நிகழ்வுகள், நாடெங்கும் மக்களது கோபத்தை கிளறிய போது, கம்பெனி நாடகங்களும் அரசியல் மயமாகின. நாடக மேடைகளில், "கதர்க் கொடி பாரீர்... மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கதர்க் கொடி பாரீர்!' போன்ற பாடல்கள் எதிரொலித்தன.
இந்த புதிய போக்கு, காட்டுத் தீயெனப் பரவியது. கம்பெனி நாடகங்களில் கோலோச்சிய பாஸ்கரதாஸ் போன்றவர்கள் நாட்டுப்பற்றுப் பாடல்கள் பலவற்றை எழுதினர். பகத்சிங் படுகொலை, வட்டமேஜை மாநாடு உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகள், அப்பாடல்களில் இடம் பெற்றன.
இவை மேடைக்கு வெளியேயும், அரசியல் பிரசாரத்திற்கும் பயன்படுத்தப்பட்டன. புகைவண்டி நிலையங்கள், அரசியல் மேடைகள், பள்ளிக் கூடங்கள் ஆகிய இடங்களில், இப்பாடல்கள் பரவின. எழுத்தறிவற்ற மக்கள், மேலோங்கிய சமூகத்தில், கேள்வி புலன் சார்ந்த இவ்வடிவம், சக்தி வாய்ந்த அரசியல் கல்வியாக உருவானது.
விஸ்வநாததாஸ் என்ற பிரபல நாடகக் கலைஞர், தேச பக்தி பாடல்களை பாடியதற்காக கைது செய்யப்பட்டார். தேசிய உணர்வை ஒடுக்க, நாடகத்திற்கு போலீஸ் அனுமதி தேவை என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆயினும், இப்பாடல்களின் பரவலை கட்டுப் படுத்த இயலவில்லை. சில கிராமபோன் தட்டுகள் தடை செய்யப்பட்டன. சில நாடகக் கம்பெனிகள் பாதுகாப்பாக, தம் நாடகங்களில் தடை செய்யப் பட்ட பாடல்கள் இடம் பெறாது என விளம்பரம் செய்தன. ஆனால், நாடக காட்சிகளில் காந்திஜியின் ராட்டை, கதர் குல்லா, காங்கிரஸ் கொடிகளைப் பயன்படுத்தினர்.
"தியோடர் பாஸ்கரன்' ஒரு கட்டுரையில்.
***

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravana - BANGALORE,இந்தியா
31-ஜன-201216:57:22 IST Report Abuse
Saravana மனிதன் மட்டுமே மனிதனாக பிறக்க வேண்டிய அவசியம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
வாசு - சிட்னி,ஆஸ்திரேலியா
30-ஜன-201207:49:20 IST Report Abuse
வாசு முன்பு ஜீவாத்மா பரமாத்மா வுடன் சேர்த்து கட்டுபோக்காக இருந்தது. இப்போ பல பிறப்பு ஜீவன் எடுத்து , படைப்பு அதிகமாகி பரமாத்மாவுடன் ஒன்று கூடாமல் 120 கோடி ஆக இருக்கிறது. ஒன்றாய் பலவாய் என்ற சிவா புராணம் படித்து பார்க்கவும் நன்றி
Rate this:
Share this comment
Cancel
Vivek Govind - XXXX,யூ.எஸ்.ஏ
30-ஜன-201203:20:55 IST Report Abuse
Vivek Govind காஞ்சி பெரியவரின் வாதத்தை ஏற்ற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவனுக்கு பல பிறவி இருக்குமா ? அப்படி என்றால் 60 வருடத்திருக்கு முன்பு இந்திய மக்கள் தொகை 33 கோடி. இப்பொழுது 120. இது எப்படி சாத்தியம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X