கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
00:00

கேள்வி: நான் அமைத்த டாகுமெண்ட்டில் ஹெடர் மற்றும் புட்டரில் உள்ள டெக்ஸ்ட்டை எப்படி மாற்றுவது எனத் தெரியவில்லை. அமைக்கும்போது எளிதாக இருந்தது. வழி காட்டவும்.
-செ. மருதச் செல்வன், பழநி.
பதில்: மிக எளிதாக மாற்றலாம். View சென்று கிளிக் செய்து மெனுவினைத் திறக்கவும். இதில் Header and Footer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Header and Footer டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இது ஒரு டூல் பார் போலத் தோற்றமளிக்கும். இந்த டயலாக் பாக்ஸில், நீங்கள் டெக்ஸ்ட்டை மாற்ற வேண்டும் எனில், Switch பட்டனில் கிளிக் செய்திடவும். வழக்கமான டெக்ஸ்ட் ஒன்றை எப்படி மாற்றுவீர்களோ, அதே போல புட்டர் அல்லது ஹெடரில் உள்ள டெக்ஸ்ட்டையும் மாற்றவும். மாற்றத்தினை ஏற்படுத்திய பின்னர், Close என்பதில் கிளிக் செய்திடவும். இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் Print Layout வியூ பயன்படுத்திக் கொண்டிருந்தால், உங்கள் ஹெடர் மற்றும் புட்டர் திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். எனவே, அதில் டபுள் கிளிக் செய்து, தேவைப்படும் மாற்றத்தினை மேற்கொள்ளலாம்.

கேள்வி: கொரில்லா கிளாஸ் பயன்படுத்தப் பட்டுள்ளது என்ற குறிப்பு டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன்களைப் பற்றிப் படிக்கையில் காணப்படுகிறது. இந்த கிளாஸ் எதனைக் குறிக்கிறது?
-கலையரசி தர்மர், சென்னை.
பதில்: நீங்கள் சொல்வது சரிதான். கொரில்லா கிளாஸ் டேப்ளட் பிசிக்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் திரையாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மில்லி மீட்டர் தடிமன் உள்ளது. தொடுதிரை தொழில்நுட்பத்திற்கு இது மிகவும் பயன்படுகிறது. இது மிகவும் கெட்டியாக இருப்பதுடன், இதில் ஸ்கிராட்ச் எதனையும் ஏற்படுத்த முடியாது. உங்களுக்கு இன்னொரு புது செய்தி சொல்லட்டுமா! அண்மையில் நடந்து முடிந்த உலக அளவிலான நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில், கார்னிங் நிறுவனம் கொரில்லா கிளாஸ் 2 என ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தடிமன் 0.8 மிமீ மட்டுமே. தடிமன் குறைவதனால், இதனைப் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களும், டேப்ளட் பிசிக்களும் இன்னும் தடிமன் குறைவாக வடிவமைக்கப்படலாம்.

கேள்வி: வேர்ட் 2007 தொகுப்பிற்கு மாறி உள்ளேன். இதில் மாறா நிலையில் உள்ள எழுத்துருவினை மாற்ற விரும்புகிறேன். எந்த மெனுவில் சென்று மாற்றுவது எனக் குறிப்பிடவும்.
-சி.கந்த சுவாமி பால்ராஜ், திருப்பூர்.
பதில்: புதிதாக எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு ஒன்றுக்கு மாறியவுடன், அதனை நமக்கேற்ற வகையில் மாற்ற, இது போல சிறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அப்போதுதான், புதிதாய்க் குடிபுகுந்த வீடு நமக்கு இயைந்ததாக இருக்கும். இனி, உங்கள் பிரச்னைக்கு வருவோம். நீங்கள் விரும்பும், எப்போதும் பயன் படுத்தும் ஓர் எழுத்துருவினை, மாறா நிலையில் அமைக்க விரும்புகிறீர்கள், இல்லையா! புதிய வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் திறக்கவும். திரையில், இடது மேல்புறம் உள்ள மைக்ரோசாப்ட் ஆபீஸ் பட்டன் மீது கிளிக்கிடவும். புதிய டாகுமெண்ட் பிரிவு (Pane) ஒன்று கிடைக்கும். இதில் new மற்றும் அதன் பின்னர் blank document மீது கிளிக் செய்திடவும். இப்போது Font groupல் Font என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, நீங்கள் விரும்பும் எழுத்துரு மற்றும் அது எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் Default என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது, புதிய டயலாக் பாக்ஸ் ஒன்று திறக்கப்படும். அதில், நீங்கள் அமைக்கவிருக்கும் புதிய டாகுமெண்ட்கள் அனைத்தையும் இந்த தேர்வு அமலாக்கப்படும் என்றும், இதனால் நார்மல் டெம்ப்ளேட் மாற்றப் படும் எனவும் அறிவிப்பு கிடைக்கும். ஓகே கிளிக் செய்து, மூடவும். இனி நீங்கள் விரும்பிய எழுத்துருவுடனே டாகுமெண்ட் கள் அமைக்கப்படும்.

கேள்வி: பிரவுசிங் செய்திட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பயன்படுத்து கிறேன். இவற்றில் அட்ரஸ் பாரில் ஆட்டோ கம்ப்ளீட் செயல்பாட்டினை நம் விருப்பப்படி அமைக்கும் வழி விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ளதா?
-சி.ஜெயக்குமார், மதுரை.
பதில்: இணைய முகவரிகளை அமைத்து பிரவுசிங் செய்திடுகையில், அவை குக்கீஸ் பைல்களாக நம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இவை பின்னர் அடுத்த முறை இதே இணைய முகவரிகளை அமைக்கையில் தானாகவே முழுமையாக அமைக்கப்பட்டு நம் வேலையை எளிதாக்கும். இந்த வசதியினை சில நேரங்களில் தேவையற்றது எனச் சிலர் எண்ணுகின்றனர். இதனை நம் விருப்பப்படி இயக்கவும் நிறுத்தவும் வழி உள்ளது. கீழ்க்குறிப்பிட்டுள்ளபடி செயல் படவும். கண்ட்ரோல் பேனல் திறக்கவும். அதில் internet options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது பல டேப்களுடன் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் content என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு Autocomplete என்னும் பிரிவில் ண்ஞுttடிணஞ் பட்டன் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் நமக்கு எந்த செயல்பாடுகளில் ஆட்டோ கம்ப்ளீட் தேவையோ அவற்றில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: எக்ஸெல் புரோகிராமில் தயாரிக்கப் பட்ட ஒர்க்புக் ஒன்றினை, அதனைத் திறந்து பயன்படுத்துகையில் அதன் பெயரை மாற்ற இயலுமா? அதற்கான கட்டளை எந்த மெனுவில் தரப்பட்டுள்ளது?
-ந. சுந்தரராஜ், மேலூர்.
பதில்: எக்ஸெல் புரோகிராம் உள்ளாக, அதன் ஒர்க்புக் மற்றும் பிற பைல்களுக்கு பெயர்களை மாற்றக் கூடிய வசதி இல்லை. தயாரிக்கப்பட்ட ஒர்க்புக்கிற்கு புதியதாய் ஒரு பெயர் அளிக்கலாம். ஆனால் இரண்டு பெயர்களில் ஒரே ஒர்க்புக் கிடைக்கும். பெயர் மாற்றம் ஏற்படாது. எக்ஸெல் புரோகிராம் உள்ளாக பெயர் மாற்ற வேண்டும் எனில், எக்ஸெல் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட பைலைத் திறக்க வேண்டாம். File மெனு திறக்கவும். இங்கு Open Dialogue Box ஆணிது திறக்கவும். இங்கு திறக்கப்படக் கூடிய ஒர்க்புக் பைல்கள் பட்டியலிடப்படும். இதில் நீங்கள் பெயர் மாற்ற விரும்பும் ஒர்க்புக் பைல் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். இப்போது அந்த ஒர்க்புக்கிற்கான Context மெனு கிடைக்கும். ஒர்க்புக்கின் பெயர் ஹைலைட் செய்திடப்பட்டிருக்கும். இங்கு அதன் பெயரை மாற்றி டைப் செய்திடவும். பெயர் மாறிய பின்னர் என்டர் தட்டவும். இப்போது திறந்திருக்கும் Open Dialogue Boxனை எஸ்கேப் அழுத்தி மூடவும். இனி உங்கள் ஒர்க்புக் மாற்றப்பட்ட பெயரிலேயே கிடைக்கும்.

கேள்வி: பேக்மேன் விளையாட்டின் 30 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடும் வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் தன் தேடல் முகப்பு பக்கத்தில் அதே விளையாட்டினை கூகுள் என்ற தன் பெயரிலேயே அளித்தது. அதனை மீண்டும் பார்த்து விளையாட முடியுமா?
-ஆ. சிவப்பிரகாசம், கோவை.
பதில்: கம்ப்யூட்டரில் கேம்ஸ் அறிமுகமான காலத்தில் அனைவரையும் கவர்ந்த கேம்ஸ் பேக்மேன். 1980 ஆம் ஆண்டு இது அறிமுகமானது. இது சிறந்த வீடியோ கேம் ஆக வலம் வந்தது. தயாரித்து வழங்கியவர்களுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தந்தது. இதன் பின்னர், கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டு பல கேம்ஸ்கள் வெளிவந்தன என்றாலும், இதன் எளிமை இன்னும் பலரை ஈர்க்கிறது.
நீங்கள் கூறியது போல கூகுள் தன் தளத்தில், தன் பெயரிலேயே இதற்கான தளம் அமைத்து இந்த விளையாட்டினை இணையத்தில் இருந்தவாறே விளையாடத் தந்தது. கம்ப்யூட்டர் மலரில் அப்போது இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போதும் இதனைப் பெற http://www.google. com/pacman/ என்ற இணைய முகவரிக்குச் செல்லவும். இந்த தளத்தில் உள்ள Insert Coin என்ற டேப்பில் அழுத்தி நீங்கள் விளையாட்டினைத் தொடங்கலாம்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் அட்டவணை களை அமைக்கையில், சில வேளைகளில் படுக்கை வரிசைகள் சில அடுத்த பக்கத்திற்குச் செல்கின்றன. அவ்வாறு செல்லாமல், எப்போதும் இணைந்த வகையிலேயே இருக்கும் படி அமைக்க முடியுமா?
-கி. ஜமால் முகமது, உத்தமபாளையம்.
பதில்: நல்ல கேள்வி. வேர்டில் பொருள் பொதிந்த ஆவணங்களைத் தயாரிக்கையில், அட்டவணைகளையும் நாம் பயன்படுத்து கிறோம். இவை பிரிந்த நிலையில், இடையே பக்கங்களைப் பிரிக்கும் கோட்டுடன் அமைந்தால் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் சிரமமாகவே இருக்கும். இதனைத் தவிர்க்க கீழ்க்குறிப்பிட்ட வழிகளைக் கையாளவும். அட்டவணையில் அனைத்து படுக்கை வரிசைகளையும் தேர்ந்தெடுக்கவும். மெனு பாரில் Format மெனுவில் கிளிக் செய்து Paragraph என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். (வேர்ட் 2007 மற்றும் 2010ல் ரிப்பனில் ஹோம் டேப்பினை அழுத்தவும். இதில் வலது கீழ் பக்கம் உள்ள பாராகிராப் குரூப்பிற்கான சிறிய ஐகானில் கிளிக் செய்திடவும்.)
கிடைக்கும் பாராகிராப் விண்டோவில், Line and Page Breaks என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உள்ள Keep Lines Together என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Govindaswamy - Coimbatore,இந்தியா
31-ஜன-201205:12:19 IST Report Abuse
S.Govindaswamy பல இடங்களில் இங்கிலீஷ் ல் உள்ள வார்த்தைகள் படிக்க முடியாத படி உள்ளன. ஃபான்ட் மாற்றமா .இதை காப்பி செய்து வேர்டிலும் படிக்க முடிவதில்லை. முன்பே பல முறை நான் இதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன் கோவிந்தஸ்வாமி
Rate this:
Share this comment
Cancel
dinesh - erode,இந்தியா
30-ஜன-201221:08:02 IST Report Abuse
dinesh கம்ப்யூட்டர் மலரோட ஓல்ட் பேஜ் எப்புடி பார்க்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X