கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 பிப்
2012
00:00

கேள்வி: நாம் மூடிய தளத்தினை உடனடியாகத் திறந்திட, பயர்பாக்ஸ் பிரவுசரில் கண்ட்ரோல் + ஷிப்ட் + ட்டி கீகளை அழுத்துகிறோம். மற்ற பிரவுசர்களிலும் இதே கீகள் தானா? இதனை மெனு மூலமும் மேற்கொள்ள முடியுமா?
-எஸ். பிரகாஷ் இம்மானுவேல், தாம்பரம்.
பதில்: இந்த தேவை பலருக்கு ஏற்படுவது உண்டு. மற்ற டேப்களில் உள்ள தளங்களை மூடுவதற்குப் பதிலாக, நமக்கு அவசியம் தேவைப்படும் தளத்தினைச் சில வேளைகளில் மூடிவிடுவோம். இதனை மீண்டும் பெற பயர்பாக்ஸ் பிரவுசரில் நீங்கள் கூறிய Ctrl+Shift+T கீகளையே அழுத்த வேண்டும். மெனு மூலம் எனில், History, Recently Closed Tabs என்று சென்று அப்போது மூடிய தளங்களின் பட்டியலைப் பெற்று, தேவையானதில் கிளிக் செய்து பெறலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், இயங்கிக் கொண்டிருக்கும் தளத்திற்கான டேப் ஒன்றில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Reopen closed tab என்ற டேப்பில் கிளிக் செய்து பெறலாம். இதற்குப் பதிலாக Ctrl+Shift+T என்ற கீகளை அழுத்தியும் பெறலாம். அப்போது மூடிய தளம் இல்லாமல், இரண்டு, மூன்று தளங்களுக்கு முன்னர் எனில், இதே கீகளை அடுத்தடுத்து அழுத்திப் பெறலாம். குரோம் பிரவுசரிலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இயங்குவது போல இயங்கலாம். சபாரி பிரவுசரில் கண்ட்ரோல் + இஸட் (Ctrl+Z) கீகளை அழுத்தினால், சற்று முன் மூடிய தளம் இயக்கம் பெறும்.

கேள்வி: அண்மையில் செய்தித்தாள்களில் இன்டர்நெட் திருட்டு தடைச் சட்டம் குறித்து தகவல் கிடைக்கையில் SOPA எனப் பல இடங்களில் குறியிடப்பட்டன. இவை எதனைக் குறிக்கின்றன?
-எஸ். இக்னேசியஸ், காரைக்குடி.
பதில்: நல்ல கேள்வி. SOPA என்பதன் விரிவாக்கம் -- Stop Online Piracy Act. இது அமெரிக்க நாட்டில் கொண்டு வரப்பட்ட இன்டர்நெட் சார்ந்த சட்டம். இத்துடன் சேர்த்து PIPA என்ற ஒரு சட்ட வரையறையும் கொண்டு வரப்பட்டது. இதன் விரிவாக்கம் – Protect IP [Intellectual Property] Act. இவை இரண்டும் அமெரிக்கா தவிர்த்த மற்ற நாடுகளில் அமைக்கப்படும் இன்டர்நெட் தளங்கள், திருட்டுத்தனமாக திரைப்படங்கள், இசைப்பாடல்கள் மற்றும் சார்ந்தவற்றை விற்பனை செய்வதனைத் தடுப்பதாகும். அதைக் காட்டிலும், இது போன்ற பிற நாட்டில் அமைக்கப்படும் தளங்களுக்கு, அமெரிக்க நிறுவனங்கள் நிதி உதவி, விளம்பரங்கள், இணைய லிங்க்குகள் மற்றும் பிற உதவி செய்வதனைத் தடுக்கும் சட்டமாக இது பயன்படுத்தப் படும். இந்த சட்டத்தினைக் கொண்டு வர அடித்தளம் அமைத்தது அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் கூட்டமைப்பாகும். அமெரிக்க திரைப்படங்களில் 13% திருட்டு நகல்களாக, மற்ற நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள இணைய தளம் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பழக்கம் திரைப்படம் தயாரிப்பவர்களுக்கு பல நூறு கோடி டாலர் நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தான் இந்த சட்ட வரைவுகள்.

கேள்வி: பயர்பாக்ஸ் பயன்படுத்தி வந்த நான் தற்போது கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். இந்த பிரவுசரில் டவுண்லோட் செய்திடும் பைல் எங்கு பதிவாகிறது என்று தெரியவில்லை. நம் ஆப்ஷன் படி, குறிப்பிட்ட ட்ரைவில் பைல் பதியப் படும்படி எப்படி செட் செய்வது?
-ஏ. அகிலா, போரூர்.
பதில்: புரோகிராம்களை மாற்றும் போது இது போன்ற சின்ன சின்ன பிரச்னைகள் வரும். உங்களுக்கான தீர்வு இதோ. குரோம் பிரவுசரைத் திறந்து, அதன் வலது மூலையில் மேலாக இருக்கும் பைப் ரிஞ்ச் படத்தின் மீது கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் பெறப்படும் விண்டோவில் Under the Hood என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர் கீழாக Download location என்னும் இடத்திற்குச் செல்லவும். இங்கு உள்ள Browse பட்டனில் கிளிக் செய்து, நீங்கள் டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களை எங்கு பொதுவாக, சேவ் செய்திட வேண் டும் என விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த இடத்தை டவுண்லோட் செய்திடும் பைல்களுக் கேற்றபடி மாற்ற எண்ணினால், அண்டு where to save each file before downloading என்று இருக்கும் இடத்தில் உள்ள செக் பாக்ஸுக்கு எதிரில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி நீங்கள் டவுண்லோட் செய்திட கட்டளை கொடுத்தவுடன், மேலே பிரவுஸ் செய்து தேர்ந்தெடுத்த ட்ரைவ் அல்ல்து போல்டர் திறக்கப்பட்டு, சேவ் கட்டம் தோன்றும். வேறு இடத்தில் சேவ் செய்திடத் திட்டமிட்டால், நீங்கள் விரும்பும் இடத்தைத் தேர்வு செய்து சேவ் பட்டனை அழுத்தலாம்.

கேள்வி: ஒவ்வொரு முறை கம்ப்யூட்டரை பூட் செய்திடும் போதும் அதன் நேரத்தை இன்றைய நேரமாக செட் செய்திட வேண்டியுள்ளது. நான் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். எதில் கோளாறு உள்ளது என்றும், அதனை எப்படி தீர்ப்பது என்றும் கூறவும். முன் கூட்டிய நன்றி, உங்களுக்கு.
-சி.ஆர். புவனா, விருதுநகர்.
பதில்: கம்ப்யூட்டரின் மதர்போர்டில், கம்ப்யூட்டர் ஆப் செய்த பிறகும், இது போன்ற இயக்கங்களுக்கென சிறிய வட்ட வடிவிலான சீமாஸ் பேட்டரி தரப்பட்டிருக்கும். நீங்கள் செட் செய்த நேரம் மற்றும் நாள், கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன் தொடர்ந்து அப்படியே இருக்க சிறிய அளவில் மின்சக்தி தேவை. அதனை இந்த பேட்டரி தான் தருகிறது. இது செயல் இழந்து போனதால், கம்ப்யூட்டர் தொடங்கியவுடன் தொடக்க நாளைக் காட்டுகிறது. மாற்றிவிட்டால் சரியாகிவிடும். உங்கள் கம்ப்யூட்டரில் இது காலாவதியாகி, செயல் இழந்து விட்டது. இதனை மாற்றினால் சரியாகி விடும். கம்ப்யூட்டரின் சிபியுவினைக் கழற்றி இதனை மாற்றக் கூடிய டெக்னீஷியனிடம் இந்த பொறுப்பினைத் தரலாம். அல்லது நீங்களே கவனமாக மாற்றலாம்.

கேள்வி: இன்டர்நெட் சென்டர் ஒன்றில், இணைய தளத்திலிருந்து ஒரு ஸிப்டு பைல் ஒன்றை டவுண்லோட் செய்தேன். ஆனால், நான் பயன்படுத்திய கம்ப்யூட்டரில் அன்ஸிப் செய்திட வசதி இல்லை. விண்ஸிப், விண் ஆர்.ஏ.ஆர் போன்றவை இல்லை. இது போன்ற சூழ்நிலையில் என்ன செய்திட வேண்டும்?
-ஆ.கார்த்திகா, திண்டுக்கல்.
பதில்: நீங்கள் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. விண்டோஸ் சிஸ்டத்திலேயே இதற்கு வசதி உள்ளதே. நீங்கள் குறிப்பிடும் சுருக்கப்பட்ட பைல் என்ன வகை என்றும் நீங்கள் எழுதவில்லை. இருப்பினும் இதற்கான வழியைப் பார்ப்போம். அந்த மையம் இன்டர்நெட் மையம் தானே. இணையத் திலேயே இது போல ஸிப்டு பைல்களை விரித்துப் பெற வழி உள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமக்கு உதவுவதற்காக ஓர் இணைய தளம் இயங்குகிறது. http://www.wobzip.org/ என்ற முகவரியில் உள்ள இந்த தளத்திற்குச் செல்லுங்கள். அன்ஸிப் செய்திட வேண்டிய, விரித்துப் பார்க்க வேண்டிய ஸிப்டு பைலை அப்லோட் செய்திடுங்கள். இந்த தளம் அந்த ஸிப் பைலை விரித்து, என்ன என்ன பைல்கள் அதில் உள்ளன என்று காட்டும். நீங்கள் அவற்றை ஒவ்வொன்றாகவோ அல்லது மொத்தமாகவோ டவுண்லோட் செய்திடலாம். தளம் பலவகையான ஸிப் பைல்களைக் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. அவை -- 7z, ZIP, GZIP, BZIP2, TAR, RAR, CAB, ISO, ARJ, LZHCHM, Z, CPIO, RPM, DEB மற்றும் NSIS ஆகும். இதில் அப்லோட் செய்யப்படும் ஸிப் பைல் 100 எம்பிக்கு மேல் இருக்கக் கூடாது.

கேள்வி: இதுவரை இன்டர்நெட் இணைப்பு மேற்கொண்டால், அதற்கான ஐகான் டாஸ்க் பாரில், நேரம் காட்டும் இடத்தில் காணப்படும். ஆனால், இப்போது தெரியவில்லை. இதனை எப்படி சரி செய்வது? நான் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன்.
-மா. அப்துல் ரசாக், சென்னை.
பதில்: ஸ்டார்ட் (Start) ஐகான் கிளிக் செய்திடுங்கள். இதில் செட்டிங்ஸ் (Settings) பிரிவு செல்லுங்கள். அதில் கண்ட்ரோல் பேனல் (Control Panel) தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் கண்ட்ரோல் பேனல் கட்டத்தில் காட்டப்படும் ஐகான்களில், Network Connections என்று உலக உருண்டை படத்துடன் உள்ள ஐகானில் கிளிக் செய்திடுங்கள். இப்போது நீங்கள் உங்கள் சிஸ்டத்தில் செட் செய்த, இன்டர்நெட் உட்பட அனைத்து நெட்வொர்க் இணைப்புகளுக்கான ஐகான்கள் காட்டப்படும். உங்களின் இன்டர்நெட் இணைப்பு ஐகானைத் தேர்ந்தெடுங்கள். இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் General டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Show icon in notification area when connected” என்ற வரியில் உள்ள சிறிய பாக்ஸில், டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி, பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நோட்டிபிகேஷன் ஏரியாவில், ஐகான் காட்டப்படும்.
இன்டர்நெட் ஐகான் காட்டப்படாததனால், இணைய இணைப்பு கிடைக் காது என்று எண்ண வேண்டாம். அதே போல இணைய இணைப்பின் வேகம் அறிய, Free Internet Speed Test என்று ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினில் கொடுத்துக் கிடைக்கும் தளங்களின் மூலம், இணைய இணைப்பு வேகத்தை அறியலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X