சீதோபதேசம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2012
00:00

பூம் பூம் மாட்டுக்காரன் தந்ததாக அப்புசாமி கொடுத்த அந்த ஒட்டிய உறையை சீதாப்பாட்டி உடனடியாகக் கிழிக்கவில்லை. அவள் அப்போதுதான் தியானப் பயிற்சியிலிருந்து விடுபட்டிருந்ததால் பதட்டமில்லாமல் ரிலாக்ஸ்ட் மூடில் இருந்தாள். கடிதத்தை மேஜைமீது இருந்த பூ ஜாடியின் கீழே செருகிவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தாள். ஏற்கெனவே அவளுக்குத் தெரிந்திருந்த பாடம்: டோன்ட் ரியாக்ட்.

எந்தச் சம்பவமோ உணர்ச்சியோ நம்மை உடனடியாகப் பாதித்துவிட இடம் தரலாகாது. அதற்கென்று யாருடைய புடவைத் தலைப்பிலாவது நெருப்புப் பற்றிக் கொண்டு விட்டால் "டோன்ட் ரியாக்ட்' பாலிஸிபடி நிதானமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை!? சீதாப்பட்டியின் நிதானம் அப்புசாமியைப் பதற வைத்தது. "சீதே! சீதே! ஏய் சீதேக் கிழவி?' பதறினார் அப்புசாமி. "கடுதாசிடி! பூம் பூம் மாட்டுக்காரன் கடுதாசி! அவன் எதுக்குக் கடுதம் கொடுக்கணும். அவன் யாரு? கூரியர் சர்வீஸ்காரனா, தபால்காரனா, யாராவது மர்ம ஆசாமிகள் மர்மக் கடுதாசி கொடுத்து அனுப்பியிருக்காங்களா? நான் வேணாக் கிழிக்கட்டுமா? ஒரே பயமாயிருக்குடி! நீ இப்படி மரக்கட்டையாட்டமிருக்கியே. நீயும் உன் தியானமும்!'

சீதாப்பாட்டி நிதானமாக, "மை டியர் சார், மைன்ட் தை ஓன் பிஸினஸ் ப்ளீஸ்! வாஷிங் மிஷின்லே இருந்து துணிகளை பக்கெட்டிலே போட்டு பின்பக்கம் கொண்டு போல் உலர்த்துங்க. இன்னைக்கு சர்வன்ட் மெய்ட் வோன்ட் கம்' என்றாள். அப்புசாமி முறைத்தார். "இப்ப துணி உலர்த்துறதா முக்கியம்? பூம் பூம் தந்த மர்ம லெட்டர் என்ன? அந்த பூம் பூம் யார்? யார் எழுதியது? இதைப் பற்றிப் பொறுப்பாக ஒரு புருஷனாக லட்சணமாக நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். துணி உலத்தணுமாம். துணி? எக்கேடோ கெட்டு ஒழி! நான் வாடகை சைக்கிள் வாங்கிக்கொண்டு ஒரு ரவுண்ட் அடிச்சு அந்த பூம் பூம்காரனைக் கண்டுபிடிச்சு அவன் கன்னத்திலே விட்ற அறையிலே விஷயத்தைக் கக்கறான் பார்.

அப்புசாமி சைக்கிள் கிய்க்கிள் என்று சொன்னாரே தவிர, புறப்படுவது போல் சென்று வாசல் கதவை டமால் என்ற சத்தம் போட்டு சாத்திவிட்டு வீட்டுக்குள்ளேயே பீரோ பின்னால் மறைந்துகொண்டார். அந்த மர்மக் கடிதத்தைப் பிரித்துப் படித்ததும் மனைவியின் முகம் எப்படி வெளிறப்போகிறது என்பதைப் பார்த்து ரசிக்க வேண்டிக் காத்திருந்தார்.
சீதாப்பாட்டி கடைசி வரை அந்தக் கடிதத்தைப் பிரிக்கவில்லை. "மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?' என்று தில்லானா எதுவும் பாடவில்லை. ஒரு விஷயத்தை எது நினைவில் தக்க வைக்கிறதோ அதுவே அதை மறக்க வைக்கிறது. அந்த அது எது? திங்க் இட் ஓவர். வார்ட் கிருஷ்ணா கீதையில் சொன்னபடி இல்லாததற்கு இருப்பில்லை. இருப்பது இல்லாமல் போகாது. ஸோ, எவிரிதிங் ரிமைன்ஸ். நம் மனம் அதை அங்கீகரித்தால் அது இருக்கும். இல்லாவிட்டால் அது இல்லை.
குழந்தை ஒரு விளையாட்டுச் சாமானை ரொம்ப விரும்புகிறது. அதை யாராவது தொட்டால் கத்துகிறது. அதுவே அப்புறம் எங்காவது போட்டுவிட்டு மறந்துவிடுகிறது.
பெரியவர்கள் ஆக ஆக எத்தனையோ பொருள்களை மறக்கிறோம். ஆனால் அவை இன்னமும் அதனதன் இடத்தில் மறையாமல் இருக்கத்தான் இருக்கின்றன. ஸோ, நமது நினைவே ஒரு ஆப்ஜக்டை இருக்கவும் இல்லாததற்குமான காரணமாயிருக்கிறது. அந்த நினைவுக்கு ஹூ இஸ் த மாஸ்டர்? தை வோன் குட்ஸெல்ஃப். ஸோ, அந்த லட்டர் என் ஏரியாவுக்கு வரவில்லை! வராது. தென் அது எதுவா இருந்தால் என்ன? ஒய் ஷûட் ஐ பாதர்?
இப்படியெல்லாம் சீதாபாட்டி நினைத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டது அப்புசாமிக்குத் தெரியுமா என்ன?

பீரோ பின்னால் அரை மணி பதுங்கியிருந்ததெல்லாம் வீண், சீதாப்பாட்டி குளிக்கச் சென்றதும் நைஸாக பீரோ பின்னாலிருந்து வெளியேறி நண்பன் ரசகுண்டுவைப் பார்க்கச் சென்று விட்டார்.
பா.மு. கழக மீட்டிங் ஹால், சீதாப்பாட்டி சும்மா ஒரு குணுசாக கூட்டத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டாள். அவளுடைய பிரசங்கத்துக்கு எத்தனை பேர் ஆஜர் என்பதைக் கணக்கெடுத்தது அவள் மனம். காரியதரிசி அகல்யா சந்தானம் அவள் அருகே வந்து தாழ்ந்த குரலில் "ஃபுல் அட்டெண்டென்ஸ் பிரசிடெண்ட்ஜீ' என்றாள். சீதாப்பாட்டி திருப்தியான சிரிப்புடன் "நீ செகரட்டரியாக இருக்கிறாய். ஹாலை நிரப்பும் மேஜிக் உனக்குத் தெரியும். தேங்க் யூ' என்றாள்.
அன்று பிரசங்கத்துக்கு பக்தியை எடுக்கொள்வதா ஞானத்தை எடுத்துக் கொள்வதா என்று காலையிலிருந்தே அவளுக்கு ஒரு டைலமா. அந்தச் சமயத்தில்தான் அப்புசாமி குளியல் அறையிலிருந்து "ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே' பாடத் துவங்கினார்.
அப்புசாமியின் குரலோசையையே நல்ல சகுனமாக எடுத்துக் கொண்டு சிலது கத்தினால் நல்ல சகுனமாமே - தான் பேசவேண்டிய சப்ஜெக்ட் ஞானம் என்பதைத் தீர்மானித்துக் கொண்டாள்.
பா.மு.கழகத்தின் மீட்டிங் நிரம்பி வழிந்தது. வந்தவர்களை சுருக்கமாக வரவேற்றுவிட்டு சீதாப்பாட்டி சப்ஜெக்டுக்குள் நுழைந்துவிட்டாள்.

ியர்ஸ்! ஒரு க்ரைமை கண்டுபிடிக்க போலீஸ் துருவித் துருவி விசாரணை நடக்கிறது. அட் டைம்ஸ் இன்வெஸ்டிகேஷன் வருஷக் கணக்கில்கூடப் போகிறது. சில சமயம் ஃபைல்ஸ் க்ளோஸ் ஆகிவிட்ட மாதிரி ஒரு லல் பீரியட். கொஞ்ச நாள் கழித்துத் திடீரென்று ஃபைலைத் தூசு தட்டி எடுத்துக் கொண்டு ஆராய்கின்றார்கள். ஒரு சாதாரண க்ரைமை கண்டுபிடிக்கவே இத்தனை எஃபர்ட்ஸ் போட வேண்டியிருக்கிறது. ஆனால் "ஞானம் என்ற ஒன்று தேவையான எந்த எஃப்ர்ஸும் போடாமல் கிடைத்துவிட வேண்டும்' என்று மோஸ்ட் ஆஃப்த பீபிள் நினைக்கிறோம்.
ஹெளகம் பாஸிபிள்? யாரோ ஒரு உபன்யாசகர் சொன்ன மாதிரி "ஞானம் என்பது மியர் ஒரு சொடுக்குப் போடும் நேரத்தில்கூட அட்டெய்ன் பண்ணக்கூடியது' என்று சொல்கிறதும், அதற்குச் சில இன்ஸ்டன்ஸ்களைத் தங்களது இமேஜினேஷனைக் கூட்டிச் சொல்வதும் ஏனென்றால் யாரும் ஞானம் என்ற ஒன்றை அடைவது கஷ்டம் என்று எண்ணி ஒதுங்கிவிடலாகாது என்பதற்குத்தான்.
டியர்ஸ், ஒரு முக்கியமான கேள்வியை நம்ம செகரட்டரி அகல்யா சந்தானம் என்னிடம் மனம் திறந்து கேட்டாள். உங்களிலும் ரொம்பப் பேர் கேட்கணும்னு நினைத்துக் கொண்டிருக்கலாம்.

இத்தனை வயசுக்கப்புறம் அந்த ஞானம் நம போன்ற ஸீனியர் ஸிடிஸன்ஸுக்கு ஏற்படுமா? அது தேவைதானா? அது சத்துள்ளதாக ரிச்சாக இருக்குமா? அந்தக் கேள்வியைக் கேட்க நானும் கூட எக்ஸப்ஷன் அல்ல. நௌவடேஸ் வி ஸீ லாட்ஸ் அண்ட் லாட்ஸ் அஃப் ப்ரீச்சர்ஸ். ஃபிலாஸஃபர்ஸ். தங்கள் போஸ்ட் கிராஜுவேஷனை முடித்துக் கொள்கிறார்கள். சிலர் வெறும் லயன்ஸ் கிராஜுவெட். சிலர் எதுவுமில்லாமல் ஸிம்ப்ளி ஒரு பி.ஏ. ஆர் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்.
ஸம் ஹெள ஆர் அதர் தெ ஹாவ் காட் எ வெரி ஃபைன் ஆரட்டரி. அந்த ஆரடோரியல் மாஸ்ட்டரி மூலம் பெரிய மாஸையே அட்ராக்ட் செய்து விடுகிறார்கள். ஜஸ்ட் லைக் ஸம் ஹீரோஸ் இன் சினி லைன் புல் த கிரௌட். ஹாலின் கடைசி வரிசையிலிருந்தோ அல்லது எந்த மூலையிலிருந்தோ ஒரு பாட்டுச் சத்தம் திடீரென்று எழுந்தது. "கொல வெறி கொல வெறி கொல வெறி டீ'. எல்லார் காதிலும் விழும்படி உரக்க அந்தச் சத்தம் இருந்ததால் குபீரென்று ஹாலில் பெருஞ் சிரிப்பு. சீதாப்பாட்டி சட்டென்று யாரோ சூடான ஊசியால் தன்னை இழுத்துவிட்டது போல் பாட்டு வந்த திசையை நோக்கினாள்.

அப்புசாமிதான் டான்ஸ் போஸில் "கொலவெறி' பாடிக் காட்டியவர்!
சிரித்தவாறு, "அந்த ஜென்டில்மேன் பாடட்டும் பரவாயில்லை. நாம் அதைக் கொஞ்சம் மாற்றி கலைவெறி! கலைவெறிடா!' என்று அவருக்குப் பாடிக்காட்ட விரும்பினாலும் பாடப் போவதில்லை.
"சத் விஷயங்கள் நடக்கிறபோது சில அசுர சக்திகள் இப்படித் தலை காட்டுவது புராண காலத்திலிருந்தே நடந்து வருகிற சங்கதிதானே?'
"ராட்சஸாஸ், முனிவர்களது யாகங்களை டிஸ்டர்ப் பண்ணினதால்தான் ராமர் காட்டுக்கு வந்தார். ராட்சஸர்களை அழித்த பிறகு விசுவாமித்திரர் மிதிலைக்கு அவரைக் கூட்டிச் சென்றார். சீதா மேரேஜ் நடந்தது. மறுபடியும் காட்டுக்குப் போனார். ராவணன் சீதையை தூக்கிப் போனதும் அவன் கொல்லப்பட்டதும் எவரிபடி நோஸ். ஸோ... லெட் தட் ஜென்டில்மேன் கன்டின்யூ ஹிஸ் மியூஸிக். செகரட்டரி அகல்யா வில் டேக் கேர் அஃப் த ஸிசுவேஷன்.'
"லெட் மீ ப்ரோஸீட் வித் மை டாக்.. ஸாரி ஃபார் த பிரேக்...'
சீதாப்பாட்டி வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த பாட்டிலிலிருந்து வென்னீர் சிறிது குடித்துவிட்டுத் தொடர்ந்தாள். "அடைவதற்கு கஷ்டமானது, எவருக்கும் எட்டாதது, எந்த அறிவுக்கும் அப்பாற்பட்டது என்றெல்லாம் ஒரு ஸயன்ஸ் இருக்குமானால் அதை ஏன் ஸேஜஸ் இங்கே கொண்டு வந்து நம்மிடம் ஸ்டேஜ் செய்ய வேண்டும்? ஆன்மீகம், ஆத்மா போன்ற விஷயங்களை வசப்படுத்துவது கடினமென்றால் அதை ஏன் எங்கள் மூளையில் போட்டுக் குழப்புகிறீர்கள்.'
அர்ஜுனன் வெகு சரியாக கேட்டான். "க்ருஷ்ணா, வ்யாமிஸ்ரேணவ வாக்யேன புத்திம் மோகயஸீவமே.'
எதற்காக ஆத்மா கீத்மா என்றெல்லாம் சொல்லி என் மண்டையைப் போட்டுக் குழப்புகிறாய்னு கேட்கிறான். கிருஷ்ணர் சிரித்துக் கொள்கிறார். சொல்ல வேண்டியதைச் சொல்லித்தான் தீரவேண்டியுள்ளது. அதை நீ கடைப்பிடிப்பாயோ மாட்டாயோ, அது உன் இஷ்டம். "யதா இச்சஸி ததா குரு' என்று கூறி சிந்திக்கும் சுதந்திரத்தை அர்ஜுனனுக்கே விட்டுவிடுகிறார்.
நானும் இந்த வகுப்பில் எந்தக் கருத்தைச் சொன்னாலும் அது இன் நோ வே வில் இன்ஃப்ளூயன்ஸ் யூ. நீங்கள் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். இன்னொன்றும் சொல்கிறேன். இந்த ஆன்மிக லெக்சரெல்லாம் நமக்கு வேண்டாம் என்று எந்த உறுப்பினராவது என்றாவது அப்ஜெக்ட் செய்தால் அதற்கு அடுத்த நாளே இந்த ஸ்பீச்சை நிறுத்திக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன். உங்கள் விருப்பமும் கடவுளின் விருப்பமும் இருக்குமானால் அடுத்த வகுப்பில் தொடருவோம் என்று கூறி அமர்ந்தாள்.
முன் வரிசையிலிருந்த பொன்னம்மா டேவிட் எழுந்து நின்றாள்.
"விருப்பத்தில் நமது விருப்பம், கடவுள் விருப்பம் என்று இரு வகை விருப்பம் இருக்கிறதா என்ன? அப்படியானால் அனைத்தும் கடவுளின் விருப்பம் என்பதற்கு அர்த்தமில்லாமல் போகிறதே' என்றாள்.
சீதாப்பாட்டி சிரிப்புடன் பாராட்டு வழங்கினாள். "இன்ட்டலிஜென்ட் க்வெஸ்சின். வி ஷல் டிஸ்கஸ் இன் நெக்ஸ்ட் கிளாஸ்.'

- பாக்கியம் ராமசாமி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X