என்னவானது நம் மாணவ செல்வங்களுக்கு? விளக்குகிறார் மனநல மருத்துவர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2012
00:00

""வகுப்பறையில் வேறுபாடான மனநிலை, உடல் நிலை உள்ள அனைத்து மாணவர்களும்ஒரே மாதிரியாக அதிக மதிப்பெண் பெற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது தவறு. வகுப்பறையில் ஆசிரியர் - மாணவர் மோதலுக்கு இதுவே அடிப்படை காரணம்,'' என, கோவையை சேர்ந்த பிரபல மனநல மருத்துவர் மணி கூறினார்.

சென்னை பள்ளி ஆசிரியர், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. என்னவானது நம் மாணவர்களுக்கு? குறைபாடு, கற்பித்தலிலா, மாணவர்கள் கற்பதிலா? இலைமறைவு காய் மறைவாக இருந்த அனைத்தையும், கற்றுக் கொடுக்கும் நவீன தொழில் நுட்பத்திலா?

கோவையைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவர் மணி விளக்குகிறார்:
மனிதனுக்கு மனிதன், மனநலம் வேறுபடுகிறது. சிலர், டென்ஷன் ஆக இருப்பர்; வேறு சிலர் அமைதியாக இருப்பர். அதே போல் ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமான மனநலம் கொண்டவை. வகுப்புக்கு செல்ல பயப்படும் குழந்தை, கற்றலில் குறைபாடுள்ள குழந்தை, எதிர்மறை எண்ணம் கொண்ட குழந்தை, வசதி மற்றும் வறுமையான பின்னணியில் வளரும் குழந்தைகள், கவனச் சிதறல், கண் பார்வை குறைபாடுள்ள குழந்தை, நினைவு மற்றும் அறிவுத்திறன் குறைந்த குழந்தை, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த குழந்தை, வலிப்பு, ஆஸ்துமா, சர்க்கரை நோய்கள் உள்ள குழந்தை, மன தளர்ச்சி உள்ள குழந்தை, பெற்றோரை பிரிந்து வசிக்கும் குழந்தை... என, ஒரு வகுப்பில் இவ்வளவு வெவ்வேறான மனநலம், உடல் நலம், பொருளாதார பின்னணி, குடும்பச் சூழல் கொண்ட குழந்தைகள் உள்ளனர். ஆகவே, ஒருவருக்கு கற்பிப்பதை போல் அனைவருக்கும் கற்பிப்பதும், அனைவரிடமும் அதிக மதிப்பெண்களை எதிர்பார்ப்பதும் தவறு. புத்திக் கூர்மை என்பது, பாரம்பரியம் சார்ந்தது. ஆனால், இவற்றை புரிந்து கொள்ளாத ஆசிரியர்கள் சிலர், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை, திட்டுகின்றனர்; சக மாணவ, மாணவியர் முன்னிலையில், குறை கூறுகின்றனர்.

குறைவாக மதிப்பெண் பெறுவதற்கான காரணத்தை கண்டறிந்து, தீர்வு காணும் ஆசிரியர்கள் குறைவு. தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் பிரஷருக்கு கீழ்படிய, அவர்களுக்கு வேறு வழி தெரிவதில்லை. இன்றைய காலகட்டத்தில் சிறியவர், பெரியவர் என, எவருக்கும் மனதளவிலோ, உடலளவிலோ குறை கூறுவது, திட்டுவது, தண்டிப்பது பிடிப்பதில்லை. சகிப்புத் தன்மையும் குறைந்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் உரிமையை தாங்களே எடுத்துக் கொள்கின்றனர். ஆகவே, மாணவர்களை திட்டுவதும், அடிப்பதும், பிரச்னைக்கு தீர்வு தராது. மதிப்பெண் சார்ந்த நமது தேர்வு முறையிலும், மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகரின் உதவியுடன், ஒவ்வொரு பள்ளியிலும், மாதந்தோறும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்துவது, பிரச்னைகளுக்கு தீர்வு தரும்.

பொதுவாகவே 14, 15 வயது மாணவர்களுக்கு, பிரச்னைகளை பகுத்து ஆராயும் குணம் (அஞண்tணூச்ஞிt கூடடிணடுடிணஞ்) இருக்காது. இந்த வயதில், மற்றவர்களைப் பார்த்து, "காப்பி' அடிக்கும் எண்ணம் மேலோங்கும் என்பதால், சினிமா ஹீரோக்களை அப்படியே பின்பற்றுகின்றனர்.
எதார்த்த நிலைகள் குறித்து, ஆசிரியர்கள் தான் இந்த மாணவர்களுக்குப் பொறுமையாக விளக்க வேண்டும். பள்ளிகளில் சிறு வயது முதலே தியானம், யோகா, கவுன்சிலிங் பயிற்சிகள் அளிப்பதும் பயன் அளிக்கும்.
இவ்வாறு டாக்டர் மணி கூறினார்.

"வாழ்க்கைத் திறன் பயிற்சி அளிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை'
""ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு "லைப் ஸ்கில்'(வாழ்க்கைத் திறன்) பயிற்சி அளிக்க, சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. கோபம் உள்ளிட்ட உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது, முடிவு எடுக்கும் திறனை வளர்ப்பது, தகவல் தொடர்பு திறன் வளர்ப்பு, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன் உள்ளிட்ட திறன்களை வளர்க்க, பயிற்சி பெற்ற பள்ளியின், "கவுன்சிலர்' முன்னிலையில், மாதம் ஒருமுறையாவது பயிற்சி அளிக்க வேண்டும். ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இந்த திறன்கள் சென்றடைந்து விட்டால், பள்ளி ஆசிரியரை கொலை செய்யும் அளவுக்கு, பிரச்னைகள் விஸ்வரூபம் எடுப்பதை தவிர்க்கலாம்,'' என்றார் டாக்டர் மணி.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X